எதையும் விட்டுவிடாமல் விளாசி எடுக்கும் சிவாங்கி...வைரலாக்கும் ரசிகர்கள்
சென்னை: வாரத்துக்கு பத்து படங்களின் அப்டேட் வருதுன்னா... அதுல குறைஞ்சது ஐந்து படத்திலாவது சிவாங்கி ஆக்டர் இல்லையென்றால் சிங்கர் என்று ஏதாவது ஒரு விதத்தில பெர்பாமன்ஸ் பண்ணியிருக்காங்க.. அந்த அளவுக்கு சிவாங்கியோட செட்யூல் செம பிசி ல போயிட்டு இருக்கு.
Recommended Video
படங்கள்,டிவி ஷோ என பிசியாக இருக்கும் சிவாங்கி தன்னோட முக்கியமான ப்ரபொஷனலா பிளேபேக் சிங்கிங்கை தான் நினைக்கிறாராம். ரீசன்ட் ஆக தன்னுடைய இன்ஸ்டா பேஜ்ஜில் சிவாங்கி பாடி வெளிவர இருக்கும் கூகுள் கட்டப்பா மூவியோட டைட்டில் சாங்கை ஷேர் பண்ணி இருக்காங்க.அதை சிவாங்கியின் பாலோயர்கள் சமூக வலைதளங்களில் வேகமாக டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ரீமேக் திரைப்படம்
மலையாளத்தில் செம ஹிட்டடித்த 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்' திரைப்படத்தை, தமிழில் 'கூகுள் குட்டப்பா' என்று ரீமேக் செய்து வருகிறார்கள். பிரபல இயக்குனர் கே. எஸ் ரவிக்குமார் தயாரிக்கிற இந்த படத்தை அவரோட உதவி இயக்குனர்களான சபரி மற்றும் சரவணன் இயக்கி வருகின்றனர். பிக்பாஸ் புகழ் தர்ஷன்- லோஸ்லியா இணைந்து நடிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் டைட்டில் சாங்கை 'குக் வித் கோமாளி' புகழ் சிவாங்கி 'என்ஜாய்.. என்சாமி..' புகழ் அறிவுடன் இணைந்து பாடியுள்ளார்.

குறும்பான ஆட்டிட்யூட்
தன்னுடைய பாடும் திறமை மூலமே விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியால் சிவாங்கி சின்னத் திரைக்குள் நுழைந்தார். ஆனால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய அளவில் எந்தவித பெரிய வாய்ப்பும் இல்லாமல் இருந்த சிவாங்கி அந்த கேப் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தன் குறும்பான ஆட்டிட்யூட் மூலம் தமிழ் ரசிகர்கள் அனைவரும் தங்கள் வீட்டுப் பெண் போல் நினைக்கும் அளவிற்கு ரீச் ஆனார்.

முழு நேர பாடகி
அப்படியே ரியாலிட்டி ஷோ பக்கம் பொழுதுபோக்கிட்டு இருந்த சிவாங்கி, திரும்பவும் முழுநேர பாடகியாக நல்ல நல்ல பாடல்களை தன் அருமையான குரலில் தற்போது கொடுத்து வருகிறார்.அதிகமாக மெலடி ரக பாடல்களை பாடி வந்த சிவாங்கி தற்பொழுது ராப் டைப் பாடலாக பாடியுள்ள இந்தப் பாடல் அவருடைய ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவங்களை கொடுத்துள்ளதாம்.

ரசிகர்களின் அறிவுரை
மனதை வருடும் குரலில் சிவாங்கி பாடலை கேட்டு வந்த ரசிகர்கள் ஆடவைக்கும் ராப் டைப் பாடல்களை அவர் குரலில் கேட்டு அவரை பாராட்டி வருகின்றனர்.சிவாங்கியின் நெருங்கிய நண்பராக கருதப்பட்ட அஸ்வின் தன் வாயைக் கொடுத்து ஜெட் வேகத்தில் போய்க் கொண்டிருந்த தன்னுடைய எதிர்காலத்திற்கு அவரே ஸ்பீட் பிரேக் போட்டது போல்,சிவாங்கியும் ஏதேனும் உளறிக் கொட்டாமல் இதே வேகத்தில் சென்றால் அவருக்கு இருக்கும் திறமைக்கு சின்னத்திரை மட்டுமல்ல வெள்ளித்திரையிலும் மிகப்பெரிய உயரத்தை அடைய முடியுமென்று அவருடைய அபிமானிகள் அவருக்கு அறிவுரையையும் வாழ்த்துக்களையும் வழங்கி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications