குழப்பத்தில் இருந்த தாமரை தெளிவாகி விட்டார்...தெளிவாக இருந்த பிரியங்கா குழம்பி விட்டாரே
சென்னை: விளையாட்டு சொல்லிக்கொடுத்த பிரியங்காவிற்கு இப்போது வினை ஆகிவிட்டதே என்று பலர் கருத்து கூறி வருகின்றனர்.
எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்று சொல்வது தற்போது நிஜமாக நடக்கிறது என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.
விளையாட்டைப் பற்றி நன்றாக தெரிந்த பிரியங்கா நேற்றைய எபிசோடில் பண்ணியதை பார்த்து ரசிகர்கள் ஃபீலாகி உள்ளனர்.

இரு வேறுபட்ட கருத்துக்கள்
விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக வலம் வந்து கொண்டிருந்த பிரியங்கா தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகும் விஜய் டிவி தனக்கே உரியது என்று தன்னுடைய சொந்த வீடு போல இவர் இந்த வீட்டில் விளையாடி வருகிறார் என்று ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து கொண்டு இருந்தனர். ஆனால் அதற்கு எதிர்மறையாக பிரியங்காவின் தீவிர ரசிகர்கள் பிரியங்கா இந்த சீசனில் சிறந்த என்டர்டெய்னர். அனைவருடனும் பாகுபாடு இல்லாமல் விளையாட்டை விளையாடி வருகிறார் என்று அவருக்கு சப்போர்ட் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

ஆறுதல் கூறிய பிரியங்கா
இந்த சீசனில் வழக்கத்துக்கு மாறாக அதிக போட்டியாளர்கள் புதுமுகங்கள் ஆக இருந்ததால் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான ஒரு சில போட்டியாளர்களுக்கு ஆரம்பம் முதலே ரசிகர்கள் தங்களுடைய ஆதரவை கொடுக்க ஆரம்பித்து விட்டனர். அதில் பிரியங்காவும் ஒருவர். ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வரும் நிலையில் தாமரையின் செயல்பாடுகள் ஒரு சில நேரங்களில் ரசிகர்களை வெறுப்படையச் செய்யும் போது மட்டுமல்லாமல் சக போட்டியாளர்கள் இடமும் தாமரை நடந்து கொள்ளும் விதத்தை மட்டுமல்லாமல் இவர் இந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று குழம்பிக் கொண்டிருந்த நேரத்தில் தெரியாமல் பிரியங்கா தான் தாமரைக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார்.

நுணுக்கம் புரிஞ்சுபோச்சு
விளையாட்டு நுணுக்கங்களையும் தாமரைக்கு தெளிவாக புரிய வைத்த பிரியங்கா, நாட்கள் செல்ல செல்ல செய்யும் செயல் தாமரையை குழப்பமடைய செய்ய விட்டது என்பதை ஒவ்வொரு பிரச்சனைகளில் இருந்தும் தெரிந்து கொள்ள முடிந்தது. பிரியங்கா விளையாட்டை சொல்லிக் கொடுத்த விதம் தாமரை நன்றாக புரிந்து விட்டார் என்று பல ரசிகர்கள் கருத்து தெரிவித்து கொண்டிருக்கின்றனர். ஆனால் ஒருசில ரசிகர்கள் அப்படி எல்லாம் இல்லை ஆரம்பத்திலிருந்தே தாமரை அவருடைய விளையாட்டை சிறப்பாக தான் விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று விளக்கம் கொடுத்து வருகின்றனர்.

கதை மாறிப்போச்சு
கடந்த வாரம் தலைவர் பதவிக்காக பிரியங்கா மற்றும் தாமரை இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் தங்களுடைய கருத்துக்களை கூறி அனைவரையும் மிரள வைத்திருந்தனர். இதில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல என்று இவர்கள் இருவருமே நிரூபித்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் நேற்றைய எபிசோஞ்டில் ரம்யா கிருஷ்ணன் மீண்டும் இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசி தாமரையை உசுப்பேத்தி விட்டார்.அப்போது தாமரை பேசிய வார்த்தைகளை கேட்டு ரசிகர்கள் கைதட்டியதை பார்த்ததும் பிரியங்கா சோகத்தில் ஆழ்ந்து இருப்பதை பார்த்து ரசிகர்கள் பலர், குழப்பத்தில் இருந்த தாமரை இப்போ தெளிவா ஆகி விட்டார். ஆனால் தெளிவா இருந்த பிரியங்கா குழப்பமாகி விட்டார் என்று கூறி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications