தனலட்சுமி எங்கே போனார்? ஏன் இந்த உல்ட்டா வேலை? சேனல் வெளியிட்ட பதிவு... வெளிவந்த ரகசியங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை விட்டு கடந்த வாரம் வெளியேறிய தனலட்சுமி எங்கே சென்றார் என்று ரசிகர்கள் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த வாரம் வெளியேறிய மணிகண்டன் நாளை லைவில் வருவதாக hotstar தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்து இருக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து தனலட்சுமி வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமாக போவதில்லை என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

எதிர்பாராத வெளியேற்றம்

எதிர்பாராத வெளியேற்றம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்வது போலவே ஒவ்வொரு சீசனில் ஒரு சில எதிர்பாராத செயல்கள் நடைபெற்று விடுகிறது. ஒவ்வொரு சீசனில் ஒரு சில போட்டியாளர்களின் வெளியேற்றம் ரசிகர்கள் எதிர்பார்க்காத விதத்தில் நடைபெற்று விடுகிறது. தற்போதைய ஆறாவது சீசனில் கூட தனலட்சுமி வெளியேற்றம் நடைபெற்றது. தனலட்சுமியை விட மொக்கையாக விளையாடி கொண்டு இருக்கும் பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் நிலையில் தனலட்சுமி மட்டும் ஏன் வெளியேற்றப்பட்டார் என்று ரசிகர்கள் பலரும் ஃபீல் பண்ணி கொண்டு இருக்கின்றனர்.

எங்கே தான் தனலட்சுமி போனாங்க

எங்கே தான் தனலட்சுமி போனாங்க

அது மட்டுமல்லாமல் தற்போது தொடங்கி இருக்கும் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் கூட தனலட்சுமி இருந்தால் விளையாட்டு விறுவிறுப்பாக இருக்கும் என்று பலர் கருத்து கூறி வருகின்றனர். ப்ரீஸ் டாஸ்க்கில் தனலட்சுமி இல்லை என்று பலர் கருத்து கூறியுள்ளார்கள். தனலட்சுமி தன்னுடைய அம்மாவை இந்த ப்ரீஸ் டாஸ்க்கில் வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வரவேண்டும் என்பது ஆசையாக வைத்திருந்தார். ஆனால் அது நிறைவேறவில்லை என்று தனலட்சுமி சார்பாக பலர் பிரமோகளில் தங்களுடைய கருத்துக்களை கொட்டி வந்தனர். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனலட்சுமி என்ன ஆனார் என்று தெரியாத வகையில் தான் இருந்து வருகிறது.

வைல்ட் கார்ட் என்ட்ரி இல்லையாமே

வைல்ட் கார்ட் என்ட்ரி இல்லையாமே

இந்த நிலையில் இந்த வாரம் வெளியேறிய மணிகண்டனின் லைவ் நிகழ்ச்சி நாளை நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நடக்கப் போவதாக ஹாட் ஸ்டார் தரப்பில் இருந்து பதிவு வெளியிட்டு இருக்கின்றனர். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அப்படி என்றால் தனலட்சுமி மட்டும் ஏன் லைவ் வரவில்லை என்று கேள்வி எழுப்ப இன்னும் ஒரு சில ரசிகர்கள் இதுவரைக்கும் வைல்ட் கார்டாக தனலட்சுமி பிக் பாஸ் வீட்டிற்குள் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் அது இப்போது நடக்காது என்று உறுதியாக தெரிந்து விட்டது. இந்த நிலையில் தனலட்சுமி இன்னும் சில நாட்களில் பிக் பாஸ் வீட்டிற்குள் வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் அதில் தனலட்சுமி கலந்து கொள்ள இருக்கிறார் என்று செய்தி வெளியாகி இருக்கிறது.

இணையத்தில் லீக்கான தகவல்கள்

இணையத்தில் லீக்கான தகவல்கள்

தனலட்சுமி குறித்து அவருடைய முன்னாள் தோழிகள் ஒரு சிலர் சமூக வலைத்தளத்தில் சில சேனல்களுக்கு பேட்டி கொடுத்த வீடியோக்களை சில நெட்டிசன்கள் பகிர்ந்து இதற்கு பதில் சொல்வதற்காக தனலட்சுமி வெளியே வரவேண்டும் என்று கூறி வருகின்றனர். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு தனலட்சுமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஆக்டிவாக இருந்திருக்கிறார். ரீல்ஸ் வீடியோக்களில் தினமும் தவறாமல் ரசிகர்களை என்டர்டைன்மென்ட் செய்து வந்திருக்கிறார். ஆனால் இப்போது எதற்கும் பதில் சொல்லாமல் இருக்க காரணம் தனலட்சுமியின் உடல் நிலையில் ஏதேனும் பிரச்சினை காரணமா என்று ஒரு பக்கம் கேள்வி எழுதுகிறது. இன்னொரு பக்கம் பிக் பாஸ் அணியினர் இப்படியே தனலட்சுமி என்ன ஆனார் என்று சஸ்பென்ஸாக வைத்து திடீரென பிக் பாஸ் நிகழ்ச்சிகள் தனலட்சுமி இறக்கும்போது டிஆர்பி அதிகரிக்கும் அதற்காகத்தான் இப்படி ஒரு செயல் செய்கின்றனர். என்ன இன்னொரு தரப்பு கருத்தும் பரவி வருகிறது. இதில் எது உண்மை என்பது பொறுத்திருந்து பார்த்தால் இன்னும் ஒரு சில நாட்களில் தெரியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+