Magaram: மகர ராசிக்கு விபரீத ராஜயோகம்.. தொட்டதெல்லாம் துலங்கும்.. ஆனா நம்பி ஏமாறுவீர்கள் கவனம்
மார்ச் மாத பலன்கள்: பிப்ரவரி மாதம் நிறைவடைந்து மார்ச் மாதம் பிறந்துள்ளது. மார்ச் மாதத்தில் சந்திரகிரகணம் நேற்று நிறைவடைந்துள்ளது. மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. முக்கிய கிரகங்களின் மாற்றம் நடைபெறும் நிலையில், இந்த மார்ச் மாதத்தில் மகர ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
மார்ச் மாதம் ஆரம்பிக்கும்போதே சுக்கிரன் தனது உச்ச வீடான சிம்மத்தில் அமரப்போகிறார். உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் சுகங்களையும், செளபாக்கியங்களையும் தரக்கூடிய மாதமாக இருக்கும். 13 ஆம் தேதிக்குப் பிறகு குரு பகவான் வக்கிர நிவர்த்தி அடையவுள்ளார். 22 ஆம் தேதி செவ்வாயும் அமருகிறார். 14 ஆம் தேதி சூரியன் சனியோடு இணைந்து மீனத்தை நோக்கி பயணிக்கப் போகிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியன், சனி, செவ்வாய் இணைவுகள் நிகழப் போகிறது.

5 ஆம் வீட்டில் கேது, 11 ஆம் வீட்டில் ராகு இருக்கிறார். இந்த கிரக நிலைகளின் அடிப்படையில் இந்த மாதம் பிறக்கிறது. சந்திரன் தன்னுடைய பயணத்தை தனது சொந்த வீடான கடகத்தில் இருந்து ஆரம்பிக்கிறார். அந்த வகையில், இந்த மார்ச் மாதத்தில் மகர ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மகரம்
மகர ராசியினருக்கு எல்லா கிரகங்களும் 2 ஆம் இடமான தன ஸ்தானத்தில் இருக்கிறது. ராகு பகவான், சூரியன், புதன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் இருப்பதால் பண வரவு அற்புதமாக இருக்கும். எதைத் தொட்டாலும் மதிப்பாகும் காலகட்டம். எந்த விஷயத்தை செய்தாலும் அதில் பணம் வரும். 5க்கு உடைய யோகாதிபதி சுக்கிரன் 3 ஆம் இடத்தில் உச்சம் பெறுகிறார்.
யோகம்
சனி பகவானும் 3 இடத்தில் சுக்கிரனோடு சேருகிறார். எல்லா விதமான யோகங்களும் உண்டாகும். திருமண யோகம் உண்டாகும். சொந்த வீடு கட்டுவது, வாங்கும் யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். நினைத்த காரியங்கள் நடக்கும் யோகம் ஏற்படும். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு ஏற்றமான காலகட்டமாக இருக்கும்.
சேமிப்பு
எந்த காரியமாக இருந்தாலும் அது டக்கென்று நடக்கும். நிறைய அதிர்ஷ்டங்கள் வந்து சேரும். பணம் வருவதற்கான வழிகளைக் கண்டறிவீர்கள். நிறைய விஷயங்களை படிக்கும் யோகம் உண்டாகும். சேமிப்பின் மீது ஆர்வம் அதிகரிக்கும். படிப்பின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உங்களை நீங்கள் உருவாக்கிக் கொள்ள முடிவெடுப்பீர்கள். இந்த காலகட்டத்தைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.
முதலீடு
ஷேர் மார்க்கெட், இன்வெஸ்மென்ட் செய்பவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். சுக்கிர பகவான் உச்சத்தை தொடர்ந்து, 2 ஆம் இடத்தில் ராகு இருப்பது பெரும் பணம் வரும். பெரும் பணம் வருவதற்கான முதலீடுகளைத் தொடங்குவீர்கள். பிசினஸை டெவலப் செய்வீர்கள். தொழில், வியாபாரத்தை விரிவுபடுத்துவது, புதிய கிளைகளை தொடங்குவது போன்ற அமைப்பு உள்ளது.
அனுகூலம்
2 ஆம் இடத்தில் ராகு இருப்பதால் கொடுக்கல் வாங்கல் துறையில் இருப்பவர்களுக்கு அற்புதமான காலகட்டம். 2 ஆம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் இடம், நிலங்களை விற்பது, அதற்கு விளம்பரம் செய்வது போன்ற யோகம் உண்டாகும். 8க்கு உடையவர் 3 இல் மறைந்து விபரீத ராஜயோகத்தைக் கொடுக்கப் போகிறார். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களை செய்வீர்கள். அரசின் அனுகூலம் உண்டாகும்.
விபரீத ராஜயோகம்
12க்கு உரிய குரு பகவான் 6 இல் மறைந்து விபரீத ராஜயோகம், சூரியன் மறைவதால் விபரீத ராஜயோகம், சுக்கிரன் உச்சம் என அற்புதமான காலகட்டமாக இருக்கும். அனைத்து கிரகங்களும் 2 ஆம் இடத்தில் அமர்ந்துள்ளது என சகலவித யோகங்களும் உண்டாகும். நிலம், வீடு வாங்கும் யோகம் உண்டாகும். யார் எதை சொன்னாலும் நம்பும் காலகட்டம். அதனைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்கள் சொல்வதை கேட்டு தெரியாத தொழிலை செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
வழிபாடு
8க்கு உடைய சூரிய பகவான் 3 இல் மறைந்து விபரீத ராஜயோகம் பெறுவதால் சிவன் வழிபாடு, காலபைரவர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். பைரவருக்கு புணுகு சாற்றி வழிபாடு செய்வது நன்மையைத் தரும்.
-
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: மிதுன ராசியினர் ஜொலிக்கப் போறீங்க.. ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேறும் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ரிஷப ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. சனியின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. நல்லவை நடக்கும் காலம் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!!












Click it and Unblock the Notifications