Dhanusu: தனுசு ராசியை வச்சு செய்யப் போகும் கிரகங்கள்.. கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி
மார்ச் மாத பலன்கள்: பிப்ரவரி மாதம் நிறைவடைந்து மார்ச் மாதம் பிறந்துள்ளது. மார்ச் மாதத்தில் சந்திரகிரகணம் நேற்று நிறைவடைந்துள்ளது. மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. முக்கிய கிரகங்களின் மாற்றம் நடைபெறும் நிலையில், இந்த மார்ச் மாதத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
மார்ச் மாதம் ஆரம்பிக்கும்போதே சுக்கிரன் தனது உச்ச வீடான சிம்மத்தில் அமரப்போகிறார். உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் சுகங்களையும், செளபாக்கியங்களையும் தரக்கூடிய மாதமாக இருக்கும். 13 ஆம் தேதிக்குப் பிறகு குரு பகவான் வக்கிர நிவர்த்தி அடையவுள்ளார். 22 ஆம் தேதி செவ்வாயும் அமருகிறார். 14 ஆம் தேதி சூரியன் சனியோடு இணைந்து மீனத்தை நோக்கி பயணிக்கப் போகிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியன், சனி, செவ்வாய் இணைவுகள் நிகழப் போகிறது.

5 ஆம் வீட்டில் கேது, 11 ஆம் வீட்டில் ராகு இருக்கிறார். இந்த கிரக நிலைகளின் அடிப்படையில் இந்த மாதம் பிறக்கிறது. சந்திரன் தன்னுடைய பயணத்தை தனது சொந்த வீடான கடகத்தில் இருந்து ஆரம்பிக்கிறார். அந்த வகையில், இந்த மார்ச் மாதத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
தனுசு
தனுசு ராசியினருக்கு மார்ச் மாதத்தில் 3 மிகப்பெரிய பெயர்ச்சிகள் நிகழ்கின்றன. கும்பத்தில் இருந்த சுக்கிரன் மீனம் ராசிக்குப் போகிறார். 6க்கு உடைய சுக்கிரன் 3 ஆம் இடத்தில் மறைந்து விபரீத ராஜயோகம் பெற்றிருந்தார். அதனால் பல்வேறு நன்மைகள் கிடைத்திருக்கும். இப்போது சுக்கிரன் 4 ஆம் இடத்துக்குச் சென்றுள்ளார். 9 ஆம் இடத்து சூரியன் 16 ஆம் தேதி 4 ம் இடத்துக்கு வரும 16 ஆம் தேதி செல்கிறார். சனி பகவானும் 4 ஆம் இடத்துக்குச் சென்றுள்ளார்.
எச்சரிக்கை
3 ஆம் இடமான கும்பத்தில் செவ்வாய், புதன், ராகு ஆகியோர் இருக்கின்றனர். முக்கியமான முதலீடுகளைச் செய்யாமல் இருப்பது நல்லது. அமைதி காப்பது நல்லது. 3 ஆம் இடத்தில் ராகு பகவான் அமர்ந்து ராஜயோகத்தைக் கொடுப்பார். இந்த மார்ச் மாதம் உங்களுக்கு எச்சரிக்கையான மாதமாக இருக்கும். தனுசு ராசியினர் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
ஆரோக்கியம்
ரத்த அழுத்தம் அதிகரிக்கும். நிறைய விமர்சனங்கள், கிசு கிசு, அவதூறு ஏற்படும். 4 ஆம் இடத்தில் சனியும், சுக்கிரனும் வரும்போது மிகவும் மன அழுத்தம், டென்ஷனாகும் காலகட்டமாக இருக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. கோபத்தில் வார்த்தைகளை விட்டுவிடக் கூடாது. மேலதிகாரிகள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.
வார்த்தையில் கவனம்
உங்களை மீறி வார்த்தைகள் வரும் என்பதால் வேலை விஷயத்தில் கவனம் தேவை. கார் வாங்கும் யோகம் உண்டாகும். 6 ஆம் இடத்து சுக்கிரனோடு 4 ஆம் இடத்து சனி சம்பந்தப்படுவதால் கடன் வாங்கி கார் வாங்கும் யோகம், ஹவுஸிங் லோன் வாங்குவது போன்ற அமைப்புகள் உண்டு. சுக ஸ்தானம் கெடுவதால் கவனம் தேவை. சனி பகவானை வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும்.
குரு வக்கிர நிவர்த்தி
குரு வக்கிர நிவர்த்தி மார்ச் 12 ஆம் தேதி நடைபெற்று ஏழாம் இடத்தில் இருப்பதால் வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்கள், பார்ட்னர் சம்பந்தப்பட்ட விஷயங்கள், புதிய முயற்சிகள் அனைத்தையும் மேற்கொள்ளலாம். ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். 12 ஆம் தேதி வரை பெரிய நல்ல காரியங்கள் ஏற்படாது. அதற்குப் பிறகு அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
வழிபாடு
வேலையில் அதிக டென்ஷன் இருக்கும். 3 ஆம் இடத்தில் முக்கிய கிரகங்கள் எல்லாம் மறைவதால் கோர்ட், வழக்கு போன்ற பெரிய விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. சொத்துகளில் கையெழுத்து இடுவதை தவிர்ப்பது நல்லது. எல்லா நல்ல விஷயங்களையும் ஒத்திவைப்பது நல்லது. இந்த மாதம் சனி பகவான் வழிபாடு செய்வது நன்மை. ராசியான திசை மேற்கு, நீலக்கல் மோதிரம் அணிவது நன்மை பயக்கும்.
-
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: மிதுன ராசியினர் ஜொலிக்கப் போறீங்க.. ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேறும் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ரிஷப ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. சனியின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. நல்லவை நடக்கும் காலம் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!!












Click it and Unblock the Notifications