For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எந்த திதியில் மருந்து சாப்பிட்ட சீக்கிரம் நோய் குணமாகும் தெரியுமா - யோகம் தரும் திதிகள்

திதி என்ற வடமொழிச் சொல்லுக்கு தொலைவு என்று அர்த்தம். திதி என்பது வானவெளியில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே ஏற்பட்ட தூரத்தின் பெயராகும்.

Google Oneindia Tamil News

சென்னை: திதி என்பது சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரத்தை குறிக்கும். சுக்ல பட்சம், கிருஷ்ணபட்சம் என மொத்தம் முப்பது திதிகள் உண்டு. அமாவாசையை அடுத்து சதுர்த்தசி வரையிலான 15 திதிகள் வளர் பிறை (சுக்லபட்சம்) காலமாகும். பௌர்ணமியை அடுத்து சதுர்த்தசி வரையிலான 15 திதிகள் தேய்பிறை காலமாகும்.

அமாவாசை, பவுர்ணமி ஆகிய இரண்டு திதிகள் தவிர மற்ற பதினான்கு திதிகளினால் சில சுப அசுபப் பலன்கள் ஏற்படக்கூடும். அதேபோல் சில கிழமைகளில் சில திதிகள் வந்தால் சுபப் பலன்களும், அசுபப் பலன்களும் ஏற்படும்.

Importance of Tithi

ஞாயிறு-அஷ்டமி, திங்கள்-நவமி, செவ்வாய்-சஷ்டி, புதன்-திரிதியை; வியாழன்-ஏகாதசி, வெள்ளி-திரயோதசி, சனி-சதுர்த்தசி திதி. இத்தகைய நாட்களில் வரும் திதிகளில் எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும் வெற்றி கிடைக்கும்.

ஞாயிறு-சதுர்த்தசி, திங்கள்-சஷ்டி, செவ்வாய்-சப்தமி, புதன்-துவிதியை, வியாழன்-அஷ்டமி, வெள்ளி-நவமி, சனி-சப்தமி மேற்கூறியபடி குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட திதிகள் வரும்போது அந்த நாட்களில் நற்காரியங்கள் செய்வதை தவிர்ப்பது அவசியம். ஏனெனில் அன்று செய்யப்படும் நற்காரியங்கள் பலன் அளிக்காது.

Importance of Tithi

வளர்பிறை, தேய்பிறை ஆகிய காலங்களில் சில திதிகளுக்கு இரண்டு கண்கள் உண்டு. இத்திதிகளில் நற்காரியங்கள் செய்யலாம். எந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும் என்று பார்க்கலாம்.

பிரதமை திதியின் அதிபதி அக்னி பகவான் பிரதமை திதியில் உலோகம், மரம் இவைகளில் சிற்ப வேலைகள் பாய் முடைதல் படுக்கைக்கு சித்திர வேலை செய்தல் போன்றதும் ஆயுதம் கத்தி போன்றது செய்யவும்

நீங்க அறிவாளியா? கோடீஸ்வரர் ஆகும் யோகம் இருக்கா? - உங்க கால் பெருவிரல் ரேகை சொல்லும் ரகசியம் நீங்க அறிவாளியா? கோடீஸ்வரர் ஆகும் யோகம் இருக்கா? - உங்க கால் பெருவிரல் ரேகை சொல்லும் ரகசியம்

துவிதியை திதி அதிபதி துவஷ்டா தேவதை துவிதியை திதியில் விவாஹம், யாத்திரை, தேவதா பிரதிஷ்டை, ஆபரணம் தயாரித்தல், நற்கார்யம் வீடு கட்டுதல் நல்லது!

Importance of Tithi

திருதியை திதியின் அதிபதி பார்வதி திருதியை திதியில் செய்யத்தக்க காரியம் வீடு கட்டுதல, கிரஹ பிரவேஷம், பெண் சேர்க்கை ,பார்வதி தேவதை என்பதால் கிரஹ பிரவேஷம் ,பெண் சேர்க்கை பார்த்தல் போன்றதுக்கு உகந்த திதி ஆகும்!

சதுர்த்தி திதியின் அதிபதி விநாயகர். சதுர்த்தி திதியில் செய்யத்தக்க காரியம் வதம் செய்தல், மந்திரகட்டு, தெய்வகார்யம் மட்டும் செய்யவும் சதுர்த்தி திதியில் நற்காரியம் செய்ய ஒரு மாதத்தில் பின்னமாகும், [சங்கடகர சதுர்த்தி இதற்கு விதிவிலக்கு ஞாயிறு அன்று வரும் சதுர்த்தி திதி இதற்கு விதி விலக்கு

பஞ்சமி திதி அதிபதி சர்ப்பம் பஞ்சமி திதியில் செய்யத் தக்க காரியம் இத்திதியில் செய்யும் காரியம் நிலைத்து நிற்கும் என்பது ஐதீகம் அனைத்து விஷயத்துக்கும் எடுத்து கொள்ளலாம்.

