மார்ச் மாத ராசிபலன் 2022: கடக ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை
மார்ச் மாதம் நவகிரகங்களின் சஞ்சாரம் கூட்டணியால் கடக ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும், அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
சென்னை: சூரியபகவான் கும்ப ராசியில் பாதி நாட்களும் மீன ராசியில் பாதி நாட்களும் பயணம் செய்கிறார். சனி, செவ்வாய், சுக்கிரன்,புதன் என கிரகங்கள் மகர ராசியில் இணைந்திருக்கின்றன. ராகு ரிஷபத்திலும் கேது விருச்சிக ராசியிலும் பயணம் செய்கின்றன. கிரகங்களின் கூட்டணி பார்வையால் கடக ராசிகளில் பிறந்தவர்கள் இந்த மாதம் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
மார்ச் 6ஆம் தேதி புதன் பெயர்ச்சி நிகழப்போகிறது. மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி. மார்ச் 24ஆம் தேதி மீன ராசிக்கு குரு பகவான் இடப்பெயர்ச்சி அடைகிறார். 15ஆம் தேதி சூரியன் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.
மழை காலமும் பனி காலமும் முடிந்து இன்னும் சில நாட்களில் வசந்த காலம் தொடங்கப்போகிறது. மாசி, பங்குனி இணைந்த மார்ச் மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும். பண வரவு வருமா? வேலையில் புரமோசன் கிடைக்குமா என்று பார்க்கலாம்.

கடக ராசி
சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசி நேயர்களே, ராசிக்கு ஐந்தாம் வீட்டில் கேது ஏழாம் வீட்டில் நான்கு கிரகங்கள் கூடியுள்ளன. எட்டாம் வீட்டில் குரு சூரியன், லாப ஸ்தானத்தில் ராகு கிரகம் பயணம் செய்கிறார்.
இந்த மாதம் உங்கள் ராசிக்கு அற்புதமாக உள்ளது. ஆலய தரிசனம் அதிசய மாற்றங்களை ஏற்படப்போகிறது. கணவருக்கும் வாழ்க்கைத்துணைக்கும் புதிய வாய்ப்புகள் தேடி வரும். புதிய தொழில் தொடங்கலாம். விநாயகர் வழிபாடு மன அமைதியைத் தரும். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் சிக்கல்கள் வரலாம் கவனம் தேவை.

குடும்பத்தில் பிரச்சினைகள்
சனி செவ்வாய் சேர்க்கை ஏழாம் வீட்டில் இருப்பதால் புதிய பிரச்சினைகள் ஏற்படலாம். விட்டுக்கொடுத்து செல்வது. வெளிநாடு முயற்சி செய்யலாம். வேலைக்கு முயற்சி செய்யலாம். பிசினஸ் செய்பவர்களுக்கு இந்த மாதம் வாடிக்கையாளர்கள் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு நன்மைகள் நிறைந்த மாதம். வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை. பொது இடங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

சம்பள உயர்வு
வியாபாரத்தில் கூட்டுத்தொழில் செய்பவர்கள் கவனம். சின்னச் சின்ன சண்டைகள் வந்தாலும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. எதிர்பாலினத்தவர்களிடம் கவனமாக இருப்பது அவசியம். வேலை தேடுபவர்களுக்கு சிறந்த மாதம் நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்த மாதம். புதிய வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். சூரியன் 15ஆம் தேதிக்கு மேல் ஒன்பதாம் வீட்டிற்கு இடம் மாறும் போது சம்பள உயர்வு கிடைக்கும். பணம், பொருளை பத்திரமாக வைத்திருப்பது அவசியம்.

ஆரோக்கியத்தில் அக்கறை
மூத்த குடிமக்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். பிள்ளைகளை கவனித்து கண்காணிப்பது அவசியம். நட்பு வட்டாரத்தில் எப்படி இருக்கிறார்கள் என்று பாருங்கள். மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்ட வேண்டும். தேவையற்ற நண்பர்களை விலக்கி விடுங்கள். உடல் சூடு அதிகரிக்கும். ஆலய தரிசனம் மன அமைதியைத் தரும். நேர்மறை எண்ணங்களை அதிகப்படுத்துங்கள். வியாழக்கிழமைகளில் சித்தர்கள் மகான்கள் ஆலயங்களுக்கு செல்வது நன்மை தரும் ராகவேந்திரர் வழிபாடு நன்மையைத் தரும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications