Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னது தனலட்சுமி குடும்பத்தை பற்றி சொன்னது எல்லாமே பொய்யா? அவருடைய அம்மா பார்த்த வேலை இதுதானாம்!?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் சீசன் 6 தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் தனலட்சுமி தன்னுடைய ஆரம்ப கால வாழ்க்கையை பற்றி கூறிய தகவல்கள் அனைத்தும் பொய் என்று நெட்டிசன்கள் வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு இருக்கின்றனர்.

தனி ஆளாக கஷ்டப்பட்டு வளர்ந்த அம்மாவின் கழுத்தில் இருந்த ஒரு செயினையும் கூட அடகு வைத்து தான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நான் வந்தேன் என்று கூறிய தகவலை புள்ளி விவரங்களோடு ரசிகர்கள் பொய் என்று நிரூபித்து இருக்கின்றனர்.

மக்களில் ஒரு பிரதிநிதி

மக்களில் ஒரு பிரதிநிதி

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை யாரும் எதிர்பார்க்காத வகையில் 21 போட்டியாளர்கள் அறிமுகம் ஆனார்கள். இந்த நிகழ்ச்சியில் இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த முறை இரண்டு போட்டியாளர்கள் மக்களின் பிரதிநிதிகளாக கலந்து கொண்டனர். அதில் ஒரு போட்டியாளராக தனலட்சுமி இருந்து வருகிறார். நிகழ்ச்சிக்கு வருவது தன்னுடைய கனவு என்றும், தன்னுடைய அம்மாவிற்காகவும் தான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டதாக கதை சொல்லும் டாஸ்க்கில் தனலட்சுமி கூறியிருந்தார்.

அம்மாவை பற்றி சொன்ன கதை

அம்மாவை பற்றி சொன்ன கதை

தன்னுடைய அம்மா தன்னை வளர்த்த விதத்தை பற்றி பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் அதையெல்லாம் பொய் ஆகின்ற மாதிரி இந்த நிகழ்ச்சியில் நான் நடந்து கொண்டு, அம்மாவுக்கு பெயர் வாங்கி கொடுப்பேன் என்று தனலட்சுமி கதை சொல்லும் டாஸ்க்கில் கூறியிருந்தார். அது மட்டுமல்லாமல் தன்னுடைய வீட்டில் ஏழ்மையான நிலைமையில் இருந்ததாகவும், தன்னுடைய அப்பா சிறுவயதிலேயே தங்களையே விட்டுவிட்டு வேறு திருமணம் செய்து தனியாக போய்விட்டதாகவும், இவருடைய அம்மாவுக்கு சிறுவயதிலேயே கல்யாணம் முடிந்து விட்டதாகவும்,அப்பா போன பிறகு சிங்கிள் மதராக அம்மா தான் எல்லா பொறுப்பையும் பார்த்து வந்ததாக கூறி இருப்பார்.

பழையதை தோண்டிய ரசிகர்கள்

பழையதை தோண்டிய ரசிகர்கள்

அதுமட்டுமல்லாமல் இவர் பிக் பாஸ் வருவதற்காக அம்மாவின் கழுத்தில் இருந்த ஒரு செயினையும் அடகு வைத்து 25 ஆயிரம் ரூபாய் கிடைத்ததாகவும், அதில் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்காக மேக்கப், உடை போன்றவற்றை வாங்கிக் கொண்டு இங்கே வந்ததாகவும் கூறியிருப்பார் .ஆனால் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு டிக் டாக் செயலி மூலமாகவே பலருக்கும் பரிச்சைமானவர் .தற்போது அவருடைய பழைய வீடியோக்களை ரசிகர்கள் தேடிப் பிடித்து அதை வைரலாகி வருகின்றனர். அதில் இவருடைய பிரம்மாண்டமான வீடு மற்றும் இவருடைய ஆடம்பரமான வாழ்க்கை அப்பட்டமாக தெரிகிறது.

வியூஸ்காக இப்படி எல்லாமா

வியூஸ்காக இப்படி எல்லாமா

ஒவ்வொரு வீடியோக்கும் வித விதமாக உடை அலங்காரத்தில் வந்து பாலோவர்ஸ்களை கூட்ட வேண்டும் என்பதற்காக இவர் செய்யும் அட்ராசிட்டி இப்போது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் இவர் பல நெகட்டிவ் கருத்துக்களை பெரும் வகையில் வீடியோக்களையும் வெளியிட்டு இருக்கிறார். அதில் இவர் சிகரெட் பிடிப்பது போன்ற வீடியோ, வடிவேலுவை ரீ கிரியேட் செய்வது போன்று முகத்தில் பெயிண்ட் அடித்துக் கொண்டு செய்த வீடியோக்களை தற்போது நெட்டிசன்களை அதிகமாக கலாய்த்து வருகின்றனர். அதுபோல பணத்தை அதிகமாக பார்க்கவே இல்லை என்று கூறிய இவர் ஒரு வீடியோவில் பணம் கட்டுக்களை பரப்பி வைத்து எரித்திருக்கிறார் அதில் இவருடைய கையில் இருக்கும் ஒரு தாள் மட்டும் தான் பணத்தால் மீது மீதம் எல்லாம் டம்மி நோட்டு தான். அதை பார்த்த ரசிகர்கள் பலர் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

குரு பகவான் சாரீஸ்

குரு பகவான் சாரீஸ்

இது மட்டுமில்லாமல் இவருடைய அம்மா சொந்தமாக குரு பகவான் சாரீஸ் என்ற ஒரு துணிக்கடையை நடத்தி வருகிறாராம். அந்த துணிக்கடையில் வாடிக்கையாளர்களாக சேர்பவர்கள் 1100 ரூபாய் பணம் கட்டி சேர்ந்து கொண்டால், அவர்களுக்கு தனலட்சுமியின் அம்மா துணிகளை கொடுத்து விடுவாராம். அதற்குப் பிறகு அவர்களுக்கு கீழே ஒரு சிலரை சேர்த்து விட வேண்டுமாம், அப்படி சேர்த்து விடும்போது இவரிடம் 1100 ரூபாய் கட்டியவருக்கு வாராவாரம் கமிஷன் வர தொடங்கி விடுமாம். அப்படி ஒரு வீடியோவை தனலட்சுமி வெளியிட்டு இருக்கிறார்.

கமெண்ட்களில் கதறும் நெட்டிசன்கள்

கமெண்ட்களில் கதறும் நெட்டிசன்கள்

அந்த வீடியோவில் இதுவரைக்கும் எங்களிடம் 7500 பேர் சேர்ந்திருக்கிறார்கள் கூறியிருக்கிறார். அப்படியானால் ஒரு நபருக்கு 1100 ரூபாய் வைத்து பார்த்தால் 7,500 பேருக்கும் 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருகிறது. இவ்வளவு பணத்தை சம்பாதித்துக் கொண்டிருப்பவர்கள் ஏழைகளா ?என்று நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர். இந்த வீடியோவில் தனலட்சுமி நான் தான் இந்த கடைக்கு ஓனர் என்று பேசி இருக்கிறார். இந்த வீடியோவில் பலர் தாங்கள் இந்த கடையில் பணம் கட்டி ஏமாந்து விட்டதாக கருத்துக்கூறி வருகிறார்கள். இதை குறித்து தனலட்சுமி பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு விளக்கம் கொடுத்தால் தான் இது எந்த அளவில் உண்மை என்பது தெரியவரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+