Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீரியல் நடிகை ராஜேஸ்வரி இறப்பதற்கு முன்பு சொன்ன விஷயம்! பாக்கியலட்சுமி சீரியல் கம்பம் மீனா போஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியல் மற்றும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்த நடிகை ராஜேஸ்வரி நேற்று தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் சீரியல் ரசிகர்களை வருத்தம் அடைய செய்திருந்தது. குடும்ப பிரச்சனை காரணமாக இவர் தற்கொலை செய்திருந்த நிலையில் இவருடைய மறைவு பற்றி நடிகை கம்பம் மீனா உருக்கமான பதிவு வெளியிட்டு இருக்கிறார்.

நடிகை ராஜேஸ்வரி சிறகடிக்க ஆசை சீரியலில் அருணுடைய அம்மாவாக நடித்துக் கொண்டிருந்தார். அதற்கு முன்பு பாக்கியலட்சுமி சீரியலிலும் நடித்திருந்தார். நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் இவர் சதீஷ் என்பவரை சில வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்திருந்தார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

Siragadikka aasai serial vijay tv

அதில் மகள் சடங்கு பங்க்ஷனை பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்று ராஜேஸ்வரி ஆசைப்பட்டதாகவும், அதற்கு அவருடைய கணவர் எதிர்ப்பு தெரிவித்ததால் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு வந்ததாகவும் கூறப்படுகிறது. கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் கடந்த டிசம்பர் 11ம் தேதி அவர் தன்னுடைய கணவரோடு சண்டையிட்டு அம்மா வீட்டிற்கு சென்றிருந்தாராம்.

அம்மா வீட்டிற்கு போன பிறகும் மூன்று நாட்கள் மன அழுத்தத்தில் இருந்தவர் ரத்த அழுத்த மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டு நேற்று முன்தினம் தற்கொலை முயற்சி செய்திருக்கிறார். உறவினர்கள் அவரை முன்னிட்டு மருத்துவமனையில் சேர்த்து இருந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை மரணம் அடைந்தார். இந்த தகவல் வெளியானதிலிருந்து பல ரசிகர்களும் அவருக்கு வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள். ராஜேஸ்வரியுடன் சீரியலில் ஒன்றாக நடித்த நடிகர்கள், நடிகைகளும் தங்களுடைய வருத்தங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

ராஜேஸ்வரி பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவுடன் வேலை பார்க்கும் பெண்ணாக நடித்திருந்தார். அவருடன் நடித்த நடிகை கம்பம் மீனா, ராஜேஸ்வரி உடன் எடுத்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து நீண்ட ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். அந்த பதிவில், ஏன் ராஜி இப்படி பண்ணுன...? என்ன பிரச்சனை இருந்தாலும் தற்கொலை தான் தீர்வா...

நீ எவ்வளவு தைரியமான பொண்ணு. எவ்வளவு போல்டா எல்லாத்தையும் பேசுவ.. நான் ஒரு ஆளு 10 ஆம்பளைக்கு சமம் என்று சொல்லுவியே.. என் பொண்ணுக்கு சடங்கு ஃபங்க்ஷனுக்கு இன்விடேஷன் கொடுக்கணும்னு சொன்னியே.. இப்போ உன் பொண்ணை பத்தி கூட யோசிக்காமல் இந்த முடிவு எடுத்துட்டியே ராஜி...! மனசு வலிக்குது.. என்னதான் தைரியமானவங்களா இருந்தாலும் மனசு வெறுத்துட்டா அவ்வளவுதானா..?

வாழவும் விடாத, சாகவும் விடாத இந்த கேடுகெட்ட சமுதாயத்தில வாழவே கூடாதுனு முடிவு பண்ணிட்டியா..? ஒருத்தரை மிதிச்சு ஒருத்தர கெடுத்து தான் முன்னேற முடியும் எனகிற சமூகம் வேண்டாம் என்று இந்த முடிவு எடுத்துட்டியா..? எப்படி இருந்தாலும் நீ தைரியமானவள் தான்...
ஏன்னா தன் உயிரை மாய்ச்சுகிறதுக்கும் தைரியம் வேணும் இல்ல... சரி ராஜி அங்க போயாவது நிம்மதியாய் இரு... உன் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்" என்று அந்த பதிவில் கம்பன் மீனா குறிப்பிட்டு இருக்கிறார். அதுபோல கிடைக்க ஆசை சீரியலில் செல்வம் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் பழனியப்பனும் தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து ஒரு பதிவு வெளியிட்டிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+