Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆனி திருமஞ்சன விழா..சிதம்பரம் நடராஜர் கோவிலில் குவிந்த பக்தர்கள்.. சிவ ஆலயங்களில் மகா அபிஷேகம்

ஆனி திருமஞ்சன திருவிழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சிதம்பரம்: சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில் ஆகாயத்தலமாக போற்றப்படும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஆனி திருமஞ்சன விழா கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை ஆயிரம் கால் மண்டபத்தில் நடராஜருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மகா அபிஷேகம் நடைபெற்றதை ஏராளமான பக்தர்கள் கண் குளிர தரிசனம் செய்தனர்.

சிதம்பரத்தில் ஆடும் ஆனந்தத் தாண்டவம், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்தொழிலையும் உணர்த்துகிறது. சிதம்பரத்தில் நடராஜருக்கு வலப்பக்கத்தில் சிதம்பர ரகசியம் உள்ளது. இதேபோல், திருவாரூரில் தியாகராஜர் திருமேனியே ரகசியம் கொண்டது. இந்த இரண்டு பெருமான்களின் நடனத்தையும் பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாத முனிவரும் தரிசிப்பதாக ஐதீகம்.

Aani Thirumanjana festival..devotees throng Chidambaram Nataraja temple..maha abhishekam in Shiva temples

ஸ்ரீநடராஜரையும், அன்னை ஸ்ரீசிவகாமியையும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்வார்கள். அங்கே அவருக்கு திருமஞ்சனம் எனப்படும் அபிஷேகங்கள் நடைபெறும். பிறகு இருவரும் ஆனந்த நடனம் புரியும் அற்புத காட்சியைத் தரிசிப்பார்கள் பக்தர்கள். ஆனந்த நடனம் ஆடியபடியே, சித்சபையில் எழுந்தருள்வார்கள். இதைக் காணக் கண்கோடி வேண்டும்.

உத்தராயண காலத்தின் கடைசி மாதமான ஆனி மாதம் தேவர்களின் மாலைப்பொழுதாகும். வெப்பம் அதிகமாக இருக்கும். பங்குனி முதல் ஆனி வரை பரவிய உஷ்ணங்களை தீர்த்துக்கொள்ள இறைவன் நடராஜருக்கு குளிர குளிர ஆனி மாதம் உத்திரம் நட்சத்திர நாளில் அபிஷேகம் நடைபெறும்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டு தோறும் ஆனி திருமஞ்சன விழா நடந்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் விழா பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன விழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது.
கடந்த 1ஆம் தேதி தெருவடைச்சான் உற்சவம் நடைபெற்றது.

ஆனி திருமஞ்சன தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அப்போது கைலாய வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நிலையை வந்தடைந்ததும் அங்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. அதன் பின்னர் நடராஜர், சிவகாமசுந்தரி ஆகிய சாமிகள் ஆயிரம்கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு தீபாராதனைக்கு பிறகு மகா அபிஷேகம், சொர்ணாபிஷேகம், லட்சார்ச்சனை நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆனி திருமஞ்சன விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை ஆயிரம் கால் மண்டபத்தில் நடராஜருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மகா அபிஷேகம் நடைபெற்றது. இன்று மதியம் 2 மணிக்கு பஞ்ச மூர்த்தி தீர்த்தவாரி நடக்கிறது.

பிற்பகல் 3 மணி முதல் 4 மணிக்குள் சிவகாம சுந்தரி சமேத நடராஜமூர்த்தி ஆயிரங்கால் மண்டபத்துக்கு புறப்பட்டு முன்முகப்பு மண்டபத்தில் உள்ள நடன பந்தலில் 3 முறை முன்னுக்குப்பின்னும் சுற்றி வந்து நடனமாடி பக்தர்களுக்கு ஆனி திருமஞ்சன தரிசன காட்சி அருள்பாலிப்பார்கள். அதனை தொடர்ந்து சித்சபை ரகசிய பிரவேசம் நடைபெறுகிறது. நாளைய தினம் முத்துப்பல்லக்குடன் விழா நிறைவடைகிறது.

ராமேஸ்வரம் ஆனி திருமஞ்சன விழா

காசியைப் போல புண்ணியம் நிறைந்த ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் இன்று ஆனி திருமஞ்சன திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது. இத்திருவிழாவை முன்னிட்டு கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் 1 லட்சம் ருத்ராட்சைகளால் ஆன மண்டபத்தில் வீற்றிருக்கும் நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதன் பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளை தரிசனம் செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+