Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறக்கடிக்க ஆசை: மனோஜை கோர்ட்டில் சிக்க வைத்த ரோகிணி! விஜயாக்கு எதிராக திரும்பிய பிரச்சனை! இது தேவைதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: (Siragadikka Aasai serial today episode) விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஜனவரி 24ஆம் தேதிக்கான எபிசோடில் ரோகிணி மற்றும் மனோஜின் விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடைபெறுகிறது. அப்போது மனோஜ் மீது மொத்த பழியையும் ரோகிணி தூக்கி போட்டு இருக்கிறார். இதனால் விஜயாக்கு புது பிரச்சனை வந்திருக்கிறது. என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி பற்றிய உண்மை தெரிந்ததும் இனி அவரோடு சேர்ந்து வாழ முடியாது என்று மனோஜ் விவாகரத்து வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதற்கான விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கோர்ட்டில் நீதிபதி ரோகிணியிடம் விசாரிக்கின்றார்.

Siragadikka Aasai serial Vijay TV

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு

அப்போது உங்களுக்கு கல்யாணம் முடிந்த உண்மையை நீங்க வீட்டில் சொல்லாமல் மறைச்சீங்களா? என்று கேட்க, அதற்கு ரோகிணி ஆமாம் ஆனால் அதை செய்ய சொன்னது என்னுடைய புருஷன் மனோஜ் தான். அவருக்கு ஏற்கனவே என்னை பத்தி எல்லா உரிமையும் தெரியும். ஆனால் வீட்டில் சொன்னால் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டாங்க என்று அவர்தான் உனக்கு கல்யாணம் முடிஞ்ச விஷயத்தை சொல்ல வேண்டாம் என்று சொன்னாரு.

அதனால்தான் நான் குடும்பத்தில் சொல்லவில்லை என்று புது குண்டை தூக்கி போடுகிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் நிற்கின்றனர். அப்போது விஜயா என் பையனுக்கு எதுவும் தெரியாது இவதான் ஏமாத்துறா.. என்று கத்த அதற்கு நீதிபதி விஜயாவை திட்டுகிறார். பிறகு நானே என் புருஷன் கிட்ட விசாரிக்கிறேன் என்று ரோகிணி கேட்க, அதற்கு நீதிபதி சரி என்று சொல்கிறார்.

ரோகிணியின் சாமர்த்தியம்

அப்போது என் பேரு கல்யாணி என்பது உங்களுக்கு தெரியும் தானே? நான் உங்ககிட்ட சொல்லிட்டேனே? என்று சொல்ல மனோஜ் ஆமாம் என்று சொல்கிறார். எனக்கு ஏற்கனவே ஒரு பையன் இருக்கான் அது கிரிஷ் தான் என்னுடைய பையன் என்று நான் உங்ககிட்ட சொல்லிட்டேனே என்று கேட்க அதற்கும் ஆமாம் என்று மனோஜ் சொல்கிறார்.

நீதிமன்றத்தில் நடந்த சம்பவம்

உடனே நீதிபதி வக்கீலிடம் என்ன உங்க கிளையன்ட் இப்படி ஏமாற்றி இருக்காரா? அவருக்கு ஏற்கனவே எல்லாமே தெரியுமா என்று கேட்க அதற்கு மனோஜ் அது வந்து ஒரு பேய்.. ரோகிணி, கல்யாணி என்று குழப்பிக் கொண்டிருக்கிறார். இதை சாதகமாக பயன்படுத்திய ரோகிணி தான் எல்லா உண்மையும் ஏற்கனவே மனோஜ் கிட்ட சொல்லிட்டேன் ஆனா அவங்க அம்மாவுக்கு பயந்து தான் அவன் இப்போ விவாகரத்து செய்ய வந்திருக்கிறான்...

