பன்றிக்கு ரெஸ்ட் விட்டா.. பரவிய பறவை காய்ச்சல்! செத்து மடியும் வாத்துகள்! கேரள எல்லையில் தீவிர சோதனை
திருவனந்தபுரம் : கொரோனா, ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சலை தொடர்ந்து தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் பறவை காய்ச்சல் திடீரென பரவி வருவதன் எதிரொலியாக உடுமலை பகுதியில் தமிழக-கேரள எல்லையில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மக்களை அச்சுறுத்தலில் ஆழ்த்தி தற்போது ஓரளவு குறைந்துள்ள கொரோனா பாதிப்பிலிருந்து மீள்வதற்குள் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் குரங்கு அம்மை, பன்றி காய்ச்சல் பாதிப்பு என அடுத்தடுத்து நோய்களால் அம்மாநில மக்கள் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா பாதிப்பு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் தமிழகத்தின் அருகில் உள்ள கேரளாவில் கொரோனா மட்டுமல்லாது குரங்கு காய்ச்சல், ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் என பாதிப்பு சற்று அதிகமாகவே இருந்தது.

பறவை காய்ச்சல்
கடந்த ஆகஸ்ட் மாதம் வயநாட்டில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு காரணமாக சுமார் 300க்கும் மேற்பட்ட பன்றிகளை கொல்ல கேரள மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் பறவை காய்ச்சல் திடீரென பரவி வருவதன் எதிரொலியாக உடுமலை பகுதியில் தமிழக-கேரள எல்லையில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வாத்துகள் உயிரிழந்தன
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் வாத்துப்பண்ணைகளில் வளர்த்து வந்த வாத்துகள் திடீரென இறந்தன. இது குறித்து தகவல் அறிந்த கேரள கால்நடைத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் வாத்துகள் பறவை காய்ச்சலால் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் பரவுதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இந்நிலையில் தமிழக அரசு மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பறவை காய்ச்சல் தமிழகத்தில் பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதன்படி திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள தமிழக கேரள எல்லையான மூணாறு செல்லும் மலைவழிப்பாதையில் அமைந்துள்ள 9/6 செக்போஸ்ட் பகுதியில் கால்நடைத்துறை சார்பில் மருத்துவக்குழுவினர் தீவிர கண்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீவிர கண்காணிப்பு
அங்கேயே தங்கியிருந்து கேரளாவில் இருந்து தமிழகம் வரும் அனைத்து வாகனங்களுக்கும் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். .இதே போல் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு முட்டை, கறிக்கோழி போன்றவற்றை கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த பணியானது இரவு பகலாக சுழற்சி முறையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு மேற்கொண்டு வருவதாக கால்நடை துறையினர் தெரிவித்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications