Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!
முகப்பு | திருக்குறள் | நெஞ்சொடு புலத்தல் | உறாஅ தவர்க்கண்ட கண்ணும் திருக்குறள்

உறாஅ தவர்க்கண்ட கண்ணும் திருக்குறள்

குறள் பால்
குறள் இயல்
அதிகாரம்
குறள் விளக்கம்
1292 உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு

என் நெஞசே! நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என்று எண்ணி அவரிடம் செல்கின்றாயே!
— மு. வரதராசன்

நெஞ்சே! நம்மிடம் அன்பு காட்டாதவர் அவர் எனக் கண்ட பிறகும், நம்மை வெறுக்க மாட்டார் என நம்பி அவரிடம் செல்கின்றாயே
— கலைஞர்

என் நெஞ்சே! என்மீது அன்பு இல்லாதவரை உள்ளபடியே நீ அறிந்திருந்தும் நாம் போனால் அவர் கோபப்படமாட்டார் என்று எண்ணி நீ அவரிடமே செல்லுகின்றாய்!
— சாலமன் பாப்பையா

என் நெஞ்சமே! நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்ட போதும், அவர் வெறுக்க மாட்டார் என்று நினைந்து அவரிடமே செல்கின்றாயே! அதுதான் எதனாலோ?
— புலியூர்க் கேசிகன்

உறவு பாராட்டாதவர் என்று கண்டு அறிந்த பின்பும் அவர் வெறுக்கமாட்டார் என்று விரும்புகிறாயே என் நெஞ்செ.
— சிவயோகி சிவகுமார்

என்னெஞ்சே! நீ அன்புறாதாரைக் கண்ட விடத்தும் செற்றம் நீங்குவாரென அவர்மாட்டுச் செல்லாநின்றாய். இது தலைமகள் தலைமகன்மாட்டுச் செல்லக் கருதிய நெஞ்சோடு புலந்து கூறியது.
— மணக்குடவர்

(இதுவும் அது.) என் நெஞ்சு - என் நெஞ்சே; உறாதவர்க்கண்ட கண்ணும் - மேலும் நம்மாட்டு அன்புடையராகாதவரை உள்ளவாறு அறிந்த இடத்தும்; செறார் என அவரைச் சேறி - நாம் சென்றால் வெகுளார் என்பது பற்றி நீ அவர் மாட்டுச் செல்லாநின்றாய், இப்பெற்றியது மேலும் ஓர் அறியாமையுண்டோ? ('அவரை' என்பது வேற்றுமை மயக்கம் 'பழங்கண்ணோட்டம்பற்றி வெகுளார் என்பது கந்தாகச் சென்றாய், நீ கருதியது முடியுமோ'? என்பதாம்.).
— பரிமேலழகர்

English Couplet:

'Tis plain, my heart, that he 's estranged from thee;
Why go to him as though he were not enemy?.

Couplet Explanation:

my soul! although you have known him who does not love me, still do you go to him, saying "he will not be displeased.".

Transliteration (Tamil to English):

uraaa thavarkkanda kannum avaraich
cheraa-arenach chaeriyen nenju

மொத்தம் 133 அதிகாரங்கள்
1292 of 1330

மேலும் நெஞ்சொடு புலத்தல் குறள்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+