அவங்க அம்மா நான் பணக்கார பொண்ணு இல்லன்னு ரொம்ப கொடுமை படுத்துறாங்க இப்போ என் புருஷனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்க போறாங்க என்று விஜயாவுக்கு எதிராக திருப்பி விடுகிறார். இதனால் விஜயா கோபமாக கத்த கடைசியில் அவர் மயக்கம் போட்டு விழுந்து விடுகிறார். உடனே நீதிபதி வழக்கை தள்ளி வைக்கிறார். அதைத்தொடர்ந்து வீட்டிற்கு வந்த விஜயா மனோஜை போட்டு அடிக்க போகிறார்.

உனக்கு ஏற்கனவே உண்மை தெரியுமா என்று கேட்க எனக்கு எதுவும் தெரியாது ஆனால் அவ நாடகம் போடுறா, இப்பவும் பொய் சொல்றா அம்மா என்று மனோஜ் சொல்லிக் கொண்டிருக்க, உடனே நீ அவளுக்கு போன் பண்ணு அவ வாயிலிருந்து உண்மையை வரவை என்று சொல்கின்றனர். போனை ஸ்பீக்கரில் போட்டு மனோஜ் ரோகிணிக்கு கால் செய்கிறார்.

அதிர்ச்சியில் அண்ணாமலை குடும்பம்

அப்போது ரோகிணி நான் தான் உன் கிட்ட உண்மையை சொல்லிட்டேனே.. நீ தானே உங்க வீட்ல சொல்ல வேண்டாம் என்று சொன்ன என கோர்ட்டில் சொன்ன மாதிரியே மீண்டும் நாடகம் போட, அதனால் கோபமான விஜயா கடுப்பாகி திட்டி ரோகிணியை அடிப்பதற்கு பதிலாக போனில் செருப்பை கொண்டு அடிக்கிறார். பிறகு விஜயா பேசியதை எல்லாம் ரோகிணி ரெக்கார்ட் பண்ணி வைத்திருக்கிறார்.

அப்போது விஜயா கோபப்பட்டு திட்டியதற்கு வீட்டில் எல்லோரும் அவரை திட்டிக் கொண்டிருக்கின்றனர். நீ கோபத்தை குறைச்சா தான் மனோஜால் நிம்மதியாக வாழ முடியும். நீ பேசியதை எல்லாம் வைத்து அந்த பொண்ணு இனி கோர்ட்டில் உனக்கு எதிரா கதையை திருப்பி விடுவான் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

மறுபக்கத்தில் ரோகிணியின் அம்மா வீட்டில் சமைக்க பொருட்கள் எதுவும் இல்ல, வாங்க காசும் இல்லை என்று சொல்லிக் கொண்டு இருக்க ரோகிணி தனக்கு பார்லர் வேலை இல்லை என்பதால் சம்பளம் வராது என்ன பண்ண என்று யோசிக்கிறார். சிந்தாமணிக்கு போன் செய்து பணம் கேட்கிறார். அதற்கு தன்னிடம் ஒரு இரண்டு பவுன் வளையல் இருப்பதாகவும் அதை வைத்து எனக்கு ஒரு லட்சம் கொடுங்க என்று ரோகினி கேட்கிறார்.

Pandian Stores: பாண்டியன் வீட்டுக்கு போய் சக்திவேல் செய்த பிரச்சனை, சிண்டு முடிந்த சுகன்யா! அதிர்ச்சியில் கோமதி
பிறகு கொஞ்சம் யோசித்து விட்டு சிந்தாமணி தனக்கு தெரிந்த பைனான்ஸ இருக்கிறார் அவரிடம் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு தன்னிடம் வேலை பார்க்கும் ஒருவரிடம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து நீதான் அந்த பைனான்சியர் என சொல்லு என அனுப்பி வைக்கிறார். அப்போது சிந்தாமணியின் பொண்ணு வருகிறார். அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது தனக்கு இன்னைக்கு ஒரு போட்டி இருக்கு நான் அங்கே போய் ஆகணும் என்று சொல்லிவிட்டு சிந்தாமணி கிளம்புகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+