சீரியல் நடிகை வாஹினி காலமானார் – தமிழ், தெலுங்கு திரையுலகங்களை சோகத்தில் ஆழ்த்திய மரணம்
சென்னை: (TV Actress Vahini (Padma) Passes Away) தெலுங்கு மற்றும் தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே பரிச்சயமான முகமாக இருந்த மூத்த நடிகை வாஹினி (பத்மா) காலமானார். கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவர், சிகிச்சை பலனின்றி தனது சொந்த ஊரான விஜயநகரத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு, திரையுலகத்தையும், தொலைக்காட்சி தொடர் ரசிகர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக நாம் சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடிப்பவர்களை பார்க்கும்போது இவர்கள் நிஜத்திலும் இப்படித்தான் வசதியாக இருப்பார்கள் என்று நினைத்துக் கொள்வோம். ஆனால் அப்படி எல்லாம் இல்லை அவர்கள் சம்பளத்திற்காகத்தான் அங்கு வேலை பார்க்கிறார்கள், நடிப்புக்கு பிறகு அவர்களுடைய வாழ்க்கையே வேறு என்று சிலருடைய கதை தெரியும்போது தான் மனதிற்குள் ஒரு நெருடலை ஏற்படுத்துகிறது. அதேபோலத்தான் பல சீரியல்களில் பணக்கார கேரக்டரில் நடித்த வாஹினி கடைசி காலகட்டத்தில் மிகுந்த கஷ்டப்பட்டு காலமாகி இருக்கிறார்.

நடிகை வாஹினியின் மறைவுச் செய்தியை அவரது நெருங்கிய தோழியும் நடிகையுமான கராத்தே கல்யாணி சமூக வலைதளங்களில் உறுதி செய்தார். "வாஹினியை காப்பாற்ற கடைசி வரை முயன்றோம். மருத்துவர்கள் நிலைமை மோசமாக உள்ளது என கூறிய பின், அவரை ஊருக்கு அழைத்துச் சென்றோம். இப்போது அவர் இறைவனின் அடியில் அமைதியடைந்துள்ளார்" என கல்யாணி பதிவிட்டிருந்தார். இந்த பதிவு ரசிகர்களிடையே பெரும் உணர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
புற்றுநோயுடன் நீண்ட போராட்டம்
வாஹினி கடந்த சில ஆண்டுகளாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை மட்டுமின்றி, பொருளாதார சிக்கல்களையும் அவர் எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. அவரது சிகிச்சைக்காக நண்பர்கள், கலைத் துறையை சேர்ந்தவர்கள் உதவி செய்த போதும், நோயின் தீவிரம் காரணமாக அவரை காப்பாற்ற முடியவில்லை. நடிகை கராத்தே கல்யாணி தனிப்பட்ட முறையில் நிதி திரட்டி, மருத்துவ உதவிகளை ஏற்பாடு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
சின்னத்திரையில் தனி இடம் பிடித்த நடிகை
வாஹினி முதலில் சிறிய வேடங்களில் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கினார். பின்னர் வில்லத்தனமான, மற்றும் ஸ்ட்ராங்கான பெண்கதாபாத்திரங்களில் அவரது நடிப்பு கவனம் பெற்றது. தெலுங்கு சினிமாவில் மட்டுமின்றி, தமிழ் சின்னத்திரையிலும் அவர் நடித்த தொடர்கள் மூலம் குடும்ப ரசிகர்களிடம் பரிச்சயமான முகமாக மாறினார்.
சீரியல்களில் அவர் நடித்த கதாபாத்திரங்கள், பார்வையாளர்களிடையே "நெகட்டிவ் ரோல்" என்றாலும், அவரது இயல்பான நடிப்பால் மனதில் பதிந்ததாக ரசிகர்கள் நினைவுகூர்கிறார்கள். குறிப்பாக சில சீரியல்களில் மாமியாராகவும் ஒரு சில சீரியல்களில் ஒரு குடும்பத்திற்குள் இருந்து கழகத்தை ஏற்படுத்தும் கேரக்டரிலும் நடித்திருக்கிறார் தமிழில் கூட ஒரு சில சீரியல்களில் இவர் ஆரம்ப காலகட்டத்தில் நடித்திருக்கிறார்.
திரையுலகத்தின் இரங்கல்
வாஹினியின் மறைவு செய்தி வெளியானதும், பல நடிகர்கள், இயக்குநர்கள், சீரியல் துறையை சேர்ந்த கலைஞர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். "குணச்சித்திர வேடங்களில் தனி முத்திரை பதித்தவர்", "எதிர்மறை பாத்திரங்களை கூட மனதில் பதிய வைத்தவர்" என்ற வார்த்தைகளில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
ஒரு கலைஞனின் வாழ்க்கை
வாஹினியின் வாழ்க்கை, பல கலைஞர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களை நினைவூட்டுகிறது. புகழ் இருந்தாலும், உடல்நலப் பிரச்சனைகள் மற்றும் பொருளாதார சிக்கல்கள் அவரை கடுமையாக பாதித்தன. இருந்தாலும், கடைசி வரை தன்னம்பிக்கையுடன் போராடிய அவரது மனநிலை பலருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.
தமிழ், தெலுங்கு சின்னத்திரை ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்த நடிகை வாஹினியின் மறைவு, தொலைக்காட்சி தொடர் உலகில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. அவர் நடித்த கதாபாத்திரங்கள், அவரது குரல், நடிப்பு மற்றும் திரையில் அவர் வெளிப்படுத்திய உணர்ச்சிகள் நீண்ட காலம் ரசிகர்களின் நினைவில் நிலைத்து இருக்கும். அவரது குடும்பத்தினருக்கும், நெருங்கியவர்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications