Kumbam: கும்ப ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. எந்த விஷயங்களில் எல்லாம் கவனம் தேவை.. முழு விவரம்
Masi Matha Palangal: 2026 ஆம் ஆண்டில் தை மாதம் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. மாசி மாதத்தில் கும்பம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 ஆம் ஆண்டில் கும்ப மாதம் பிறக்கவுள்ளது. கும்ப மாதம் என்பது மாசி மாதம் ஆகும். கும்பத்தில் சூரியன் வரக்கூடிய மாதமே மாசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல் மார்ச் 14 ஆம் தேதி வரையிலான இந்த மாதத்தில் நிறைய விசேஷங்கள் நடைபெறவுள்ளன. பிப்ரவரி 15 ஆம் தேதி மகா சிவராத்திரி நடைபெறுகிறது. 4 கால பூஜைக்கு தரிசனம் செய்வது, பசு நெய், நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது, அன்னதானத்திற்கு உதவி செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.

சனிப்பெயர்ச்சி
வாக்கியப்படி மார்ச் 6 ஆம் தேதி காலை 8.26 மணிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. பிப்ரவரி 17 ஆம் தேதி மயானக் கொள்ளை நடைபெறும். மார்ச் 3 ஆம் தேதி சந்திரகிரகணம் மாலை 3.30 மணி முதல் 6.47 வரை கிரகணம் நடைபெறுகிறது. இந்த காலகட்டத்தில் விரதம், வழிபாடு செய்வது நன்மையைத் தரும். இதைத்தொடர்ந்து, மாசி மகம் நடைபெறவுள்ளது.
கும்பத்தில் சூரியன் இருந்து தன் சொந்த வீட்டைப் பார்ப்பார். இந்த மாதத்தில் நடக்கப்போகும் விஷயங்கள் குறித்து பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்த மாசி மாதத்தில் கும்பம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்துப் பார்க்கலாம்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசிக்காரர்களுக்கு டாப் கிளாஸ் யோகம் உண்டாகும். உங்கள் ராசியில் தான் சூரியன் வந்திருக்கிறார். உத்தியோக மாற்றம், தொழில் மாற்றம், வியாபார மாற்றம், படிப்பு மாற்றம் போன்ற யோகங்கள் உண்டாகும். குடும்பத்தில் துணையின் தேக ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகளின் விஷயத்தில் அனுகூலம் உண்டாகும்.
யோகம்
பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், வியாபாரம், தொழிலில் அற்புதமான யோகம் உண்டாகும். சுப விரயங்கள் அடுத்தடுத்து நடக்கும் யோகம் உள்ளது. வாகனத்தில் அதிக முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பேப்பர் போடுவதை தவிர்ப்பது நல்லது. தொலைதூர பயணங்கள் வந்தாலும் எடுத்துக் கொள்வது நல்லது.
தானம்
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கெளரவம் பார்ப்பது, கோபப்படுவது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. சனிக்கிழமை தோறும் ஏழை எளிய மக்களுக்கு மதிய வேளைகளில் சாப்பாடு, எலுமிச்சை ஊறுகாய் தானமாகக் கொடுப்பது நன்மை பயக்கும். கோளார் பதிகத்தை சொல்வது, கேட்பது நன்மையைக் கொடுக்கும். முதலீடுகள் செய்து மகிழ்வீர்கள்
வரவு ஏற்படும்
அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். பழைய எதிரிகள் விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. தேவையில்லாத வம்பு, வழக்குகளில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் அதிக கவனமாக இருப்பது நல்லது. ஏற்றங்கள் அதிகமாக நடைபெறும் காலகட்டம். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்கும்.
கவனம்
இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருப்பது நல்லது. பழைய கூட்டாளிகளுக்கும், உங்களுக்கும் பிரச்சனை இருந்தால் அவர்களிடம் இணக்கமாகிக் கொள்வது நல்லது. தேவையில்லாமல் மற்றவர்களை வைத்துப் பேசுவதை தவிர்ப்பது நல்லது. ஏழரை சனி விலகாததால் கால் நகங்கள் வரை கவனமாக இருக்க வேண்டும்.
ஆரோக்கியம்
தடுக்கி விழுவது போன்றவை ஏற்படும் என்பதால் எச்சரிக்கை தேவை. நரம்பு, கண், கழுத்து, மயக்கம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள், முதுகுத் தண்டுவடம் தொடர்பான பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். காது, மூக்கு, தொண்டை தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.
-
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: மிதுன ராசியினர் ஜொலிக்கப் போறீங்க.. ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேறும் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ரிஷப ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. சனியின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. நல்லவை நடக்கும் காலம் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!!












Click it and Unblock the Notifications