அஜித் பக்கா குடும்பஸ்தன்.. ஆனால் விஜய்... ஓபனாக போல்டாக பேசிய தமன்னா! குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: நடிகை தமன்னா Tamannaah Bhatia சமீபத்தில் கலந்து கொண்ட கல்லூரி விழாவில் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் Ajith Kumar குறித்து பேசியது தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

கல்லூரி விழாவில் தமன்னா
சென்னையை அடுத்த ஆவடி பகுதியில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் 2026 அறிவியல் மற்றும் கலைத் திருவிழா மூன்று நாட்கள் நடைபெற்றது. அதன் முதல் நாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை தமன்னா கலந்து கொண்டார். மாணவர்கள் மத்தியில் பேசும்போது தமன்னா தனது சினிமா பயணம் மற்றும் கல்லூரி வாழ்க்கை குறித்து பல நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்.
கல்லூரி வாழ்க்கை அனுபவமே இல்லை
அந்த நிகழ்ச்சியில் பேசிய தமன்னா, "எனக்கு கல்லூரி வாழ்க்கை அனுபவங்கள் என்றே இல்லை. நான் மிகவும் இளம் வயதிலேயே சினிமாவுக்கு வந்துவிட்டேன். இப்போது புருஷன் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. அந்த படப்பிடிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு இந்த நிகழ்ச்சிக்காக வந்துள்ளேன்" என்று கூறினார். அதோடு தான் முதலில் நடித்த ஒரு கல்லூரி பின்னணியிலான திரைப்படம் தனது மனதில் இன்னும் சிறப்பு இடம் பிடித்திருக்கிறது என்றும் கூறினார்.
விஜய் பற்றி பேசிய தமன்னா
அதன்பிறகு நடிகர் விஜய் குறித்து பேசும்போது தமன்னா அவரை மிகவும் எளிமையான மனிதர் என்று பாராட்டினார். "விஜய் மிகவும் மென்மையான, எளிமையான மனிதர். நடனம் ஆடுவதில் அவருக்கும் தெலுங்கு நடிகர் N. T. Rama Rao Jr.க்கும் தனி திறமை இருக்கிறது. நடனத்தில் அவர்கள் இருவரும் சிறந்தவர்கள் என்று நான் நினைக்கிறேன்" என்று கூறினார்.
அஜித் குறித்து பகிர்ந்த அனுபவம்
அதன்பிறகு நடிகர் அஜித் குறித்து பேசிய தமன்னா, அவருடன் நடந்த ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தையும் பகிர்ந்தார். "வீரம் படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது அஜித் சார் எனக்கு இட்லி சுட்டுக் கொடுத்தார். அவர் மிகவும் நல்ல மனம் கொண்டவர். மிகவும் எளிமையானவர். குடும்பத்தை மிகவும் மதிக்கும் நல்ல குடும்பஸ்தர்," என்று தமன்னா கூறினார்.
விஜய்யுடன் நடித்த படங்கள்
தமன்னா நடிகர் விஜய்யுடன் இரண்டு படங்களில் நடித்துள்ளார். அவற்றில் ஒன்று சுறா. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். மேலும் வில்லு படத்தில் ஒரு பாடலுக்கு சிறப்பு தோற்றமாகவும் அவர் நடித்திருந்தார்.
அஜித்துடன் நடித்த படம்
அதேபோல் நடிகர் அஜித்துடன் தமன்னா நடித்த படம் வீரம். இயக்குநர் சிவா இயக்கிய அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தில் அஜித் - தமன்னா ஜோடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
மீண்டும் வைரலான தமன்னா பேச்சு
கல்லூரி விழாவில் தமன்னா மிகவும் எளிமையாகவும் நகைச்சுவையாகவும் பேசியது மாணவர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதே நேரத்தில் விஜய் மற்றும் அஜித் குறித்து அவர் பகிர்ந்த பாராட்டுகள் கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்களும் அந்த வீடியோவை அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.
-
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு! -
3 மாத மவுனத்துக்கு பிறகு ஜனநாயகன் பற்றி முதல்முறையாக பேசிய விஜய்.. ஆனால் பாஜக பற்றி ‘கப்சிப்’! -
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
'ஜெ' வின் பூர்வீக பூமி ஸ்ரீரங்கம்..! 'ஜெயா'வுக்கு மறுவாழ்வு அளித்த திருச்சி- விஜய் கணக்குப் புரிகிறதா? -
Jana Nayagan: ஜனநாயகன் பட சிக்கல் தீர்ந்தது? விரைவில் படம் ரிலீஸ் ஆகப்போகுதா? கொண்டாட தயாராகும் விஜய் ரசிகர்கள்! -
தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மகளிரணி! கட்சியிலிருந்தே நீக்குங்க.. வெடிக்கும் பஞ்சாயத்து! -
TVK Vijay in Trichy LIVE: மகளிருக்கு மாதம் ரூ.2,500.. சொன்ன மாதிரி கொடுப்போம்.. விஜய் பேச்சு -
நல்ல நேரத்திற்காக அரை மணி நேரம் காத்திருந்த விஜய்.. திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்கல் செய்தார் -
விஜய் பற்றி என்னால் தப்பா பேச முடியாது.. ஏனென்றால்? ஓபனாக பேசிய சுந்தர் சி.. பாராட்டும் தவெக ரசிகர்கள் -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான் -
ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி












Click it and Unblock the Notifications