சிறகடிக்க ஆசை: ரோகிணி போட்ட அடுத்த நாடகம்! தப்பா புரிந்து வெளியேறிய ஸ்ருதி.. முத்துவுக்கு தெரிந்த உண்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 பிப்ரவரி ஒன்றாம் தேதிக்கான எபிசோடில் ரவி செய்ததை தவறாக புரிந்து கொண்டு ஸ்ருதி வீட்டை விட்டு வெளியே போகிறார். அதுபோல ரோகிணி மனோஜை மீண்டும் ஏமாற்றுகிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ரோகிணி தூங்க போவதற்கு முன்பு காலில் பிரம்பு வைத்து அடிப்பதற்காக மனோஜ் போகிறார். அப்போது ரோகிணி வேண்டாம் எனக்கு ஒன்னும் இல்லை என்று சொல்கிறார். ஆனாலும் மனோஜ் கேட்காமல் சாமியார் சொன்ன மாதிரி செய்யணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

உடனே ரோகிணி புது ப்ளான் போட்டு கட்டிலில் அந்த பக்கமாகவும் இந்த பக்கமாகவும் உருண்டு பிறகு திடீரென்று என்னுடைய அப்பாவின் ஆவி இப்போதுதான் என்னை விட்டு போயிருக்கிறது, இப்போதான் உடம்பு எல்லாம் லேசா இருக்கிறது என்று சொல்கிறார். இதை உண்மை என்று நம்பும் மனோஜ் சாமியார் சொன்னது தான் சரி என்று சொல்கிறார்.

அடுத்ததாக ரவி ரெஸ்டாரண்டில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் அவருடைய ஓனர் நித்து, இன்னைக்கு உங்களுக்கு திருமணநாள் அப்ப கூட வேலைக்கு வந்து இருக்கீங்க. சீக்கிரமா வீட்டுக்கு கிளம்புங்க என்று சொல்கிறார். அதற்கு ரவி இந்த ஒரு ஆர்டர் முடிச்சிட்டு போறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

என்ன நடந்தாலும் உண்மையை அழிக்க முடியாது.. சிறகடிக்க ஆசை சீரியல் கோமதி பிரியா போட்ட திடீர் பதிவு
அந்த நேரத்தில் அங்கு இருப்பவர் ஒருவர் சாப்பாட்டை கொட்டி விடுகிறார். இதனைப் பார்த்த நித்து அவரை திட்டி விட்டு தண்ணி எடுப்பதற்காக வேகமாக போகிறார். அப்போது கீழே கொட்டி கிடந்த தண்ணீரில் தெரியாமல் மிதித்து கீழே விழுந்து விடுகிறார். அதனால் நித்துவிற்கு காலில் அடிபடுகிறது. அவரால் நடக்க முடியாமல் இருக்கிறது. அப்போது ரவி அவரை தூக்கி கொண்டு ஹாஸ்பிடலுக்கு போக கிளம்புகிறார்.

Siragadikka aasai serial vijay tv

அந்த நேரத்தில் அங்கு வந்த ஸ்ருதி இதை பார்த்து தவறாக புரிந்து கொண்டு கோபமாக ஆட்டோவில் ஏறி போகிறார். ரவி தடுத்து பார்த்தும் ஸ்ருதி கேட்காமல் கிளம்பி போகிறார். மறுபக்கத்தில் மீனா ரெடியாகிக் கொண்டிருக்கிறார். முத்து அவரை வர்ணித்துக் கொண்டிருக்கிறார். பிறகு மீனாவிற்கு புடவையை முத்து சரி செய்து கொண்டிருக்கிறார். அதுபோல விஜயாவிற்கு ரோகிணி மேக்கப் பண்ணி காட்டுகிறார்.

சிறகடிக்க ஆசை சீரியலில் இனி கதாநாயகி மீனா இல்லையா? இது புது டுவிஸ்ட்! அதிரடியாக மாற்றப்படும் கதை
அந்த நேரத்தில் அங்கு வந்த ரவி ஸ்ருதியை வீட்டில் தேட அவர் நினைவில்லாததை நினைத்து அப்செட் ஆகிறார். பிறகு ரூமுக்குள் ரவி டென்ஷன் ஆக இருப்பதை பார்த்த முத்துவும் மீனாவும் என்னவென்று விசாரிக்கிறார்கள். அவர்களிடம் முதலில் ரவி பொய் சொல்கிறார். பிறகு ரெஸ்டாரண்டில் நடந்த விஷயத்தை சொல்கிறார். இதனால் உன் மீது தப்பும் இல்லை இதனை பல குரல் தவறாக புரிந்து கொண்டது என்று மீனாவும் முத்துவும் ரவிக்கு சப்போர்ட் செய்கின்றனர்.

பிறகு ஸ்ருதியை தேட முத்துவும் மீனாவும் கிளம்புகிறார்கள். கடைசியாக ஹோட்டலுக்கு எல்லோரும் போகின்றனர். அங்கு எல்லோரும் ஸ்ருதியை கேட்கின்றனர். ஆனால் ஸ்ருதி டப்பிங் போய் இருப்பதாக ரவி பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ஸ்ருதியின் அம்மாவும் அப்பாவும் வருகிறார்கள். அவர்களை ரவி கவனிக்காமல் நிற்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

பிறகு ஸ்ருதியின் பெற்றோர் வந்து பேசியதும் ரவி பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ஸ்ருதி எங்கே என்று கேட்க டப்பிங் போயிருப்பதாக ரவி சொல்கிறார். இதனால் விஜயா இப்படி வர்றவங்க எல்லார்கிட்டயும் சொல்லிக்கிட்டே இருப்பியா? என்று திட்டுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+