For Daily Alerts
Just In
வருவீர்களா...?
- அனாமிகா பிரித்திமா
இது நம் ஒப்பந்தம்...
நினைவிருக்கிறதா?
உங்களிடம் என் மனதை கொட்டும் போது...
சொன்னது...
உங்களிடம் என்னை முழுதாய் கொடுத்தபோது...
சொன்னது...
என்னிடம் இனி (இன்று) ஒன்றும் இல்லை...
கொடுப்பதற்கு...
வெறும் இரத்தமும், சதையும் என் உயிரை ...
தக்க வைத்துக்கொண்டிருக்கிறது...
வருவீர்களா?...
என் உயிர் பிரியும் நேரமாவது வருவீர்களா?
என்னை கட்டி அணைக்க அல்ல...
என்னை கழுவி புதைப்பதற்காவது?
உங்களிடம் கொடுத்த என்னை வேறு எவரும்...
தொடுவதைக் கூட என்னால் அனுமதிக்க இயலாது...
இது நம் ஒப்பந்தம்...
திருமணமான புதிதில்...
நான் சொன்னது... நீங்கள் இன்று மறந்தது...
வருவீர்களா?
- அனாமிகா பிரித்திமா(anamikapritima@yahoo.com)