எட்டு வருஷத்துக்கு முன்னாடி லவ்வுல நம்பிக்கை வருவதற்குக் காரணமே இதுதான்...உண்மையை உடைத்த சிவாங்கி
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமான சிவாங்கி தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு தான் பலரையும் யோசிக்க வைத்துள்ளது.
காதலைப் பற்றி வெளிப்படையாக அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட போஸ்டை பார்த்த சிவாங்கி ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

ஆரம்பத்தில் தெரியாத திறமை
விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்கள் மூலமாக பல்வேறு போட்டியாளர்களின் வாழ்க்கையில் முன்னேற்றமும், எதிர்பாராத வளர்ச்சியும் ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில் சிவாங்கியும் ஒருவர். சிவாங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய பாட்டு திறமையை அனைவருக்கும் வெளிக்காட்டி இருந்தார். இவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இவருடைய திறமை பலருக்கும் தெரியாமல் போய் விட்டாலும், இவர் நாட்கள் செல்லச் செல்ல இந்த அளவிற்கு வளர்ச்சி அடைவார் என்று அப்போது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இப்ப ரொம்ப பிஸி தான்
விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் இவருக்கு கிடைக்காத வாய்ப்பு மற்றொரு நிகழ்ச்சியின் மூலமாக இவருக்கு கிடைத்திருந்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தன்னுடைய பாட்டு திறமையும், குறும்பு தனத்தையும் ரசிக்கும் ரசிகர்கள் இவருக்கு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டு இருந்தனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தற்போது பிசியாக இருக்கிறார். அதனால் தான் தற்போதைய மூன்றாவது சீசனில் கூட இந்த வாரம் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. இந்த நிகழ்ச்சியை விடவும் இவர் திரைப்படங்களில் அதிகமாக பிஸியாக இருப்பதால் இவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருந்துள்ளார்.

ஒருவேளை அப்படி இருக்குமோ
இப்போது ஒரு பாடகியாகவும் நடிகையாகவும் வெள்ளித்திரையில் கலக்கிக் கொண்டிருக்கும் சிவாங்கி இன்ஸ்டாகிராமில் மிகவும் பீல் பண்ணி ரசித்தபடி ஒரு ஸ்டோரி போஸ்ட் செய்திருக்கிறார். அதைப் பார்த்ததும் ரசிகர்கள் பலருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. சிவாங்கி கமிட்டாகி விட்டாரா என்று பலரும் கேள்விகள் எழுப்பி வருகிறார்கள். ஓம் சாந்தி ஓசானா எனும் திரைப்படம் 2014 இல் வெளியானது. இது ஒரு மலையாள திரைப்படம் இந்த திரைப்படத்தில் நஸ்ரியா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் சிவாங்கிக்கு ஃபேவரைட் திரைப்படமாம்.

இது தான் காரணமாம்
ஓம் சாந்தி ஓசானா எனும் திரைப்படம் வெளியாகி தற்போது எட்டு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அந்த திரைப்படத்தை பிரமோட் செய்யும் விதமாக தான் தற்போது சிவாங்கி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த வீடியோவிற்கு கேப்ஷன் கொடுத்திருக்கிறார். அதில் இந்த திரைப்படம் வந்து எட்டு வருடங்கள் ஆகிறது. இந்த திரைப்படத்தை பார்த்து தான் எனக்கு உண்மையான காதல் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது என்று கூறியிருக்கிறார். இதை பார்த்ததும் ரசிகர்கள் இவ்வளவுதானா?? நாங்க கூட வேற என்னமோ என்று நினைத்து விட்டோம் என்று கலாய்த்து வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications