For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

122. கனவுநிலை உரைத்தல்

By Staff
Google Oneindia Tamil News

காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.

(1211)

விளக்கம்:

பிரிவால் வருந்திய நான் அயர்ந்து கண் உறங்கியபோது, காதலர் அனுப்பிய தூதொடும் வந்த கனவுக்கு, யான் விருந்தாக என்னகைம்மாறு செய்யப் போகிறேன்.


கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்.

(1212)

விளக்கம்:

யான் விரும்பும் போது என் கண்கள் தூங்குமானால், கனவில் வந்து தோன்றும் காதலருக்கு, யான் தப்பிப் பிழைத்திருக்கும்உண்மையைச் செய்வேன்.


நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.

(1213)

விளக்கம்:

நனவிலே வந்து நமக்கு அன்பு செய்யாதிருக்கின்ற காதலரை, கனவிலாவது கண்டு மகிழ்வதனால்தான், என் உயிரும் இன்னமும்போகாமல் இருக்கின்றது.


கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.

(1214)

விளக்கம்:

நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடிக்கொண்டு வருவதற்காகவே, அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் கனவில் வந்துநமக்குத் தோன்றுகின்றன.


நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.

(1215)

விளக்கம்:

முன்பு நனவில் கண்ட இன்பமும், அந்தப் பொழுதளவிலேயே இனிதாயிருந்தது; இப்பொழுது காணும் கனவும், காணும் அந்தப்பொழுதிலே நமக்கு இனிதாகவே உள்ளது.


நனவென ஒன்றில்லை யாயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.

(1216)

விளக்கம்:

நனவு என்று சொல்லப்படும் ஒன்று இல்லையானால், கனவில் வருகின்ற நம் காதலர் நம்மை விட்டு எப்போதுமே பிரியாதிருப்பார்அல்லவோ.


நனவினால் நல்காக் கொடியார் கனவினான்
என்னெம்மைப் பீழிப் பது.

(1217)

விளக்கம்:

நனவில் வந்து நமக்கு அன்பு செய்வதற்கு அன்பு செய்வதற்கு நினையாத கொடுமையாளரான காதலர், கனவிலே வந்து மட்டும்நம்மை வருத்துவதுதான் எதனாலோ?


துஞ்சுங்கால் தோள்மேல ராகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.

(1218)

விளக்கம்:

தூங்கும்போது கனவிலே என் தோள் மேலராகக் காதலர் வந்திருப்பார்; விழித்து எழும்போதோ, விரைவாக என் நெஞ்சில்உள்ளவராக இருப்பார்.


நனவினால் நல்காரை நோவார் கனவினாற்
காதலர்க் காணா தவர்.

(1219)

விளக்கம்:

கனவிலே காதலரை வரக் காணாத மகளிரே, நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் குறித்து வருத்தப்பட்டு, மனம் நொந்துகொள்வார்கள்.


நனவினால் நந்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.

(1220)

விளக்கம்:

நனவிலே நம்மை விட்டுப் பிரிந்து போனார் என்று அவரைப் பற்றி இவ்வூரார் பழித்துப் பேசுகின்றார்களே! இவர்கள் எம்போல்கனவில் தம் காதலரைக் காண்பதில்லையோ ?

அதிகாரங்கள்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X