அப்பவும், இப்பவும்...தொகுப்பாளரை வர்ணிக்கும் நெட்டிசன்கள்.. ஆர்டிஸ்ட்னு நிரூபிச்சிட்டிங்க
சென்னை: ஆண்ட்ராய்டு போன்கள் இல்லாத காலகட்டத்தில் இசை பிரியர்களுக்கு வரப்பிரசாதமாய் இருந்தது சன் மியூசிக், இசையருவி, போன்ற சேனல்கள். அந்த சமயங்களில் இந்த சேனலில் வீஜே வாக பணியாற்றியவர்களுக்கு சினிமா நட்சத்திரங்களுக்கு இணையான ரசிகர்கள் கூட்டம் இருந்தது. வீஜே அஞ்சனா, வீஜே மணிமேகலை, வீஜே மகேஸ்வரி, மற்றும் சமீபத்தில் தயாரிப்பாளர் ரவீந்திரனை திருமணம் முடித்த வீஜே மகாலட்சுமி போன்ற வீஜே க்கள் சினிமா ஹீரோயின்கள் போல அன்றைய இளைஞர்களின் கனவு கன்னிகளாக வலம் வந்தனர்.

அன்றைய வீஜேக்களின் இன்றைய நிலை
மொபைல் போனிலே நினைத்த பாடலை நினைத்த இடத்தில் இருந்து கேட்கும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இந்த காலகட்டத்தில் மியூசிக் சேனல் வீஜே களுக்கான மவுஸ் பெரிதளவு குறைந்து விட்டது. இருந்தாலும் 90'ஸ் இளைஞர்களின் மனம் கவர்ந்த சில வீஜே க்கள் நடிகைகளாகவும், நிகழ்ச்சி தொகுப்பாளர்களாகவும் மாறி இன்னும் ரசிகர்களை மகிழ்வித்து கொண்டு தான் இருக்கின்றனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் வீஜே அஞ்சனா ஆவார்.

அஞ்சனாவின் காதல் திருமணம்
மிஸ் சின்னத்திரை அவார்டை 2008 லே வென்ற வீஜே அஞ்சனா சன் மியூசிக் வீஜேவாக தன் வாழ்க்கையை துவங்கினார். தனது கேஷுவலான பேச்சாலும் அழகாலும் அன்றைய இளைஞர்களின் மனம் கவர்ந்த வீஜேவாக இருந்தார். நன்கு பிரபலமாக இருக்கும் பொழுதே கயல் திரைப்படத்தின் கதாநாயகன் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பு தனது பணிக்கு பிரேக் விட்டிருந்த வீஜே அஞ்சனா கொஞ்ச நாட்களிலேயே திரும்பவும் தன் வீஜே பணியை துவங்கினார்.

ஆடியோ ரிலீஸில் அஞ்சனா
தற்பொழுது வீஜேவாக மட்டுமின்றி சினிமாவில் பாடல் வெளியீட்டு விழா,அவார்ட் பங்க்ஷன், போன்ற நிகழ்ச்சிகளின் முக்கிய தொகுப்பாளராக வீஜே அஞ்சனா இருந்து வருகிறார். கொஞ்ச நாட்களுக்கு முன்பு புஷ்பா படத்தின் ஆடியோ ரிலீஸ் போது அல்லு அர்ஜுனாவிடம் இவர் நடந்து கொண்ட விதம் பலரால் விமர்சிக்கப்பட்டது.2k கிட்ஸ் களுக்கு தெரிந்து பல வீஜேக்கள் பிரபலமாக இருந்தாலும், 90'ஸ் ல் துவங்கி இன்று வரை அதே இளமையுடன் 2k கிட்ஸ் களும் தெரிந்து கொள்ளும் அளவிற்கு பிரபலமாக இருக்கும் வீஜே அஞ்சனாவை வைத்து அவரது ரசிகர்கள் ஒருவர் போஸ்ட் செய்துள்ள மீம்சை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வீஜே அஞ்சனா பகிர்ந்துள்ளார்.

வைரலான ரசிகரின் மீம்ஸ்
மீம்ஸ் போஸ்ட் செய்துள்ள ரசிகர் வீஜே அஞ்சனாவின் வெறித்தனமான ரசிகராகவும், 90ஸ் கிட்ஸ்சாகவும் இருப்பார் போல..!!தனது பள்ளிப் பருவம் துவங்கி தற்பொழுது வரை வீஜே அஞ்சனாவின் ரசிகராக இருப்பதை மிகவும் சுவாரசியமாக படம் போட்டு காட்டியுள்ளார். இந்த மீம்சை பார்த்த 90ஸ் கிட்ஸ் இளைஞர்கள் பலர் 'அட நாங்களும்.. தான் வீஜே அஞ்சனாவின் ரசிகர்கள் தாம் பா...!!என்று சியர்ஸ் செய்து வருகின்றனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications