நடிகை திவ்யா பெற்றோர் பற்றி வெளியிட்ட உருக்கமான பதிவு.. இப்பவாவது புரிந்ததே! ஆறுதல் கூறும் பிரபலங்கள்
சென்னை: சின்னத்திரை நடிகையான திவ்யா ஸ்ரீதர் தன்னுடைய பெற்றோர் குறித்து உருக்கமாக வெளியிட்ட பதிவுக்கு ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
கணவனோடு ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக மன அழுத்தத்தில் இருந்து வந்த திவ்யா ஸ்ரீதர் அவருடைய பெற்றோர்கள் ஏற்றுக்கொண்டது ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றிருக்கின்றது.

பரபரப்பை ஏற்படுத்திய குடும்ப பிரச்சனை
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் திவ்யா ஸ்ரீதர் தற்போது சமூக வலைத்தளத்தில் பலருக்கும் பரீட்சயமான ஒரு நபராக மாறிவிட்டார். இவர் ஒரு சின்னத்திரை நடிகையாக இதுவரைக்கும் பலருக்கும் தெரிந்திருந்த நிலையில் தற்போது இவருடைய குடும்பப் பிரச்சனை சமூக வலைத்தளத்தில் அனைவருக்கும் தெரிந்த ஒரு பிரச்சினையாக மாறிவிட்டது. இவர் சின்னத்திரை நடிகர் ஆன அர்ணவ் என்பவரை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தற்போது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

செல்லம்மா சீரியல் கதாநாயகன்
நடிகை திவ்யா ஸ்ரீதரின் கணவரான அர்ணவ் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் ஐந்து ஆண்டுகள் காதலித்து தற்போது ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் இவர்கள் திருமணம் செய்திருக்கின்றனர் திருமணத்திற்கு பிறகு அர்ணவ் செல்லம்மா சீரியல் கதாநாயகி உடன் நெருங்கி பழகி வருவது திவ்யாவிற்கு பிடிக்காமல் இவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு இருக்கிறது. தற்போது திவ்யா கர்ப்பமாக இருக்கும் நிலையில் அர்ணவ் இவரை அடித்து துன்புறுத்தியதாக இவர் கூறியிருந்தார்.

ஆதரவு இல்லாமல் தவிப்பு
அருணாவின் மீது அதிகளவில் காதல் வைத்திருக்கும் திவ்யாவால் அவருடைய கணவர் வேறு ஒருவருடன் நெருங்கி பழகுவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் இவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையின் காரணமாக திவ்யா அர்ணவ் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இருந்தார். இந்த நிலையில் தற்போது அர்ணவ் கைது செய்யப்பட்டு ஜாமினில் வந்துள்ளார். இந்த நிலையில் தனக்கு யாருமே ஆதரவு இல்லை என்று திவ்யா சமூக வலைத்தளத்தில் பேசிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் அனுதாபத்தை பெற்றிருந்தது.

பெற்றோர் குறித்த பதிவு
திவ்யா கர்ப்பமாக இருக்கும் நிலையில் யாரும் இல்லாமல் தனியாகவே குடும்பத்தை சமாளித்துக் கொண்டிருந்திருக்கிறார் .இந்த நிலையில் அவருடைய அம்மா மற்றும் அப்பா அவரை புரிந்து கொண்டு இப்போது சேர்த்து இருக்கிறார்களாம். அதனைக் குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவு ஒன்றே வெளியிட்டு இருக்கிறார். அதில் ,பெற்றோர்கள் வாழும் தெய்வங்கள் அவர்கள் தங்கள் குழந்தைகளை மகிழ்விப்பதற்காக எல்லாவற்றையும் செய்கிறார்கள். பதிலுக்கு எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார் .அதற்கு சின்னத்திரை நடிகையான கிருத்திகா அண்ணாமலை, ஆம் அன்பே மிகவும் உண்மை இப்போது உங்களுக்கு மகிழ்ச்சி என்று கூறி இருக்கிறார். அதுபோல சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இந்த பதிவை பார்த்ததில் மகிழ்ச்சி ,இனி வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று இவருக்கு அன்பு அறிவுரைகளை கூறி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications