இங்கிலாந்துக்கான இந்தியாவின் தூதராக விக்ரம் துரைசாமி நியமனம்
டெல்லி: பிரிட்டனுக்கான (இங்கிலாந்து) இந்தியாவின் புதிய தூதராக விக்ரம் துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கான இந்திய தூதரான காயத்ரி இஸ்ஸார் குமார், ஜூன் 30-ந் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கான புதிய தூதராக விக்ரம் துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

1992-ம் ஆண்டு பேட்ச் ஐ.எப்.எஸ். அதிகாரியான விக்ரம் துரைசாமியின் தந்தை, 1971-ம் ஆண்டு வங்கதேச விடுதலைக்கான இந்தியாவின் போரில் விமானப் படை விமானியாக பணியாற்றியவர். டெல்லி பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர் விக்ரம் துரைசாமி.
மத்திய அரசில் ஓராண்டு காலம் பத்திரிகையாளராகவும் பணியாற்றினார். பின்னர் வெளியுறவு அமைச்சகத்தில் பணியில் சேர்ந்தார். 1994-ல் சீனாவுக்கான இந்திய தூதரகத்தில் 3-ம் நிலை செயலராக முதலில் பணியாற்றினார். பின் இந்தியா திரும்பிய அவர், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் செயலாளராகவும் பணியாற்றினார்.
ஆப்கானிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான் தூதராக விக்ரம் குமார் துரைசாமி பணியாற்றி உள்ளார். வங்கதேசத்துக்கான இந்திய தூதராகவும் விக்ரம் குமார் துரைசாமி பணிபுரிந்தார். வங்கதேசத்தில் பணிபுரிந்த போது டாக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், வங்கதேச விடுதலைக்காக பாகிஸ்தானுடன் இந்தியா நடத்திய யுத்தத்தில் தமது தந்தை இந்திய விமானப்படை விமானியாக பணியாற்றியதை பெருமிதத்துடன் நினைவு கூர்ந்தார். வங்கதேசத்தில் 2 ஆண்டுகாலம் இந்தியாவின் தூதராக பணியாற்றினார் விக்ரம் துரைசாமி.
தற்போது இங்கிலாந்துக்கான இந்தியாவின் புதிய தூதராக விக்ரம் துரைசாமி நியமிக்கப்பட்டிருக்கிறார். விக்ரம் துரைசாமி சீனா, பிரெஞ்ச், கொரிய மொழிகளையும் பேசக் கூடியவர், படிப்பு, விளையாட்டு, பயணங்களில் ஆர்வம் கொண்டவர் விக்ரம் துரைசாமி. மத்தியில் பாஜக ஆட்சியில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்த தூதராக தமிழரான டி.எஸ். திருமூர்த்தி நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்தியா- இங்கிலாந்து இடையேயா உறவுகள் வலுவடைந்து நிலையில் விக்ரம் துரைசாமியின் நியமனம் முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தின் புதிய பிரதமருக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. போரிஸ் ஜான்சன் பதவி விலகலைத் தொடர்ந்து புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் களத்தில் நிற்கிறார். ரிஷி சுனக், அடுத்தடுத்த சுற்றுகளில் வென்று தற்போது இறுதி வேட்பாளராக களம் காண்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
20 நாள் பொறுமையா இருந்தா ரூ.70 லட்சம் தள்ளுபடி கிடைக்கும்..!! -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications