For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புத்தாண்டு உறுதிமொழி ரெடியா?

By Siva
Google Oneindia Tamil News

New Year Resolutions
புத்தாண்டு வந்தால் உறுதிமொழிகள் இல்லாமலா? ஒவ்வொரு புத்தாண்டும் நாமும் வகை, வகையான உறுதிமொழிகள் எடுத்துக் கொண்டு இருக்கிறோம். அதில் எத்தனை உறுதிமொழிகளை நிறைவேற்றுகிறோம் என்பது நமக்கு மட்டும் தான் தெரியும்.

சரி, போன வருஷம் எடுத்துக் கொண்ட உறுதி மொழிகளை விடுங்கள். இந்த புத்தாண்டின் டாப் 10 உறுதிமொழிகளைப் பார்ப்போம்,

1. இந்த ஆண்டு நான் எனது குடும்பத்தாருடன் அதிக நேரம் செலவிடப் போகிறேன். வாழ்க்கை எந்திரமயமானதில் நாம் அனைவரும் பணம் சம்பாதிப்பதில் தான் குறியாக உள்ளோம். அதை தவறு என்றும் கூறமுடியாது. வாழ்க்கைக்கு பணம் தேவை தான். அதே நேரம் குடும்பமும் முக்கியம். அதனால் இந்த ஆண்டு குடும்பத்தாருக்கு அதிக நேரம் ஒதுக்குவோமாக.

2. பிறருக்கு உதவுவோம். இன்றைய அவசர உலகில் ஓட்டத்திற்கே நேரத்தைக் காணோம். இதில் எங்கே அடுத்தவர்களுக்கு உதவுவது என்று தான் பலரும் நினைக்கின்றனர். வழியில் யாராவது அடிபட்டுக் கிடந்தால் கூட நமக்கெதற்கு வம்பு என்று ஓடிவிடுகிறார்கள். அந்த எண்ணத்தை மாற்றி அனைவருக்கும் உதவுவோமாக.

3. தம்மடிப்பதை நிறுத்துவோம். புகை வண்டி மாதிரி எப்பொழுது பார்த்தாலும் தம்மடிக்கும் பழக்கத்தை நிறுத்த பலர் நினைப்பார்கள். நினைப்பு நினைப்பாகவே தான் இருக்கும். அந்த நினைப்புக்கு இந்த வருடம் செயல்வடிவம் கொடுப்போமாக.

4. மதுபானத்தை தொடமாட்டோம். சொல்வதற்கு நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் அதை கடைபிடிப்பது தான் கஷ்டம் என்கின்றனர் 'குடி' மகன்கள் ('மகள்களும்தான்'). குடிப்பதனால் உடல் நலத்தையும் கெடுத்துக் கொண்டு, குடும்ப நிம்மதியையும் அழிப்பதை நிறுத்துவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள். புத்தாண்டு அன்று தானே உறுதிமொழி எடுத்தேன் புத்தாண்டு முடிந்துவிட்டது நான் குடிக்கப் போகிறேன் என்று ஓடிவிடாதீர்கள்.

5. டிவி சீரியல் பார்ப்பதை குறைத்துக் கொள்வேன். இதுக்கு கூடவா உறுதிமொழி என்று கேட்காதீர்கள். இன்றைய பெண்களில் பலர் டிவி சீரியலுக்கு அடிமையாகிவிட்டனர். சாப்பாடு இல்லாமல் கூட இருப்பார்கள் ஆனால் டிவி சீரியல் இல்லாமல் அவர்களால் இருக்க முடியாது. அதனால் பெண்களே இந்த ஆண்டு சீரியல் பார்ப்போம் ஆனால் அதற்கு அடிமையாக மாட்டோம் என்று உறுதிமொழி எடுங்கள். இந்த உறுதிமொழியைப் படிக்கும் கணவன்மார்கள் முகத்தில் தான் எவ்வளவு மகிழ்ச்சி அடடா.

6. வீண் செலவைக் குறைப்போம். நமக்கு என்னென்ன பொருட்கள் தேவைப்படுகிறதோ அதை மட்டும் வாங்குங்கள். தேவையில்லாமல் கண்ணில் படுவதை எல்லாம் வாங்கிவிட்டு பணமில்லாமல் கையைப் பிசைய வேண்டாம்.

7. உங்களுக்காக வாழுங்கள். நம்மில் பெரும்பாலானோர் அடுத்தவர்களுக்காகத் தான் வாழ்கிறோம். அதாவது தனக்கு விருப்பப்பட்டதை செய்யாமல் அவர் என்ன சொல்வாரோ, இவர் என்ன சொல்வாரோ என்று நினைத்து வாழும் போலித்தனத்தை விடுவோமாக. உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதைச் செய்யுங்கள்.

8. அடுத்தவர்கள் மனதைப் புன்படுத்த மாட்டேன். உனக்கு என்ன நாக்கா இல்லை தேள் கொடுக்கா என்று கேட்கும் அளவுக்கு சிலர் பேசுவது மனதைக் காயப்படுத்தும். அப்படி பட்டவர்கள் இனிமையாகப் பேசுவோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள்.

9. அவநம்பிக்கையை தூக்கிஎறிவேன். எதையடுத்தாலும் உச்சு கொட்டாமல் என்னால் முடியும், நிச்சயம் முடியும் என்று எதிலும் நம்பிக்கையுடன் செயல்படுவோமாக.

10. உடல் நலத்தை பேணுவோமாக. ஃபாஸ்ட் புட் அது இது என்று சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்கொள்ளாமல், சத்தானதை சாப்பிடுவோமாக. உடல் நலம் தான் மனிதனுக்கு மிகவும் முக்கியமான ஒன்று என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

புத்தாண்டையொட்டி 'குவார்ட்டர், ஹாப், புல்' என்று முழுசாக போதைக்குள் போய் 'ரிட்டர்ன்' ஆன பிறகும் இந்த உறுதிமொழிகளில் நீங்கள் உறுதியாக இருந்தால், நீங்கதாங்க அடுத்த ஆண்டின் சிறந்த மனிதர்...!!!

English summary
We are just few days away from new year. It is high time to take resolutions. Above is the list of top 10 resolutions to be taken on new year. There is no use in taking resolutions without implementing them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X