புது படத்தில் ஹீரோவாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்.. உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்! குவியும் வாழ்த்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் எல்லோரிடையே திட்டுகளையும் வாங்கிக் கொண்டிருக்கும் மனோஜ்க்கு தான் எப்போது புது படத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவி சீரியல்களில் இருந்து சினிமாவுக்கு ஹீரோவாக வருவது இப்போது புதுசான விஷயம் இல்லை. சந்தானம், சிவகார்த்திகேயன், யோகி பாபு போன்றவர்கள் அந்த பாதையை ஓப்பன் பண்ணியதால்தான் இன்று சின்னத்திரை நடிகர்களுக்கும் பெரிய திரை கனவு ரொம்ப நெருக்கமாகி இருக்கிறது. அந்த லிஸ்ட்ல இப்போது சேர போகும் புதிய பெயர் - சிறகடிக்க ஆசை மனோஜ்... அதாவது நடிகர் ஸ்ரீதேவா.

சீரியலில் மனோஜ்... ரியலாக ஹீரோ
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி TRP-யில் நல்ல ரேஞ்சில் ஓடிக்கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலை பார்ப்பவர்களுக்கு மனோஜ் கதாபாத்திரம் பற்றி தனியாக சொல்லவே வேண்டாம். கொஞ்சம் லூசு... கொஞ்சம் சீரியஸ்... சில நேரம் கோபம்... சில நேரம் பாசம் - இப்படியே மாறிக்கொண்டே இருக்கும் அந்த ரோலில் ஸ்ரீதேவா மிகவும் இயல்பாக நடித்ததால்தான் அவருக்கு நல்ல ரசிகர்கள் கிடைத்தார்கள்.
இப்போது அந்த சீரியல் மனோஜ், சினிமாவில் ஹீரோவாக களமிறங்கியிருக்கிறார். அவர் நடிக்கும் படத்துக்கு "OTP" என்று பெயர் வைத்துள்ளனர். போஸ்டர் வெளியானதுமே ரசிகர்கள் "மனோஜ் ஹீரோவா?" என்று ஆச்சரியமாக பகிர்ந்து வருகின்றனர். இந்த வருடமே படம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீதேவா இதற்கு முன்பு ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருந்தார். அதிலும் சுப்பன் என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை என்பதால் இவருடைய நடிப்பும் பெரிதாக வெளியே தெரியாமல் இருந்தது. இப்போது OTP திரைப்படத்தின் மூலமாக இவருக்கென ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
ஸ்ரீதேவா யார்
பலருக்கு அவர் புதுசாக தோன்றினாலும், சின்னத்திரையில் பல வருடங்களாக முயற்சி செய்து வந்தவர் தான். ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர். நடிப்போடு சேர்த்து மாடலிங்கிலும் ஈடுபட்ட அனுபவம். உடல்நலன் மற்றும் உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் நேர்மறை, எதிர்மறை என எந்த கதாபாத்திரத்தையும் தயங்காமல் ஏற்கும் நடிகர் தான். சிறகடிக்க ஆசை தொடரே அவருக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த தொடருக்குப் பிறகுதான் மக்கள் முகம் பார்த்து பெயர் சொல்ல ஆரம்பித்தார்கள்.

சின்னத்திரை பிரபலத்திலிருந்து பெரிய திரை வாய்ப்பு
இப்போது OTT, சீரியல், சினிமா எல்லாவற்றிற்கும் இடையிலான எல்லை குறைந்து வருகிறது. நல்ல நடிப்பு இருந்தால் நேரடியாக ஹீரோ வாய்ப்பு கிடைக்கிறது. அப்படித்தான் ஸ்ரீதேவாவுக்கும் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. நீண்ட நாட்களாக பெரிய திரையில் தன்னை நிரூபிக்க வேண்டும் என்பது அவருடைய ஆசை. அந்த ஆசை தான் இப்போது OTP படம் மூலம் நனவாக இருக்கிறது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு
சோசியல் மீடியாவில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. சீரியலில் பார்த்த இயல்பான நடிப்பையே சினிமாவிலும் காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஒரு முக்கியமான கட்டம்
சின்னத்திரையில் நல்ல பெயர் பெற்ற நேரத்தில் ஹீரோவாக அறிமுகமாகுவது மிகப் பெரிய விஷயம். இந்த படம் வெற்றி பெற்றால், ஸ்ரீதேவா முழுநேர சினிமா ஹீரோவாக மாறும் வாய்ப்பு இருப்பதாக திரையுலகில் பேசப்படுகிறது.
சின்னத்திரையில் மனோஜ் ஆக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர், இப்போது ஹீரோவாக பெரிய திரைக்கு வருகிறார். இந்த புதிய பயணம் அவரை எவ்வளவு உயரத்திற்கு கொண்டு செல்லும் என்பது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் விஷயமாக உள்ளது.
-
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
குலதெய்வ கோவிலில் கணவருடன் மகிழ்ச்சியை பகிர்ந்த மணிமேகலை.. அடடா சூப்பர்! குவியும் வாழ்த்துக்கள் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள்












Click it and Unblock the Notifications