ரசிகர்களை ஏமாற்றி விட்டேன்.. வருத்தமாக இருக்கு..சுருதியின் குமுறல்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய சுருதி ரசிகர்களை ஏமாற்றி விட்டேன் என்று பேசியிருப்பது ரசிகர்களை குழம்ப வைத்துள்ளது.
மாடல் அழகியாக உள்ளே நுழைந்து தற்போது ரசிகர்களின் மனதை கவர்ந்த சுருதி வெளியேற்றம் அவருடைய ரசிகர்களை வருத்தமடையச் தான் செய்துள்ளதாம்.
அதனால் ரசிகர்களின் நம்பிக்கையை நான் ஏமாற்றி விட்டேன் என்று தன்னுடைய வருத்தத்தை கூறியிருக்கிறார்.

கருப்பு தேவதை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் அதிகமாக மாடல் அழகிகள் அறிமுகமாக இருந்தனர். அதில் ஒருவராக சுருதியும் இருந்தார். இவர் கருப்பு தேவதையாக வலம் வந்து கொண்டிருந்தார். இதனாலேயே இவருக்கு ரசிகர்கள் அதிகரிக்க தொடங்கி விட்டனர். பல இடங்களில் இவர் கருப்பாக இருக்கிறார் என்று இவரை புறம் தள்ளி இருந்தாலும் இந்த நிகழ்ச்சியின் மூலமாக இவருடைய கருப்பான அழகு தான் ரசிகர்களை கவர்ந்து இழுத்தது.

ரசிகர்களை பாதித்த வெளியேற்றம்
பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரைக்கும் 4 சீசன் களை முடிவடைந்து தற்போது 5வது சீசனில் ஒளிபரப்பாகி வந்தாலும் இதில் ஒவ்வொரு சீசனிலும் ஒருசில போட்டியாளர்களின் வெளியேற்றம் ரசிகர்களை ரொம்பவே பாதித்து விடுகிறது. அந்த மாதிரி ஒரு போட்டியாளராக தான் சுருதியும் இருந்து வந்தார். இவருடைய விளையாட்டு பிடித்த ரசிகர்கள் பலர் இவர் வெளியே செல்வது நிகழ்ச்சிக்கு சுவாரசியத்தை குறைத்துவிடும் என்று தங்களுடைய கருத்துகளை தெரிவித்துக் கொண்டிருந்தனர். ஆனால் இவர் வாக்குகள் குறைவாக பெற்ற காரணத்தினால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்
சுருதி மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே வருவார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு தற்போது ஏமாற்றம்தான் மிஞ்சியது. 3 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக அறிமுகமாகின்றனர். மூன்று பேருமே ஆண் போட்டியாளர்கள் தான். அதுமட்டுமல்லாமல் இந்த சீசனில் ஆரம்பத்தில் பெண் போட்டியாளர்கள் தான் அதிகமாக களமிறங்கி இருந்தனர். தற்போது பெண் போட்டியாளர்கள் தான் வெளியேறி இருக்கின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு தன்னுடைய ரசிகர்களுக்கு நன்றி கூறிய சுருதி வெளியிட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.

பீல் பண்ணும் சுருதி
அதில் தான் இந்த வீட்டில் அதிக நாட்கள் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் வாக்களித்த ரசிகர்களுக்கு நன்றியை கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் தான் அதிக நாட்கள் இருப்பேன் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து விட்டேன். அது வருத்தமாக இருக்கிறது என்று பீல் பண்ணியிருக்கிறார். இதைப் பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் உங்களுக்கு இனி வாழ்க்கையில் வெற்றிகள் அதிகமாக கிடைக்கும் என்று வாழ்த்துக்களையும், ஆதரவுகளையும் அளித்து வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications