Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாதம் பிரசாதமாவது எப்போது - எந்த கோவிலில் என்ன பிரசாதம் ஸ்பெஷல் தெரியுமா

நாம் சாதாரணமாக சமைக்கும் சாதம் இறைவனுக்கு படைத்த பின்னர் அது பிரசாதமாகிறது. நம்முடைய வீட்டில் அன்றாடம் சமைக்கும் சாதத்தை சுவாமிக்கு நிவேதனம் செய்துவிட்டு, அவரது நினைவோடு சாப்பிட்டால் உடலும் உள்ளமும் சுத்தமாகும்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மனிதர்களாகிய நாம் சமைக்கும் உணவை திருவிழா மற்றும் பண்டிகை நாட்களில் சுவாமியின் முன்னால் இலைபோட்டு நைவேத்தியம் செய்கிறோம். நாம் சாதாரணமாக சமைக்கும் சாதமும் உணவுப்பொருட்களும் இறைவனுக்குப் படைக்கப்படும் போது மீண்டும் பிரசாதமாகிறது.

நாம் வயிராற சாப்பிட உணவு கொடுக்கும் இறைவனுக்கு நன்றி சொல்லும் விதமாக நாம் நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும். இறை நம்பிக்கை உள்ள அனைவரும் தினசரி பூஜை செய்யும் போது கடவுளுக்கு பிடித்தமான ஒன்றை நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். நம்முடைய வீட்டில் அன்றாடம் சமைக்கும் சாதத்தை சுவாமிக்கு நைவேத்தியம் செய்துவிட்டு, அவரது நினைவோடு சாப்பிட்டால் உடலும் உள்ளமும் சுத்தமாகும்.

கடவுளுக்கு 18 வகை பலகாரங்கள் படைத்து வழிபடவேண்டும் என்று இல்லை சாதாரண கல்கண்டோ, சர்க்கரையோ கூட படைத்து வழிபடலாம். இறைவனின் அருள் நமக்கு நிச்சயம் கிடைக்கும். ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொருவிதமான பிரசாதங்களை படைத்து வழிபடுவது வழக்கம்.

கோவில் பிரசாதங்கள்

கோவில் பிரசாதங்கள்

கோவில்களில் வழங்கப்படும் பிரசாதங்களுக்கும் அந்த கோவிலில் இருக்கும் கடவுளுக்கும் இடையில் எப்போதும் ஒரு தொடர்பு இருக்கும். பெரும்பாலும் கோவில் பிரசாதங்கள் மக்கள் உண்ணக்கூடியவையாக இருக்கும். கணபதிக்கு பிடித்தமானது சர்க்கரைப்பொங்கல், மோதகம், அவல், கொண்டைக்கடலை, அப்பம் பிடித்தமானது. அழகன் முருகனுக்கு பிடித்தமானது வடை, சர்க்கரை பொங்கல், வேக வைத்து தாளித்த கடலை பருப்பு, தினை மாவு, பழங்கள், வெல்லம், பஞ்சாமிர்தம் போன்றவை படைக்கலாம். ஐயப்பனுக்கு பிடித்தமானது அரவணைப்பாயசம்.

சர்க்கரைப்பொங்கல்

சர்க்கரைப்பொங்கல்

மகாவிஷ்ணுவிற்கு எல்லாமே பிடிக்கும். மஞ்சள் நிற நைவேத்திய உணவுப்பொருட்களை படையலாக போடலாம். லட்டு, பொங்கல், புளியோதரை படைக்கலாம். அன்னை மகாலட்சுமிக்கு பிடித்தமானது அரிசி பாயாசம், அனைத்து வகையான இனிப்புகளும் அன்னை மகாலட்சுமிக்கு இஷ்டமானது. கண்ணனுக்கு வெண்ணெய், அவல் பிடித்தமானது. கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி நாட்களில் இந்த பலகாரங்களை படைத்து வழிபடுகிறோம்.

அம்மனுக்கு கூழ்

அம்மனுக்கு கூழ்

ஆடி மாதம் அம்மனுக்கு கூழ் படைப்பார்கள். தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் ஆடிக்கூழ் படைத்து வழிபடுவது சிறப்பு. ராகு, கேது, சனி பகவானுக்கு கருப்பு எள், உளுந்து ஆகியவற்றில் செய்த பலகாரங்களை படைக்கலாம். குபேரனுக்கு பிடித்தமானது பச்சை நிற சீதாப்பழ பாயாசம் லட்டு. இவற்றை படைத்து வழிபட செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. தமிழ்நாட்டில் பிரபல கோவில்களில் சுவாமிகளுக்கு படைக்கப்படும் நைவேத்தியங்களைப் பற்றி பார்க்கலாம்.

மதுரை மீனாட்சி அம்மன்

மதுரை மீனாட்சி அம்மன்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்கு சுக்கு, மிளகு, கறிவேப்பிலை மணத்துடன் கூடிய காஞ்சிபுரம் இட்லிதான் முதல் நைவேத்யம். மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் காலையில் ஞானப்பால் பிரசாதமும் இரவில் பள்ளியறையின் போது கமகமக்கும் சுண்டலும் பாலும் நிவேதனம் செய்யப்படுகிறது. இந்த பிரசாதங்கள் இறைவனுக்கு படைக்கப்பட்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

அழகர் கோவில்

அழகர் கோவில்

மதுரை அழகர் கோவில் தோசை பிரபலமானது. முழு உளுந்தை ஊறவைத்து பச்சரிசி மாவுடன் மிளகு, சீரகம் சேர்த்து நெய் ஊற்றித் தயாரிக்கப்படும் தோசைதான் இறைவனுக்கு படைக்கப்படுகிறது. சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு கிச்சடி சம்பா சாதம் நிவேதனமாக படைக்கப்படுகிறது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் ரங்கநாதருக்கு தேங்காய்த் துருவலும் துலுக்க நாச்சியாருக்கு ரொட்டி, வெண்ணெய், கீரையும் நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. தினமும் இரவில் அரவணை பிரசாதமும் உண்டு.
திருவாரூர் தியாகராஜப் பெருமானுக்கு நெய்யில் பொறிக்கப்பட்ட முறுக்கு தினசரி பிரசாதம்.
திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாளுக்கு தினமும் இரவில் முனியோதரயன் பொங்கல் எனும் அமுது செய்விக்கப்படுகிறது.

சிறப்பான பிரசாதங்கள்

சிறப்பான பிரசாதங்கள்

திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோயிலில் ஆத்மநாதருக்கு புழுங்கலரிசிச் சோறும் பாகற்காய் கறியுமே பிரசாதம். ஸ்ரீமுஷ்ணம் பூவராக மூர்த்திக்கு தினமும் அபிஷேகத்திற்குப் பிறகு முக்தாபி சூரணம் எனும் மகா பிரசாதம் நிவேதனம் செய்யப்படுகிறது. இந்த பிரசாதம் நோய்களை தீர்க்கும் மருந்தாகக் கருதப்படுகிறது. நவகிரக, சுக்கிர தலமான கஞ்சனூரில் அன்னாபிஷேகத்தின் போது சுரைக்காய் பிரசாதம் படைக்கப்படுகிறது. திருச்சியில் கோயிலடி அப்பக்குடத்தானுக்கு தினமும் அப்பம் நிவேதனம் செய்யப்படுகிறது.

குற்றாலநாதர் திருக்கோவில்

குற்றாலநாதர் திருக்கோவில்

குற்றாலம் குற்றாலநாதருக்கும் குழல்வாய்மொழி அம்மைக்கும் நாள் தோறும் சுக்கு, மிளகு சேர்த்த கஷாயம் படைக்கப்படுகிறது. அருவியால், அவருக்கு தலைவலியும் ஜலதோஷமும் வராமல் இருக்க இந்த ஐதீகம்.
முழு உளுந்தை ஊறவைத்து பச்சரிசி மாவுடன் மிளகு, சீரகம் சேர்த்து நெய் ஊற்றித் தயாரிக்கப்படும் தோசை, மதுரை அழகர் கோயிலின் பிரதான பிரசாதம்.

திருநெல்வேலி

திருநெல்வேலி

திருநெல்வேலி பூமாதேவி அம்மன் ஆலயத்தில் தமிழ் மாதக் கடைசி வெள்ளியன்று கூட்டாஞ்சோறும் சர்க்கரைப் பொங்கலும் நிவேதனம் செய்வர். துவரம்பருப்பு, அரிசி, காய்கறிகள் எல்லாம் சேர்த்து தேங்காய் அரைத்து விட்டு தயாரிக்கப்படுவது தான் கூட்டாஞ்சோறு. நெல்லையில் உள்ள புட்டாத்தி அம்மன் ஆலயத்தில் அரிசி, வெல்லம், ஏலக்காய் சேர்த்துத் தயாரிக்கப்படும் புட்டுதான் பிரசாதம்.

பால் பாயாசம்

பால் பாயாசம்

கொல்லூர் மூகாம்பிகைக்கு இரவு அர்த்தஜாம பூஜையின் போது சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், லவங்கம், சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் மணமிக்க கஷாயம் பிரசாதமாகத் தரப்படுகிறது. கேரளம், திருவிழா மகாதேவர் ஆலயத்தில் மூலிகைகளைச் சாறு பிழிந்து பாலுடன் கலந்து ஈசனுக்கு நிவேதனம் செய்து பின் பக்தர்களுக்குப் பிரசாதமாக அளிக்கின்றனர். இந்த பால் வயிற்றுக் கோளாறுகளைத் தீர்க்கிறது. கேரள மாநிலம் கொட்டாரக்கராவில் விநாயகப் பெருமானுக்கு சுடச்சுட நெய்யப்பம் செய்து நிவேதித்துக் கொண்டே இருக்கின்றனர். உதயம் முதல் அஸ்தமனம் வரை அப்பம் ஏற்கும் கணபதி இவர்.

குருவாயூரப்பன் கோவில்

குருவாயூரப்பன் கோவில்

கேரளம், குருவாயூரில் குருவாயூரப்பனுக்கு சுண்டக்காய்ச்சிய பால் பாயசம் பிரசாதமாக படைக்கப்படுகிறது.
கேரளம், இரிஞ்சாலக்குடாவில் பரதன் ஆலயத்தில், கத்தரிக்காயால் தயாரிக்கப்பட்ட வழுதனங்கா எனும் நைவேத்தியம் செய்யப்படுகிறது. செம்பைவைத்யநாத பாகவதர் இந்தப் பிரசாதம் உண்டு தன் வயிற்று நோய் தீர்ந்ததாக எழுதிய கடிதம் ஆலயத்தில் காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் சர்க்கரை, பால் மற்றும் அரிசி கொண்டு தயாரிக்கப்படும் பாயசம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதன் தனித்துவமான சுவை மற்றும் நறுமணம் பக்தர்களால் அதிகம் விரும்பப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவில்

திருப்பதி ஏழுமலையான் கோவில்

திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில் சமையல் கட்டு மிகவும் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன. விதவிதமான பிரசாதங்கள் செய்யப்பட்டாலும் குலசேகரன்படியைத் தாண்டி மண் சட்டியில் நிவேதிக்கப்படுவது தயிர்சாதம் மட்டுமே. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.

மகாலட்சுமி

மகாலட்சுமி

மத்திய பிரதேசத்தில் ரத்லத்தில் உள்ள மஹாலட்சுமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை பிரசாதமாக தருகிறார்களாம். அந்த பிரசாதத்தை வாங்குவதற்காக ஏராளமானோர் பல மைல்கள் பயணம் செய்து வந்து சாமி தரிசனம் செய்கிறார்களாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+