For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிசம்பர் 21ல் நிகழும் வியாழன் சனி கூட்டணி - வானில் தோன்றும் கிறிஸ்துமஸ் நட்சத்திரம்

சூரிய குடும்பத்தில் உள்ள இரண்டு மிகப்பெரிய கிரகங்களான வியாழனும் சனியும் ஒன்றுடன் ஒன்று நெருங்கும் போது பெரிய நட்சத்திரம் போல ஒளி தோன்றும். இது கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: 2020ஆம் ஆண்டின் இறுதியில் வானத்தில் ஒரு அதிசயம் நிகழப்போகிறது. நவ கிரகங்களில் மிகப்பெரிய கிரகங்களான வியாழனும் சனியும் டிசம்பர் 21ஆம் தேதி நெருங்குகின்றன. ஜோதிடப்படி இப்போது சனியும் குருவும் மகர ராசியில் இணைந்திருக்கிறது. வான் மண்டலத்தில் நிகழும் அரிய நிகழ்வானது 800 ஆண்டுகளுக்கு பிறகு நிகழப்போவதால் வானியல் ஆய்வாளர்கள் இந்த நிகழ்வைக் காண ஆர்வத்துடன் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்.

டிசம்பர் 21ஆம் தேதி வியாழனும் சனியும் இணையும் அந்த நாளில் வானில் அதிசய நட்சத்திரம் தோன்றும் என்றும் இதனை கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்றும் அழைக்கின்றனர். அன்றைய தினம் நீண்ட இரவாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

21ஆம் தேதியன்று தெளிவான வானிலை இருந்தால் இந்த கிறிஸ்துமஸ் நட்சத்திரத்தை உலகில் எந்த பகுதியில் இருந்தும் காணலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

குரு சனி கூட்டணி

குரு சனி கூட்டணி

சூரியக் குடும்பத்தில் இருந்து பல மைல் தூரத்தில் உள்ள சனி, வியாழன் ஆகிய இரு கோள்களும், 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒன்றுக்கொன்று அருகருகே சந்திக்கும்பொழுது, ஏற்படும் ஒளி இணைப்பே இந்த நட்சத்திரம் போன்ற ஒளி. இதுவே, கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

வானில் ஒளிர்ந்த நட்சத்திரம்

வானில் ஒளிர்ந்த நட்சத்திரம்

இயேசு பிறந்தபோது வானில் தோன்றிய பிரகாசமான ஒரு நட்சத்திரத்தை பின் தொடர்ந்து சென்று ஞானியர் சிலர் குழந்தை இயேசுவை பார்த்ததாக பைபிளில் கூறப்படுகிறது. அப்போது தோன்றிய நட்சத்திரம் தான் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

வானத்தில் அதிசய நிகழ்வு

வானத்தில் அதிசய நிகழ்வு

பூமியிலிருந்து பார்க்கும் பொழுது இரண்டு நட்சத்திரங்கள் ஒரு சேர பிரகாசமாகக் காட்சியளிப்பதைப் போன்று தோன்றும் இந்த நிகழ்வு, மிக அரிதிலும் அரிதானது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இதற்கு முன்பு, இந்த அரிய நிகழ்வானது 1226ஆம்ஆம் ஆண்டு நிகழ்ந்துள்ளது.

நட்சத்திரம் தெரியலையே

நட்சத்திரம் தெரியலையே

1226ஆம் ஆண்டுக்கு பிறகு வியாழனும் சனியும் சந்தித்துக் கொண்ட நிகழ்வு மீண்டும் 1623ஆம் ஆண்டு தோன்றியிருக்க வேண்டும். அப்போது இருந்த சீதோஷண நிலைகள் காரணமாக கிறிஸ்துமஸ் நட்சத்திரம் தெரியாமல் போனதாம்.

டிசம்பர் 21ல் பார்க்கலாம்

டிசம்பர் 21ல் பார்க்கலாம்

வரும் 21ஆம் தேதி வியாழன்-சனி சந்திக்கும் ஒளி இணைப்பு தோன்ற இருப்பதாக வானியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
டிசம்பர் 20 ஆம் தேதி சூரியன் மறைவிலிருந்து 22ஆம் தேதி சூரியன் உதயமாகும் வரை, இந்த நிகழ்வு நடக்கும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.

வானில் அதிசயத்தை பாருங்கள்

வானில் அதிசயத்தை பாருங்கள்

800 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழப்போகும் அதிசயத்தைக் காண வானியல் விஞ்ஞானிகள் ஆர்வமாக உள்ளனர்.
21ஆம் தேதி இரவே தெளிவாக கிறிஸ்துமஸ் நட்சத்திரத்தைக் காணமுடியும். அதுவும் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் டெலஸ்கோப், பைனாக்குலர் மூலம் அதிசய நிகழ்வைக் கண்டு ரசிக்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
Two of our solar systems largest planets, Jupiter and Saturn, will look like double planet just after sunset on the evening of December 21, the beginning of the winter solstice. The two planets will line up to create what is known as the Christmas Star or Star of Bethlehem.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X