Sun TV: டிஆர்பியில் டாப் சீரியலை முடிவுக்கு கொண்டு வரும் சன் டிவி! காரணம் இதுதானா? ரசிகர்கள் வருத்தம்!
சென்னை: சன் டிவியில் டிஆர்பியில் நல்ல ஒரு இடத்தை பிடித்துக் கொண்டு வந்த பிரபல சீரியல் திடீரென முடிவுக்கு கொண்டு வர இருக்கிறதாம். அந்த சீரியல் ஆயிரம் எபிசோடுகளை தாண்டிவிட்ட நிலையில் இப்போது இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
நெடுந்தொடருக்கு பெயர் போன சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அதிகமான ரசிகர்களை கவர்ந்து விடும். அதிலும் கிராமப்புறத்து ரசிகர்களுக்கு சன் டிவி சீரியல்கள் தான் பேவரிட். சன் டிவிக்கு போட்டியாக எத்தனையோ சேனல்கள் புதியது புதியதாக வந்தாலும் நாங்கள் இன்னும் சன் டிவி ரசிகர்கள் என்று கெத்து காட்டி வருகிறார்கள். அதனாலயே டிஆர்பியில் சன் டிவி சீரியல் டாப் 5 இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறது.

அதுபோல சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடிப்பதற்காகவும் நடிகைகள் போட்டி போடுகின்றனர்க்ஷ காரணம் இந்த சீரியலில் கமிட்டாகி விட்டால் பல வருடங்களுக்கு தங்களுக்கு வருமானம் வந்துவிடும் என்பது ஒரு கணக்கு தான். மற்ற சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அதிக எபிசோடுகளை தாண்டுவதில்லை சில நேரங்களில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் கூட வந்த வேகத்திலேயே முடிந்து போகையில் இருக்கிறது
இந்த நிலையில் சமீபத்தில் ஆயிரம் எபிசோடுகளை தாண்டிய சன் டிவி சீரியல் ஒன்று அதனை கேக் வெட்டி கொண்டாடி இருந்தனர். இந்த நிலையில் அந்த சீரியல் இப்போது விரைவில் முடிவுக்கு வர இருக்கிறதாம். இது அந்த சீரியலின் ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும். அந்த சீரியல் வேறு எதுவும் இல்லை ஆனந்த ராகம் சீரியல் தான். இந்த சீரியல் கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
ஆனந்த ராகம் சீரியலில் நடிகரும் தொகுப்பாளருமான அழகப்பன் தான் ஹீரோவாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக அனுஷா ஹெட்டே என்பவர் நடித்து வருகிறார். இந்த சீரியல் ஆரம்பமான சமயத்தில் ஆறரை மணிக்கு ஒளிபரப்பானது. அப்போது டிஆர்பியில் டாப் 3 இடங்களுக்குள் இடம் பிடித்துக் கொண்டிருந்தது. ஆனால் கடந்த வருஷம் இந்த சீரியல் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டது. மாலையில் இருந்து மதிய நேரத்திற்கு மாற்றப்பட்டது.
அதனால் டிஆர்பியும் குறைய தொடங்கிவிட்டது. ஆனந்தராகம் சீரியலில் கதைப்படி படித்த ஒரு ஏழை வீட்டு பொண்ணு தன்னுடைய சூழ்நிலை காரணமாக படிக்காத பணக்கார வீட்டு பையனை திருமணம் செய்து கொண்டார். அதற்கு பிறகு அந்த பெண்ணுடைய வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகள், சந்தோஷங்களை பற்றி தான் இந்த கதை சொல்லிக் கொண்டிருந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியலில் கதாநாயகி டபுள் ஆக்ஷனில் நடிக்க வைத்தார்கள். அதுபோல கதைகளுக்கும் சில மாற்றம் கொண்டுவரப்பட்டது. அது பெரிய அளவில் கதையின் ஆர்வத்தை குறைத்து இருக்கிறது. அதனால் டிஆர்பியிலும் இந்த சீரியலுக்கு நல்ல இடம் கிடைக்கவில்லை. இதனால் இந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வர இருக்கிறார்கள்.
ஆனந்த ராகம் சீரியல் கிளைமாக்ஸ் ஷூட்டிங் இப்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஆயிரம் எபிசோட்களை கடந்து ஓடிய இந்த சீரியலை பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ பார்த்து பழகிவிட்ட ரசிகர்களுக்கு இந்த சீரியல் இனி இல்லை என்பது வருத்தத்தை கொடுக்கும். அதே போல இந்த சீரியல் முடிப்பதை தொடர்ந்து கயல் சீரியலுக்கும் ஒரு எண்ட் கார்ட் போட்டு விடுங்க.. முடியல பாஸ்.. என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications