For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மைத்ர முகூர்த்த நாளில் கடனை அடைத்தால் தீராத கடன்களும் தீரும்

நமக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட 24 மணிநேரங்களில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில்,கடனில் ஒரு சிறு தொகையைத் தனியே எடுத்து வைத்தால், அதிசயமாகக் கடன் தீர்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    04-05-2019 இன்றைய ராசி பலன்-வீடியோ

    மதுரை: மேஷ லக்னமும் அசுவினி நட்சத்திரமும் கூடிய நேரமான சனிக்கிழமையன்று கடன் தீர்க்கக் கூடிய மைத்ர முகூர்த்த நேரம் வருகிறது. அமாவாசையும் இணைந்துள்ளதால் கடன் தீர்க்க உகந்த நேரமாக கருதப்படுகிறது.

    கடனில்லாத வாழ்க்கை வாழணும். இருக்கிற கடனையெல்லாம் அடைச்சிட்டு நிம்மதியா இருக்கணும் என்று பலரும் நினைக்கின்றனர்.

    மனிதனை வாட்டி எடுக்கின்ற கடன் தொல்லையைத் தீர்க்க மைத்ர முகூர்த்தம் என்ற ஒன்று ஜோதிடத்தில் இருக்கிறது.

    ஒரு தமிழ் மாதத்தில் அதிகபட்சமாக மூன்று நாட்களுக்கு வரும். அந்த மூன்று நாட்களில் ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக இரண்டு மணிநேரம் வரும். இந்த நேரத்தைப் பயன்படுத்தி நமது கடன் எத்தனை கோடி ரூபாய்களாக இருந்தாலும் அதை முழுமையாக அடைத்துவிட முடியும்.

    கடனை அடைக்கும் முகூர்த்தம்

    கடனை அடைக்கும் முகூர்த்தம்

    எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் நேரம்தான் மைத்ர முகூர்த்தம். நீங்கள் பெருந்தொகையாகத் தரவேண்டிய கடன் தொகையில், கொஞ்சமேனும் குறிப்பிட்ட இந்த நாளில், இந்த நேரத்தில் சம்பந்தப்பட்டவருக்கு திருப்பிக் கொடுங்கள். எவ்வளவு பெரும் தொகையானாலும், சிறுக சிறுக அடைபட்டுவிடும் என்பது உறுதி.

    கடனின் தன்மை

    கடனின் தன்மை

    ஒருவர் எப்போதும் கடனாளியாக இருப்பதில்லை. சூழ்நிலை கடனாளியாக்கிவிடுகிறது. ஜோதிடத்தில் ஆறாம் பாவத்தை கடன் பற்றி கூறும் பாவகமாக கூறப்பட்டிருக்கிறது. காலபுருஷனுக்கு ஆறாமிடமாக கன்னி அமைந்துள்ளதால் கன்னி ராசியில் அமர்ந்த கிரகமும் புதனோடு சேர்ந்த கிரகமும் புதனின் வீட்டில் நிற்கும் கிரகமும் கடனின் தன்மையை பற்றி கூறும் அமைப்பாகும்.

    கடன் தொல்லைக்கு காரணம்

    கடன் தொல்லைக்கு காரணம்

    ஜாதகப்படி லக்னாதிபதி 6ம் இடத்தில் பகைபெற்றோ தீயகிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்றோ அல்லது தனித்தோ அமர்ந்து தசாபுத்தி நடைபெற்றால் அவருக்கு அந்த காலகட்டம் முழுவதும் வம்பு வழக்கு கடன் தொல்லைகள் ஏற்படும். லக்னாதிபதி 6ஆம் வீட்டிலும் 6ஆம் வீட்டின் அதிபதி லக்னத்திலும் பரிவர்த்தனை பெற்று அமர்ந்தாலும் அவர்களுக்கு கடன் பிரச்சனைகள் வாழ்நாள் முழுவதும் இருந்துகொண்டே இருக்கும்.

    கடனை வாங்கவே வாங்கதீங்க

    கடனை வாங்கவே வாங்கதீங்க

    குரு தான் இருக்கும் வீட்டை வளர்ப்பார். ஒருவர் ஜாதகத்தில் குரு கால புருஷனுக்கு ஆறாம் பாவமான கன்னியில் அல்லது ஜாதக ஆறாம் பாவத்தில் கோச்சார ரீதியாக பயணம் செய்யும் போது கடன் வாங்க கூடாது. எனவே ஆறாம் பாவத்தில் நிற்கும் போது கடனை வளர்த்திடுவார். குரு ராகு, கேது கிரகங்களுடன் சேர்ந்து நிற்கும் போது புதிய கடன்கள் வாங்கவோ அல்லது கடனை அடைக்கவோ முயற்சி செய்யக் கூடாது. ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி ஆகியவை நடைபெறும்போது கடன் வாங்க முயற்சி செய்ய கூடாது.

     கடன் அடைக்கும் காலம்

    கடன் அடைக்கும் காலம்

    செவ்வாய்க்கிழமையும் அசுவினி நட்சத்திரமும் சேருகின்ற நாளில் மேஷ லக்கினம் அமைந்துள்ள நேரம் மைத்ர முகூர்த்தம் எனப்படும். செவ்வாய்க்கிழமையும், அனுஷ நட்சத்திரமும் சேருகின்ற நாளில் விருச்சிக லக்கினம் அமைந்துள்ள நேரமும் மைத்ரேய முகூர்த்தமாகின்றது.

    மேற்படி காலங்களில் லக்கினமும் நட்சத்திரமும் அமைந்து செவ்வாய்க்கிழமை அமையாது போனாலும் 75 % பலன்களை பெறலாம். சனிக்கிழமை மேஷ லக்னம் அசுவினி நட்சத்திரம் இணைவதால் மைத்ர முகூர்த்த காலமாகிறது. காலை 6.48 முதல் 8.48 வரை கடன் அடைக்கும் காலமாகும்.

    கடன் பிரச்சினை தீரும்

    கடன் பிரச்சினை தீரும்

    கடன் தொல்லையால் மீளமுடியாமல் தவிப்பவர்கள் இந்த மைத்ர முகூர்த்த நேரத்தைக் கணித்து,அந்தத் தருணத்தில் கடனில் சிறு பகுதியையாவது அடைக்க முயற்சிப்பது சிறப்பு. கடன் கொடுத்தவர், இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக வாங்க மறுக்கிறார் எனில், சிறு சிறு தொகையாக நமது வங்கிக் கணக்கில் சேர்த்து சேமித்து, பிறகு மொத்தமாக அடைக்கலாம். அப்படி, மாதந்தோறும் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் நேரமானது மைத்ர முகூர்த்தமாக இருக்கும்பட்சத்தில் வெகு சீக்கிரத்தில் பணம் சேர்ந்து, மொத்த கடனும் அடைபடும்.

    கடன் தீர்க்க உகந்த நாட்கள்

    கடன் தீர்க்க உகந்த நாட்கள்

    மே மாதத்தில் 4.5.2019 சனி காலை 6.48 முதல் 8.48 வரை. 19.5.2019 ஞாயிறு மாலை 6.16 முதல் இரவு 8.16 வரை. 31.5.2019 வெள்ளி காலை 5.04 முதல் 7.04 வரை கடன் தீர்க்கலாம். பெரிய அளவு கடனை அடைக்க விரும்புவோர்,இந்த நேரங்களை தொடர்ந்து பயன்படுத்துவது விரைவில் கடன் தீர வழிவகுக்கும்.

    இந்தியாவில் தென் மாநிலங்கள் மற்றும் இலங்கை,மாலத்தீவு இவைகளுக்கு மட்டும் தான் பொருந்தும்.

    கடன் தீர்க்கும் விநாயகர்

    கடன் தீர்க்கும் விநாயகர்

    கடன் தீர்ப்பதில் கேது பகவானும் செவ்வாய் பகவானும் மிகவும் பெருபங்காற்றுகின்றனர். கேதுவின் அதிதேவதை வினாயகரை வணங்குவது, செவ்வாயின் அதிதேவதை முருகனை வணங்குவது, கேது செவ்வாய் சேர்க்கை பெற்ற மைத்ர முகூர்த்தத்தில் கடன் அடைப்பது விரைவில் கடன் அடைய சிறந்த வழிகளாகும். செவ்வாய்கிழமை விநாயகருக்கு வெற்றிலை மாலை சாற்றலாம்.

    பிரதோஷ வழிபாடு

    பிரதோஷ வழிபாடு

    ருணம் எனில் கடன் என்று பொருள். கடன் தீர்க்க காலபைரவரை வணங்கலாம். லட்சுமி நரசிம்மரைக் குறித்த ருண விமோசன ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்து வந்தால் எல்லாவித கடன்களும் அடைபடும். ருத்ர மூர்த்தியும் நரசிம்மரும் சேர்ந்த உருவமான ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தியை பிரதோஷ காலத்தில் முக்கியமாக ருண விமோசன பிரதோஷ காலத்தில் வழிபட தீராத கடன் தீரும்.

    சனிபகவான் அருள் தேவை

    சனிபகவான் அருள் தேவை

    எந்த காரணத்திற்காக கடன் வாங்கினாலும் அது அடைய சனீஸ்வர பகவானின் அருள் தேவை. சனீஸ்வரனின் கும்பராசி கால புருஷனுக்கு ஆறுக்கு ஆறாக இருப்பதால் அவர் அனுக்ரகம் செய்தால்தான் கடன் அடைக்க முடியும். கடனிலிருந்து விடுபட தொடர்ந்து சனீஸ்வர பகவானை வழிபடுவது அவசியமாகும்.

    திருநள்ளாறு, குச்சனூர், சனிசிங்கனாபூர், சென்னை பொழிச்சலூரில் உள்ள வடதிருநள்ளாறு ஆகிய தலங்களுக்கு அவ்வபோது சென்று வரவேண்டும். சனீஸ்வர பகவானுக்கு பிரியமான பித்ரு காரியங்களை சரிவர செய்யவேண்டும். சனி அமாவாசை தினத்தில் முன்னோர்களை நினைத்து வழிபட நன்மைகள் நடைபெறும்.

    English summary
    Maithra muhurtham is the timing used to reduce the debt by paying the portion of debt during the muhurtha time.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X