திருக்கார்த்திகை தீபம் தமிழக கோவில்களில் கோலாகலம் - சொக்கனுக்கு உகந்த சொக்கப்பனை ஏற்றி வழிபாடு
கார்த்திகை தீப திருவிழாவை ஒட்டி சிவ, விஷ்ணு ஆலயங்களில் சொக்கப்பனை கொளுத்தும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
சென்னை: திருக்கார்த்திகை தீப திருவிழா இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிவ விஷ்ணு ஆலயங்களில் சொக்கப்பனை ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது. அழகர் கோவில், தஞ்சாவூர் பெரியகோவிலில் நடைபெற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
கார்த்திகை திருநாளில் சிவ ஆலயத்திலும் முருகன் ஆலயங்களிலும் இன்று மாலை சொக்கப்பனை கொளுத்துவார்கள். சிவபெருமான் அடிமுடி தெரியாவண்ணம் பிரம்மா, விஷ்ணுவுக்கு காட்சி அளித்ததையும் நினைவூட்டும் விதமாகவும், சொக்கப்பனை ஏற்றப்படுவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. சிவனுக்கு சொக்கன் என்ற பெயரும் உள்ளதால் சொக்கப்பனை என்ற சொல் ஏற்பட்டது.
கார்த்திகை பவுர்ணமி தினமான இன்று தமிழகத்தில் திருக்கார்த்திகை திருவிழா கொண்டாடப்படுகிறது. சிவ ஆலயங்களிலும் முருகன் ஆலயங்களிலும் இன்று மாலை ருத்ர தீபம் ஏற்றப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது இதில் ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர். இன்று கோவிலில் லட்ச தீபம் ஏற்றப்படுகிறது.

சொக்கப்பனை விழா
தஞ்சை பெரிய கோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாய பெருவுடையார் ஆலயத்தில்
திருக்கார்த்திகை தினத்தினை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் பெரிய நாயகி அம்மன் பெருவுடையார் சுவாமி பல்லக்கில் எழுந்தருளி மேள தாளங்கள் முழங்க சுவாமி புறப்பாடு நடைபெற்று பெரிய கோவில் முன்பு சுவாமிக்கு தீபாரதனை காட்டப்பட்டு சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

தேவ மரம் பனை
கற்பக தருவான பனை பனை மரம் கல்பதரு என்றழைக்கப்படுவது. தேவமரம் என்றும் அழைக்கப்படுவது. பனை மரத்தின் வேர் முதற்கொண்டு நுனி வரை அனைத்துப் பொருட்களும் மனித வாழ்க்கைக்கு உதவுகின்றது. வேறு எந்த மரத்திற்கும் இல்லாத சிறப்பு பனை மரத்திற்கு மட்டும் உண்டு.

முக்தி நிலை
பனை ஓலை பச்சையாக இருந்தாலும் தீ பட்டவுடன் கொழுந்துவிட்டு எரியும் தன்மை உடையது. பனை மரத்தினைப் போல, வாழ்க்கை முழுவதும் பிறருக்கு உதவியாக இருந்தால், ஸதேக முக்தி அதாவது இந்த வாழ்க்கையிலேயே சுவர்க்கத்தைக் கண்டு, முக்தியை அடைய முடியும் என்பதைக் காட்டுவதற்காகவே சொர்க்கப் பனை அல்லது சொக்கப்பனை அமைந்துள்ளது.

அடிமுடி தெரியாத சிவன்
பனை ஓலை கொண்டு கோபுர வடிவில் செய்து அதனை ஏற்றுவதால் தெரியும் ஜோதியை தரிசனம் செய்வது பெரும் முக்தியைத் தரும் என்பது ஆன்றோர்கள் வாக்கு. சிவபெருமான் அடிமுடி தெரியாவண்ணம் பிரம்மா, விஷ்ணுவுக்கு காட்சி அளித்ததையும் நினைவூட்டும் விதமாகவும், சொக்கப்பனை ஏற்றப்படுவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

அமோக விளைச்சல் கிடைக்கும்
விஷ்ணு ஆலயங்களிலும் சொக்கப்பனை விழா நடைபெறுகிறது. ஸ்ரீரங்கம் ரங்காநாதர் கோவிலிலும் அழகரி கோவிலிலும் சொக்கப்பனை ஏற்றப்பட்டது. கோவில்களில் சொக்கப்பனை எரிந்து முடித்ததும், அதிலிருந்து பெறப்படும் கரியை காப்பாக நெற்றியில் பூசிக் கொள்வது வழக்கம். சாம்பலை எடுத்துச் சென்று வயல்வெளிகளில் தூவினால், அந்த முறை அமோக விளைச்சல் நிச்சயம் என்பது நம்பிக்கை.

திருவண்ணாமலை தீப திருவிழா
கார்த்திகை தீபம் கொண்டாடப்படும் திருவண்ணாமலையில் சிவமாக காட்சி தரும் மலை மீது மகா தீபம் ஏற்றப்படுவதால் சொக்கப்பனை கொளுத்தும் வழக்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications