Goat OTT Release: பிச்சிக்கிட்டு போன கோட்... நள்ளிரவில் நெட்பிளிக்ஸில் நுழைந்த விஜய்.. செம ஹைலைட்ஸ் பாருங்க
சென்னை: விஜய்யின் கோட் படம் ரிலீஸாகி வசூலில் வாரி குவித்த நிலையில், இன்று நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.. அதேபோல கோட் படம் பற்றின இன்னொரு குட்நியூஸும் வெளியாகியிருக்கிறது.. இது விஜய்யின் ரசிகர்களை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
விஜய்யின் நடிப்பில் உருவாகி வெளிவந்துள்ள, கோட் படம் ஆரம்பத்திலிருந்தே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படமாகும்.. இது அவரது கடைசி படத்திற்கு முந்தைய படம் என்றும் சொல்கிறார்கள்.

கடந்த 5ம் தேதி தியேட்டரில் ரிலீசானது.. இந்த படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா என முன்னணி ஹீரோக்கள் இணைந்திருக்கிறார்கள்.. இந்த படத்தின் விமர்சனம் டாப் லெவலுக்கு இல்லாமல், கலவையான விமர்சனத்தை மட்டுமே பெற்றுள்ளது..!!
வெற்றி படமா?: கோட் படம் ரிலீஸாகிய அடுத்தடுத்த நாட்களில், வசூலில் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்ற தகவல்கள் வெளியாகின. காரணம், வழக்கமாக விஜய் படம் என்றால், தமிழ்நாடு மட்டுமல்லாமல், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும், வசூல் எகிறிவிடும்.. ஆனால், இந்த கோட் படத்தின் வசூல் மிகவும் குறைவு என்கிறார்கள்.
அதாவது, முதலில் 200 கோடி ரூபாய்களை கோட் படம் வசூலித்துள்ளதாக சொன்னார்கள்.. ஆனால், சர்வதேச அளவில் 420 கோடி ரூபாய்களை கடந்து வசூலித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டுமே 200 கோடி ரூபாய்களை கோட் படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் படம்: இந்த படம் எந்த ஓடிடிக்கு வரும்? எப்போது ஓடிடிக்கு வரும்? என்ற ஆர்வம் கிளம்பி கொண்டே இருந்தது.. அக்டோபர் 10ம் தேதி ரஜினிகாந்தின் வேட்டையன் படம் ரிலீசாக உள்ளதால், அன்றைய தினம், விஜய்யின் கோட் படம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.. ஏற்கனவே, சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு விஜய் மற்றும் ரஜினிகாந்தின் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் மோதலில் ஈடுபட்டு வரும்நிலையில், ஓடிடியிலும் இப்படி ஒரு மோதலா? என்று பரபரப்புகள் வலம் வந்தன.
இறுதியில், இதன் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளம் கைப்பற்றியதுடன், அக்டோபர் 3ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.. அதன்படியே, இன்று நெட்ப்ளிக்ஸில் கோட் படம் வீடுகளுக்குள் வந்துள்ளது.. இதையடுத்து விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெட்ஃப்ளிக்சில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியிலும் வெளியாக உள்ளது..
சிறப்புகள்: இந்த படத்தை தியேட்டரில் பார்க்காதவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.. இந்த படத்தில் ஏகப்பட்ட ஹைலைட்ஸ்கள் உள்ளன.. விஜய்யின் லுக் டீ-ஏஜிங் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருப்பது, ஒட்டுமொத்த விஜய்யின் ரசிகர்களையும் ஈர்த்திருக்கிறது.
அதேபோல, சிவகார்த்திகேயன், திரிஷா போன்றோரின் கேமியோ கேரக்டர்களும் இந்த படத்தின் ஹைலைட்டாக பேசப்படுகிறது. அனைத்துக்கும் மேலாக விஜய்யின் டபுள் கேரக்டர்கள், ரசிகர்களுக்கு விருந்தாகியிருக்கிறது. 80களில் கலக்கிய மைக் மோகன், இதில் வில்லனாக நடித்து கூடுதல் பாராட்டுக்களை பெற்றுள்ளார்...
ஹைலைட்ஸ்: கேப்டன் விஜயகாந்தின் காட்சி ஏஐ தொழில்நுட்பத்துடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.. ரஜினியின் படையப்பா பின்னணி இசை, தோனியின் சீன், அஜித்தின் மங்காத்தா பிஜிஎம், தல என்ற வாசகம் என ஏகப்பட்ட மசாலா ஐட்டங்களுடன் கோட் படம் கலக்கி கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்த படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகளை விரைவில் வெளியிடவும் தயாரிப்பாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம் டைரக்டர் வெங்கட்பிரபு.. இதுதான் விஜய் ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை தந்து வருகிறது.
எனினும், விஜய்யின் ஹை பட்ஜெட் படம், அதுவும், படம் ரிலீஸ் ஆகி ஒரு மாசம்கூட ஆகாத நிலையில், இப்போது ஓடிடிக்கு வந்துள்ளது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையே தந்துள்ளதாம்..
-
விஜய் பெயரளவில் தான் கிறிஸ்தவர்.. சொந்த குடும்பத்தையே காப்பாற்ற முடியாதவர்.. அருட்தந்தை விமர்சனம்! -
பெரம்பூர் தொகுதியில் விஜய்யை எதிர்க்கும் திலகபாமா? அன்புமணி முடிவுக்கு பின் என்ன காரணம்? -
"இன்னொரு கரூர் சம்பவம் நடக்கக்கூடாது! விஜய்யை பார்த்து திமுகவுக்கு பயம்!" ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு -
என் மனைவி சங்கீதா.. பேங்க் அக்கவுண்டில் கோடிக்கணக்கில் போட்டு வைத்த விஜய்! தங்கம் மட்டும் இவ்வளவா? -
Vijay: 5 ஆண்டுகளில் விஜயின் வருமானம் எவ்வளவு? 2022ல் மட்டும் 237 கோடியா? வாயை பிளக்க வைத்த அபிடவிட் விவரம்! -
சென்னையில் விஜய் பிரசாரம் திடீர் ரத்து.. வில்லிவாக்கம் செல்லாமல் வீடு திரும்புகிறார் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்! -
திருச்சி கிழக்கில் தேர்தல் அலுவலகம் கூட அமைக்காத தவெக.. 25 நாட்களில் விஜய்யால் மாற்றிவிட முடியுமா? -
ஜோதிடம் மூலம் புற்றுநோய் குணமா.. கோவை தவெக பெண் வேட்பாளரின் சர்ச்சை பின்னணி -
என்ன விஜய் இதெல்லாம்? கம்பத்தில் கதி கலங்கிய தவெக! 'சாதி வெறியன்' என அறிவித்துக்கொண்டவருக்கு சீட்! -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications