பரபரப்பான அரசியல் மாற்றம் தரும் சூடாமணி சந்திர கிரஹணம்...

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூரியன் -பூமி -சந்திரன் அனைத்தும் ஒரே நேர் கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படும். அது இன்று இரவு ஏற்படுகிறது. பூமியின் நிழல் சந்திரனில் விழுவதால், சந்திரன் பிரகாசம் குறைந்து கருஞ்சிவப்பாக காட்சியளிக்கும். அதாவது, சூரியன் மாலை மறைந்த பிறகு அடிவானம் எந்த நிறத்தில் இருக்குமோ, அதுபோன்று சந்திரன் காட்சியளிக்கும்.

கிரஹணம்:

கிரஹணம்:

கிரஹணத்தை வானவியல் அடிப்படையில் விளக்க வேண்டுமென்றால், ஒரு வானியல் பொருள், வேறொரு பொருளினால் மறைக்கப்படுவது அல்லது ஒரு பார்வையாளர் பார்க்கும் போது, ஒரு பொருள் நகர்ந்து செல்லும் போது, ஏற்கனவே இருக்கும் பொருளை மறைப்பது போன்று தோன்றும் காட்சியாகும்.

சந்திர கிரஹனம்:

சந்திர கிரஹனம்:

பூமி, தன் அச்சில் 23 1/2 பாகை சாய்ந்துள்ளது. சூரியன் தன் அச்சில் 7 பாகை சாய்வாக சுற்றுகிறது. சந்திரனும் கூட 5 பாகை சரிவாக பூமியைச் சுற்றுகிறது. இந்த காலகதியில் பூமி, சூரியன் மற்றும் சந்திரன் இவை மூன்றும் எப்போதாவது, ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன. அப்படி அவை மூன்றும் நேர்கோட்டில் வரும்போது, ஏதாவது ஒன்று நம் பார்வையிலிருந்து மறைக்கப்படுகிறது. இதுதான் கிரகணம் என்று சொல்லப்படுகிறது. சூரிய கிரகணம், அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் முழு நிலவு நாளிலும் உண்டாகிறது. எல்லா முழு நிலா நாளிலும் சந்திர கிரகணம் உண்டாவது இல்லை.

கிரஹண காலம்:

கிரஹண காலம்:

நேரம் - கிரஹண ஆரம்ப காலம் இரவு 10:52

கிரஹண உச்சம் இரவு 11:50

கிரஹண மோக்ஷம் அதாவது கிரஹண முடிவுக்காலம் நள்ளிரவு 12:48 ( 8/ஆகஸ்ட் )

தர்ப்பணம் பண்ண வேண்டிய நேரம் இரவு 11:50 க்கு மேல் நள்ளிரவு 12:45க்குள்...

கிரஹண காலத்தில் கடைபிடிக்க வேண்டிய நியமங்கள்:

கிரஹணம் பிடிக்கும் போதும் விட்ட பிறகும் ஸ்நானம் செய்ய வேண்டும்.

திங்கட்கிழமை மதியம் 12 மணிக்குள் உணவு உட்கொள்ள வேண்டும். குழந்தைகளும் கர்ப்பிணிகளும் நோயுற்றவர்களும் கிரஹணம் விட்ட பிறகு ஸ்நானம் செய்ய வேண்டும்.

கிரஹண காலத்தில் கர்பினி பெண்கள் வீட்டினுள் கிரஹன கதிர்கள் படாத இடத்தில் பாதுகாப்பாக இருக்கவேண்டும். மேலும் உணவு பொருட்களில் கிரஹன கதிர்கள் தாக்காவண்ணம் தர்பையை போட்டுவைப்பதும் மரபு.

கிரஹன தோஷம் நீங்க சாந்தி செய்ய வேண்டிய நக்ஷத்திரங்கள்:

சாந்தி செய்யக்கூடிய நட்சத்திரகாரர்கள் - உத்ராடம், திருவோணம், அவிட்டம், ரோஹிணி, ஹஸ்தம்.அனைவரும் கிரகண நேரத்தில் ஜபம் செய்வது நல்லது. 100 மடங்கு புண்யத்தை கொடுக்கக் கூடியது.நதி ஸ்நானம், ஸமுத்ரஸ்நானம், தடாகஸ்நானம் என்பன மிகமிக விசேஷம்.

ஜோதிடமும் கிரஹணமும்:

ஜோதிடமும் கிரஹணமும்:

வானவியலின் அடிப்படையில் தான் ஜோதிடம் அமைந்திருக்கிறது என்றாலும் கிரஹணம் பற்றிய கருத்தில் வானிவியலும் ஜோதிடமும் சிறிது மாறுபட்டு நிற்கிறது.

வானவியலில் சூரியன் அல்லது சந்திரன் மீது ஏற்படும் நிழலை கிரஹணம் என கூறுகிறது. ஆனால் ஜோதிடத்தில் நிழல் கிரஹங்களான ராகு மற்றும் கேதுவும் சூரியன் மற்றும் சந்திரனோடு இனைவதை கிரஹணம் என கூறுகிறது.

சூரிய கிரகணம் ஏற்படும் அமாவாசை நாளில் - சூரியன், சந்திரன், ராகு ஒரே வீட்டில் இருக்கும். சந்திர கிரகணம் ஏற்படும். பௌர்ணமி நாளில் - சந்திரன் - ராகு, சந்திரன்-கேது, சூரியன்-ராகு, சூரியன்-கேது எதிர்எதிர் ராசிகளில் இருக்கும்.

எல்லா நேரங்களிலும் சூரியனும் சந்திரனும் ராகு அல்லது கேதுவோடு ஒரே வீட்டில் இனைந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என கூறுகிறார்கள் சில பஞ்சாங்க கணித வல்லுநர்கள். ஒரு குறிப்பிட்ட பாகை வித்தியாசத்தில் அடுத்தடுத்த வீடுகளில் நின்றாலும் கிரஹணம் நிகழும் என கூறியுள்ளனர்.

அதை தொடர்ந்து இன்று ஏற்படும் சந்திர கிரஹணத்தில் வாக்கிய பஞ்சாங்கபடி இனைவு பெற்றாலும் திருகணித பஞ்சாங்க படி இணைவு ஏற்படவில்லை. சந்திரன் மகர ராசியிலும் கேது கும்ப ராசியிலும் நிற்கும் அதே வேளையில் ராகு சிம்மத்திலும் சூரியன் கடகத்திலும் நிற்பது குறிப்பிடத்தக்கது. இத்தைய நிலையில்

திங்கட்கிழமையுடன் கூடிய பௌர்ணமியன்று கிரகணம் நேருவதால் சூடாமணி கிரகணம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

திடீர் அரசியல் மாற்றம் ஏற்படுத்தபோகும் கிரஹணங்கள்:

திடீர் அரசியல் மாற்றம் ஏற்படுத்தபோகும் கிரஹணங்கள்:

இன்றைய சந்திர கிரஹனத்தின்போது கால புருஷனின் மேஷ லக்னம் அமைந்து கர்ம ஸ்தானம் எனப்படும் மகர ராசியில் சந்திரன் சுயசாரத்தில் நின்று கிரஹணம் ஏற்படுபடுகிறது.

பொதுவாக பதினைந்து நாட்களில் இரண்டு கிரஹணங்கள் ஏற்படுவது ராஜாங்க விஷயங்களில் எதிர்பாராத மாற்றங்களை ஏற்படுத்தும் என பாரம்பரிய ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இயற்க்கை பேரிடர்கள், உற்பாதங்கள், பிரபலமானவர்கள் மரணம் ஆகியவற்றையும் ஏற்படுத்த கூடும் என கூறுகின்றன.

அரசியல் மாற்றத்திற்க்கு முக்கிய காரக கிரஹங்கள் ராகு-கேதுவாகும்.

இந்த இரு தொடர் கிரஹன காலங்களில் சூரியன் சந்தரன் ராகுகேதுகளின் பிடியில் பலமிழந்து நிற்கிறது.

மேலும் வரும் 17-8-2017 அன்று திருகணித பஞ்சாங்க படி முழுமையாக

ராகு சிம்மத்திலிருந்து கடகத்திற்க்கும் கேது கும்பத்திலிருந்து மகரத்திற்க்கும் செல்கின்றனர். அரசியலுக்கும் அரசியல் பதவிகளுக்கும் காரக கிரகங்கள் சூரியன் சந்திரன் மற்றும் கால புருஷனுக்கு பத்தாம் வீட்டதிபதியான சனைஸ்வர பகவானும் ஆவர்.

தற்போது அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலையில் பலரும் அரசியலில் மாற்றத்தை நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில்

இந்நிலையில் சந்திர கிரஹனம் சூரியனின் மறைவு நிலையிலும் சூரிய கிரஹனம் சூரியனின் ஆட்சி நிலையிலும் ஏற்படுகிறது.

அரசியல், அதிகாரம், அந்தஸ்து, கௌரவம், உயர்பதவிகள் ஆகியவற்றை குறிக்கும் சூரியன் ஆடி மாதம் பிறந்ததில் இருந்து தனது ராசிக்கு பன்னிரெண்டில் கடகத்தில் மறைந்து பலமிழந்து நிற்கிறது. மேலும் ஆண்மை, வீரம், பலம், அதிகாரம் ஆகியவற்றை தரும் செவ்வாய் நீசவீட்டில் பலமிழந்து நிற்க்கின்றது.

கர்ம காரகன் எனப்படும் சனைஸ்வர பகவானும் வக்கிர கதியில் காலபுருஷனுக்கு எட்டாம்வீடு மற்றும் பகைவீடான விருச்சிகத்தில் நிற்க்கின்றது. இந்நிலையில் ராகு சிம்மத்திலிருந்து கடகத்திற்க்க்கும் கேது கும்பத்திலிருந்து மகரத்திற்க்கும் பெயர்வது அரசியலில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கலாம்.

நீசமடைந்த செவ்வாயோடு ராகு சேர்க்கை பெற்று கேதுவின் பார்வை ஏற்படுவதால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து பல புரட்சியாளர்கள் தோன்றி யுத்தம் ஏற்படவும் வாய்பிருக்கிறது.

End of the World on September 28 with 'blood moon'?
கோவில் நடை சாத்தப்படுகிறது

கோவில் நடை சாத்தப்படுகிறது

கிரகணத்தின் போது விரதம் இருப்பதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். கிரகணத்தின்போது கருவுற்ற பெண்களை வெளியே அனுப்ப மாட்டார்கள். முக்கியமாக அனைத்து கோவில்களின் நடைகளும் சாத்தப்படுவது வழக்கம். கிரகணம் முடிந்த பின்னர் கோவில்களை கழுவி சுத்தம் செய்வார்கள். சந்திர கிரகணம் காரணமாக திருப்பதி கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களின் நடைகள் சாத்தப்பட உள்ளன. இதற்காக ஒவ்வொரு கோவில் முன்பாக போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. சந்திர கிரணம் முடிந்தவுடன் கோவில்களில் சிறப்பு வழிபாட்டுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Lunar eclipse can only happen at full moon, when the moon is opposite, or nearly opposite, the sun in Earth’s sky. That’s the only time that it’s possible for the moon to sail through the Earth’s shadow. Of course, to watch this Lunar Eclipse you have to be on the night side of our world while the eclipse is taking place
Please Wait while comments are loading...