For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மகாசிவராத்திரி... பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் மலையேர குவிந்த பக்தர்கள் கூட்டம்

மகாசிவராத்திரியை முன்னிட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு மலையேற அனுமதி கிடைத்துள்ளதால் வெள்ளியங்கிரி மலையேற வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Google Oneindia Tamil News

கோவை: மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு, கோவை மாவட்டத்திலுள்ள வெள்ளியங்கிரி மலையேற, 2 ஆண்டுகளுக்கு பின்பு பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதனால் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், கூடவே மலையேற 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவது பக்தர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Recommended Video

    மகாசிவராத்திரி... பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் மலையேர குவிந்த பக்தர்கள் கூட்டம்

    கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பூண்டி வெள்ளியங்கிரி சிவன் கோவிலுக்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரி அன்று பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் நாளை மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நேற்று முதல் வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு பக்தர்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மலையேறுவதற்கு அனுமதி என தகவல் அறிந்ததும் கோவை மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருப்பூர், ஈரோடு, மதுரை, சென்னை, திருச்சி உள்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    சிவராத்திரி விழாவை கோவிலுக்குள்தான் நடத்த வேண்டும்- எதிர்ப்பால் பின்வாங்கிய இந்துசமய அறநிலையத்துறை சிவராத்திரி விழாவை கோவிலுக்குள்தான் நடத்த வேண்டும்- எதிர்ப்பால் பின்வாங்கிய இந்துசமய அறநிலையத்துறை

    தென்கயிலாயம்

    தென்கயிலாயம்

    வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில். தென் கையிலாயம் என்றும் பக்தர்களால் பயபக்தியோடு அழைக்கப்படுவதுண்டு. அடிவார கோயிலில் இருந்து செங்குத்தான 6 மலைகளைக் கடந்து 7ஆவது மலையில் சுயம்பு லிங்கமாக உருவான வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.

    மகாசிவராத்திரி

    மகாசிவராத்திரி

    ஒவ்வொரு ஆண்டும், பிப்ரவரி முதல் மே மாதம் வரை உள்ள கோடை காலத்தில் மட்டுமே பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேற அனுமதிக்கப்படுவதால், மகாசிவராத்திரி, சித்திரை மாதப்பிறப்பு மற்றும் சித்ரா பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையேற வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிப்பதுண்டு. ஆனால், கொரோனா நோய்த் தொற்று காலத்திற்கு முன்பு வரை, ஆனால், கொரோனா நோய்த்தொற்று பரவல் மற்றும் வனவிலங்குகளின் நடமாட்டம் போன்ற காரணங்ளால், கடந்த 2 ஆண்டுகளாக மலையேற பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

    சிவ ஆலயங்களில் தரிசனம்

    சிவ ஆலயங்களில் தரிசனம்

    தற்போது நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால், கொரோனா கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாளை நாடு முழுவதும் மகாசிவராத்திரி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. அதை முன்னிட்டு, நேற்று முதல் வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பக்தர்களின் எண்ணிக்கை இன்றும் நாளையும் அதிக அளவில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    பல மாவட்ட பக்தர்கள் வருகை

    பல மாவட்ட பக்தர்கள் வருகை

    மலையேற அனுமதி அளிக்கப்பட்ட செய்தி வெளியானதும், கோவை மாவட்டம் மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களான திருப்பூர், ஈரோடு, மற்றும் மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மலையேற வந்த வண்ணம் உள்ளனர். மலை ஏறுவதற்கு முன்பு பக்தர்கள் அனைவரும் வனத்துறை சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின்னரே மலையேற அனுமதிக்கப்பட்டனர்.

    வனத்துறையினர் கண்டிப்பு

    வனத்துறையினர் கண்டிப்பு

    பக்தர்கள் வனப்பகுதிக்குள் செல்வதால். பிளாஸ்டிக் பைகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வைத்துள்ளார்களா? என்று உடமைகள் சோதனை செய்யப்பட்டு, பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்தால், அவை பறிமுதல் செய்யப்பட்ட பின்பே மலையேற அனுமதிக்கப்பட்டனர். அதோடு, மலையில் வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதால் தனியாக செல்லாமல் கூட்டமாக மலையேறவும், மிகுந்த எச்சரிக்கையோடும் மலையேறி தரிசனம் செய்து விட்டு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டனர்.

     மலையேற கட்டணம் வசூல்

    மலையேற கட்டணம் வசூல்

    இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், மலையேற கட்டணமாக 100 ரூபாய் வசூலிக்கப்படுகின்றது. இது நாள் வரையிலும் மலையேறி வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்பட்டதில்லை. ஆனால், தற்போது அதற்கும் கட்டணம் 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவது பக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

     கூட்டமாக செல்ல கோரிக்கை

    கூட்டமாக செல்ல கோரிக்கை

    மலையேறுவதற்கு முன்பு பக்தர்கள் அனைவரும் வனத்துறை சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு, சோதனை செய்யப்படுவார்கள். பின்னர் அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து வனப் பகுதிக்குள் செல்வதால் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்தவர்களிடம் அதனை பறிமுதல் செய்து விட்டு மலையேறுவதற்கு அனுமதித்தனர். வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் கூட்டமாக செல்ல வேண்டும். யாரும் தனியாக செல்ல வேண்டாம். மிகுந்த கவனத்தோடு சென்று திரும்ப வேண்டும் என்றும், குப்பைகளை ஆங்காங்கே வீசக் கூடாது என்றும் பக்தர்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தினர். 2 ஆண்டுகளுக்கு பிறகு மலையேற அனுமதி கிடைத்துள்ளதால் வெள்ளியங்கிரி மலையேற வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Devotees have been allowed to climb the Vellingiri hill in Coimbatore district after 2 years ahead of the Mahasivarathri festival. Despite the increase in the number of pilgrims, the charge of 100 rupees for the trek has shocked the devotees.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X