சஷ்டி திதி அதிபதி முருகன் சஷ்டி திதியில் செய்யத் தக்க காரியம் வேலைக்கு சேர, பசுமாடு வாங்க, வீடு வாங்க, வாகனம் வாங்க, மருந்து தயாரிக்க நன்று, நன்மையும் தீமையும் சரி பாதி என்பது பொது கணக்கு.

சப்தமி திதி அதிபதி சூரியன் சப்தமிதிதியில் செய்யத் தக்க காரியம் வீடுகட்ட, உபநயனம், விவாஹம், தேவதா பிரதிஸ்டை, இடம் மாற்ற ம், விவசாயம், துவிதியை, திருதியை பஞ்சமி திதியில் சொல்லப் பட்ட விஷயம் மற்றும் பொதுவாக முன்னோர் கர்மாக்களை செய்ய உகந்தது இத்திதி!

அஷ்டமி திதி அதிபதி சிவபெருமான் அஷ்டமிதிதியில் செய்யத்தக்க காரியம் யுத்தம், தான்யம், வாஸ்து, சிற்பம், ரத்தினம், ஆபரணம், கிரையம் செய்ய மற்றும் கோவில் பூஜைக்கு உகந்த திதி இது!

நவமி திதியின் அதிபதி பாராசக்தி நவமிதிதியில் செய்யத்தக்க காரியம் பகைவரை சிறைபிடிக்க பகைவரை அழிக்க, நண்பர்களுக்குள் போதம் உண்டாக்க அதிக தோசம் உள்ள திதி அல்ல இது.

தசமி திதியின் அதிபதி ஆதிசேஷன் தசமி திதியில் தர்மகார்யம் செய்யவும், நாகதேவனுக்கு ராகுகேது பரிகாரம் செய்யவும், சரீரம் ஆரோக்கிய முயற்சி, மங்களகரமான காரியம், ஜலம், முக்கியஸ் தரை சந்திக்க உகந்தது இந்த திதி.

ஏகாதசி திதியின் அதிபதி தர்ம தேவதை ஏகாதசி திதியில் பொதுவாக உபவாசம் இருக்க உகந்தது இந்த திதி, விவாஹம், விவசாயம், ஆபரணம், வாஸ்து சாந்தி, சிற்பம் ஆகியவைகளை செய்யலாம்.

துவாதசி திதியின் அதிபதி விஷ்ணு துவாதசி திதியில் விருந்துண்ண தனம், தான்யம் சம்பாதிப்பது, சுபசெலவுகள், தர்ம காரியம், நிலையுள்ள நிலையில்லா அனைத்தும் செய்யலாம். திருவோணம் இணையும் துவாதசி திதி மட்டும் ஆகாது.

திரயோதசி திதியின் அதிபதி மன்மதன் திரயோதசி திதியில் அனைத்தும் செளபாக்கியமான மங்களகரமான காரியம், நாட்டியம், ஆபரணம், வாகன பயிற்சி மற்றும் நீண்ட கால திரு மண தடை இருக்கும் வரன் இந்த திதியில் பெண் பார்க்க திருமணம் சீக்கிரம் கைகூடும், திருமண தடையை நீக்கும் பரிஹாரம் செய்ய உகந்த திதி ஆகும்!

சதுர்தசி திதியின் அதிபதி கலிபுருஷன் சதுர்தசி திதியில் பல் சீரமைத்தல்,தைலம் தேய்க்க, யாத்திரை வளர்பிறையில் நாம் நாராயணனை வணங்கி வர வேண்டும்! தேய்பிறையில் சிவபெருமானை வணங்கி வரவேண்டும்! வளர்பிறை எனும் சுக்கில பட்ஷத்தில் மட்டும் சுபகார்யம் செய்யலாம் தேய்பிறையில் சுபகாரியம் தவிர்க்க வேண் டும்.

அமாவாசைக்கு முதல் நாளில், நம் முன்னோர் மற்றும் இறந்தவர்களுக்குண்டான காரியம் மட்டும் செய்யவும்! பௌர்ணமியில் செய்ய தக்கவை: கடவுள் வழிபாடு மட்டும் செய்யவும், யாகம் , மங்களகரமான கார்யம், புஷ்டி தரும். மருந்துண்ணல் , திருமண நிச்சயம், தேவதா பிரதிஷ்டை போன்றதை செய்யலாம்.

English summary
A tithi is a lunar day. There are 15 tithis in the waxing cycle of the moon shukla paksha, and there are 15 It shows important learning experiences in life.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X