பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வெல்ல போவது யார்? வாக்களிப்பின் கடைசி நாள்.. இணையத்தில் கசிந்த தகவல்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் வெற்றியாளரை தேர்ந்தெடுக்க இன்று கடைசி நாள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று 103 வது நாள் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில் இந்த சீசனின் கடைசி வாரத்திற்கான ஓட்டு இன்றோடு முடிக்கப்பட இருக்கிறது.

இந்த நிலையில் இன்று ஓட்டுக்களின் அடிப்படையில் முன்னணியில் இருப்பவர்தான் இந்த சீசனில் டைட்டில் ஜெயிக்க போகிற நபர். தற்போது சமூக வலைத்தளத்தில் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

உறுதியாக சொல்ல முடியவில்லை

உறுதியாக சொல்ல முடியவில்லை

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைய இன்னும் இரு தினங்கள் மட்டுமே இருக்கின்றது. இந்த நிலையில் இந்த சீசனில் யார் டைட்டில் ஜெயிக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இதற்கு முந்தைய பல சீசன்களின் இவர்தான் டைட்டில் ஜெயிப்பார் என்று ஆரம்பத்திலேயே ரசிகர்களால் முத்திரை குத்தப்பட்டு விடுவார்கள். ரசிகர்களுக்கு முன்பே உறுதியான தகவல்கள் தெரிந்து விடும் ஆனால் இந்த சீசனில் அப்படி உறுதியாக யாரையும் குறிப்பிட முடியவில்லை. கடைசி இடத்தில் இருக்கும் போட்டியாளர்களில் யார் ஜெயிப்பார்கள் என்று ரசிகர்களுக்குள் குழப்பங்களும் எழுந்து இருக்கின்றது.

அடுத்தடுத்த வெளியேற்றம்

அடுத்தடுத்த வெளியேற்றம்

இந்த வாரத்தில் ஆரம்பத்தில் ஆறு போட்டியாளர்கள் கடைசி கட்டத்தை எட்டி இருந்தனர். ஆனால் முதல் ஆளாக மூன்று லட்சம் பணம் முட்டையை தூக்கிக்கொண்டு கதிரவன் வெளியேறி இருந்தார். அதற்கு பிறகு ஐந்து போட்டியாளர்கள் இறுதி கட்டத்திற்கு அடியெடுத்து வைத்திருந்தனர். அவர்களின் அமுதவாணன் பணப்பெட்டி எடுத்துக்கொண்டு வெளியேற இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது .அதனைத் தொடர்ந்து வாக்குகளின் அடிப்படையில் கடைசி இடத்தில் இருக்கும் மைனா நந்தினி வெளியேற்றப்படலாம் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

கடைசி மூன்று போட்டியாளர்கள்

கடைசி மூன்று போட்டியாளர்கள்

இதைத்தொடர்ந்து கடைசி மூன்று இடத்தில் விக்ரமன், அசீம், ஷிவின் மூன்று போட்டியாளர்கள் மட்டும் இருக்கின்றனர். அவர்களில் யார் டைட்டில் ஜெயிப்பார்கள் என்று தான் ரசிகர்களுக்கு குழப்பமும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இன்று வாக்கு செலுத்தும் கடைசி நாள் இப்போது வரைக்கும் முன்னணியில் விக்ரமன் மற்றும் அசீம் இருவரும் மாறி மாறி வந்த வண்ணமாக இருக்கின்றனர். இவர்களில் யார் அதிகமாக வாக்கு பெற போகிறார்கள் என்று இன்னும் சில மணி நேரங்களில் உறுதியாக தெரிந்து விடும். இந்த நிலையில் இருவருடைய ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் தங்களுக்கு பிடித்த போட்டியாளர் தான் அதிகமாக வாக்கு வைத்திருக்கிறார் என்று மாறி மாறி கூறி வருகின்றனர்.

இந்த சீசன் வின்னர்

இந்த சீசன் வின்னர்

இந்த சீசனில் திருநங்கை போட்டியாளராக வந்திருக்கும் ஷிவின் ஆரம்பத்தில் இருந்து பலருடைய வரவேற்பு பெற்றிருந்தாலும் ஷிவினுக்கு இவர்கள் இருவரையும் காட்டிலும் ஓட்டு குறைவாகத்தான் இருக்கிறது. ஷிவினுக்கு ஆதரவு குறைவாகத்தான் இருக்கிறது என்பது சமூக வலைத்தளத்தில் தெரிகிறது. காரணம் விக்கிரமனுக்கு ஆதரவாக ரசிகர்களும், பிக் பாஸ் பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் வாக்கு சேகரித்து வருகின்றனர். அதுபோல அசீமுக்கு ஆதரவாக அவருடைய ரசிகர்கள் அதிகமானோர் ஃபேன்ஸ் பேஜ் மூலமாகவும் வாக்கு சேகரித்து வருகின்றனர்.இவர்களிடம் ஒப்பிடும்போது ஷிவினுடைய வாக்கு குறைவாக இருக்கிறது. இந்த நிலையில் தற்போது விக்ரமன் தான் அதிகமாக ஓட்டு வாங்கி இருக்கிறார் அவர்தான் வெற்றி பெற போகிறார் என்ற தகவல்கள் அதிகமாக பரவி வருகிறது. எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்று சொல்லும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடைசி நேரத்தில் என்ன வேணாலும் மாற்றம் ஏற்படலாம் என்று ஒவ்வொரு வாரமும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்த முறை என்ன நடக்கப் போகிறது என்பது பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+