தாமரை வெளியேறியதும் ஒவ்வொரு செங்கல்லும் கண்ணீர் விட்டிருக்கும் எங்களைப்போல...கதறிய ரசிகர்கள்
சென்னை: தாமரைச் செல்வியின் வெளியேற்றத்தால் அவருடைய ரசிகர்கள் பலர் இப்ப வரைக்கும் சமூக வலைத்தளத்தில் ஃபீல் பண்ணி வருகின்றனர்.
ஒவ்வொரு சீசனிலும் ரசிகர்களின் மனதை பாதிக்கும் வெளியேற்றம் நடப்பது போல இந்த சீசனிலும் நடந்துள்ளது என்று பலர் கூறி வருகின்றனர்.

கேரக்டரை பார்த்து மிரண்ட ரசிகர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 5 வது சீசனில் ஒரு போட்டியாளராக தாமரைச்செல்வி ஆரம்பத்தில் அறிமுகமாகும் போது யாருக்கும் அந்த அளவிற்கு அவரை பற்றி தெரியாமல் தான் இருந்தது. ஒரு நாட்டுப்புற கலைஞராக இவர் இந்த நிகழ்ச்சியில் அடியெடுத்து வைத்ததும் இவர் இங்கு என்ன செய்யப் போகிறாரோ?? என்று தான் பலரும் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் தன்னுடைய தைரியமான கேரக்டரால் அனைவரையும் வசீகரித்து விட்டார். எந்த சூழ்நிலையிலும் யாருக்கும் அடிபணிந்து போகாத இவருடைய கேரக்டர் பலரையும் கவர்ந்துள்ளது.

பாரபட்சம் இல்லாத நடவடிக்கை
இதற்கு முந்தைய சீசன்களில் கூட ஒரு சில போட்டியாளர்கள் தங்களுக்கு பிடித்தவராக இருக்கும் போட்டியாளர்கள் என்ன சொன்னாலும் அவர்களுக்கு ஆமாம் சாமி போட்டுக்கொண்டு இருந்தார்கள். ஆனால் இவர் தனக்கு என்னதான் பிடித்தாலும் அவர்கள் செய்வது பிடிக்கவில்லை என்றால் எடுத்தெறிந்து பேசி அங்கு ஒரு பிரச்சனையை உண்டு பண்ணி அவர் அனைவரையும் மிரட்டி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பல பல நேரங்களில் பாசமாக அனைவருக்கும் வீட்டு வேலை செய்வது மட்டுமல்லாமல், உணவு சமைப்பதிலும் தன்னுடைய உணர்வுகளையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

சில நேரங்களில் காண்டாகவும் இருக்கிறதாம்
ஏழ்மையான சூழ்நிலையில் வந்து இருந்து வந்த இவருக்கு தனி ஆதரவு ரசிகர்களின் மத்தியில் இருந்தது. என்னதான் தான் பின்தங்கிய நிலையிலிருந்து வெளியுலக அனுபவம் இல்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தாலும் இங்கே வந்த பிறகு நிகழ்ச்சியை பற்றியும் கூட இருப்பவர்களைப் பற்றியும் நன்றாக புரிந்து கொண்டு இவர் விளையாட்டை விளையான்ட விதம் பலரையும் கவர்ந்திருந்தது. சில நேரங்களில் இவர் செய்யும் செயல்கள் ரசிகர்களை கடுப்பு அடையவும் செய்திருந்தது. இவருடைய கத்தி பேசும் தன்மை பலருக்கும் காண்டாக இருந்தது. ஆனால் இவர் நாடகத்தில் அப்படியே பேசி பழகிவிட்டதால் இங்கே கோபம் வரும்போது அப்படியே வெளிக்காட்டி விடுகிறார் என்று இவருடைய ரசிகர்கள் இவருக்கு சப்போர்ட் கொடுத்து வந்தனர்.

ரசிகர்களின் கதறல்
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் முதல் சீசனில் இருந்து ஒரு சில போட்டியாளர்கள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து இருந்தாலும், ஓட்டுகளின் அடிப்படையில் அவர்களை வெளியேற்றப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த வெளியேற்றம் சரியான முடிவல்ல தவறானது என்று ரசிகர்கள் பல நேரங்களில் எல்லா சீசனிலும் கூறிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அது இந்த சீசனில் தாமரைச்செல்வியின் வெளியேற்றத்தை பற்றி கூறி வருகின்றனர்.

ரசிகர்களின் கமெண்டுகள்
தாமரைச் செல்வியின் வெளியேற்றத்தால் அவருக்கு பல நாடுகளில் இருந்தும் இருக்கும் ரசிகர்கள் ஃபீல் பண்ணி சமூக வலைத்தளத்தில் கமெண்டுகளை அனுப்பி இருக்கிறார்கள். அதில் ஒரு ரசிகர் பிக்பாஸ் வீட்டை விட்டு தாமரை வெளியேறியதும் பிக் பாஸ் வீட்டின் ஒவ்வொரு செங்கல்லும் கண்ணீர் விட்டிருக்கும்...எங்களை போல, என்று கூறியிருக்கின்றனர். தன்னுடைய வெளியேற்றத்தால் பீல் பண்ணும் ரசிகர்களுக்கு தாமரைச்செல்வி ஆறுதல் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications