ஒரு காலத்தில் பாஜகவிற்கு ஹீரோ.. ஒரே நாளில் வில்லன்.. பொன்னாரை தடுத்த ஐபிஎஸ் யார் தெரியுமா?
நேற்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் வாக்குவாதம் செய்த போலீஸ் அதிகாரி இணையம் முழுக்க அதிக அளவில் தேடப்பட்டு உள்ளார்.
Recommended Video

திருவனந்தபுரம்: நேற்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் வாக்குவாதம் செய்த போலீஸ் அதிகாரி இணையம் முழுக்க அதிக அளவில் தேடப்பட்டு உள்ளார். இவர் யார் என்று பலர் தேடி இருக்கிறார்கள்.
நேற்று சபரிமலை சென்ற பாஜக கட்சியை சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டார். அமைச்சரை தடுத்திய நிறுத்திய போலீஸ் அதிகாரி இந்தியா முழுக்க வைரலாகி உள்ளார்.
யதீஷ் சந்திரா ஐபிஎஸ்தான் இப்படி வைரலானது. இவரது துணிச்சலான நடவடிக்கை காரணமாக நிறைய சிக்கலுக்கு ஆளாகி இருக்கிறார். இவர் பலமுறை, பல கட்சிகளை எதிர்த்து நின்று உள்ளார். இவரது சர்ச்சை வரலாறு மிக நீண்டது.

லத்தி சார்ஜ்
கர்நாடகாவில் பிறந்து கேரளாவில் எஸ்.பியாக நியமிக்கப்பட்டு இருக்கும் யதீஷ் சந்திரா ஐபிஎஸ் முதலில் வைரல் ஆனது கேரளாவின் அங்கமாலி பகுதியில் 2015ல் நடந்த போராட்டத்தின் போதுதான், அப்போது காங்கிரஸ் ஆட்சி நடந்தது. கம்யூனிஸ்ட் கட்சி பெரிய போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த நியமிக்கப்பட்ட யதீஷ் சந்திரா, அங்கிருந்த கம்யூனிஸ்டுகள் மீது லத்தி தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். இந்த தாக்குதல் மிகவும் மோசமாக நடந்தது.

நாய்
இதனால் பாஜக ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் இவரை ஹீரோ என்று கூறினார்கள். இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று கூட கூறினார்கள். இதில் பல கம்யூனிஸ்டுகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் யதீஷ் சந்திரா மீது கடும் கோபம் கொண்டனர். முன்னாள் கேரள முதல்வர் அச்சுதானந்தன், யதீஷ் சந்திராவை ''பைத்தியகார நாய்'' என்று கொச்சையாக திட்டினார். பினராயி விஜயன், அப்போதே இவரை வேலையைவிட்டு தூக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

ஆனால் என்ன நடந்தது
ஆனால் பினராயி முதல்வர் ஆன பின் நடந்தது வேறு. யதீஷ் சந்திராவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நினைத்தவர்களுக்கு ஆச்சர்யம். அவர் மிக முக்கியமான பகுதியான எர்ணாகுளத்தின் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டார். 2017 ஜனவரியில் அவர் எர்ணாகுளத்தின் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டார். ஆனாலும் இவர் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வந்தார்.

தொடர்ந்து சர்ச்சை
இதை தொடர்ந்து கடந்த வருடம் எர்ணாகுளத்தில் நடந்த பந்தின் போது, இவர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் மீது நடத்திய லத்தி சார்ஜ் பெரிய வைரலானது. இதனால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் இவர் மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார்.

வெளியே வந்தார்
ஆனால் ஆச்சர்யமாக போலீசும், கேரள முதல்வர் பினராயி விஜயனும் இவருக்கு சப்போர்ட்டாக களமிறங்கியதால் வழக்கு ஒன்றுமில்லாமல் போனது. அதிலிருந்து மனித உரிமைகள் ஆணையத்திற்கு இவர் மீது ஒரு கண் இருக்கிறது.

சர்ச்சை என்ன
இந்த நிலையில்தான் இவர் மீண்டும் சபரிமலை பிரச்சனை காரணமாக சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளார். ஆனால் பொன்.ராதாகிருஷ்ணன் உடன் வாக்குவாதம் செய்யும் முன்பே இவர் சர்ச்சையானார். ஆம், கேரளா மாநில பாஜக பொதுச் செயலாளர் கே. சுரேந்திரனனை கைது செய்தது இவர்தான். அவர் கைது செய்யப்பட்டதை அடுத்து இவருக்கு எதிராக நிறைய பேர் கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர்.

எதிரி
இவர் கேரளாவில் நடக்கும் போராட்டங்களை கட்டுப்படுத்துவதில் சிறப்பானவர் என்று பெயர் பெற்றுள்ளார். ஒரு காலத்தில் இவரை ஹீரோவாக பார்த்த பாஜகவும் ஆர்எஸ்எஸும் இப்போது இவரை வில்லனாக பார்க்கிறது. அதே சமயம் கம்யூனிஸ்டுகளும், காங்கிரசும் இவருக்கு ஆதரவாக களமிறங்கி உள்ளது. ஒரே நாளில் இவர் இந்தியா முழுக்க வைரலாகி உள்ளார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்?












Click it and Unblock the Notifications