• search

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பாவங்கள், தோஷங்களை நிவர்த்தி செய்யும் பவித்ரோத்ஸவம்

FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  வேலூர்: பலவித தோஷங்களால் உண்டாகும் பகவத் அபசாரங்களிலிருந்து நிவர்த்தி பெற வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் நவம்பர் 12ஆம் தேதி முதல் இரண்டு நாட்கள் பவித்ரோத்ஸவம் என்னும் வைதீக ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தின் மூலம் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட பாக்கியம் கிடைக்கும் மேலும் 32 விதமான தோஷங்கள் நிவர்த்திக்கபடும்.

  இந்த ஹோமத்தினால் ஆயுள், ஆரோக்யம், புகழ், ஞானம் போன்ற நற்பலன்கள் கிடைப்பதுடன் நவக்ரஹ, பூத, ப்ரேத, பிசாசுகளால் உண்டாகும் துக்கங்கள், சத்ரு பயம் முதலான அநிஷ்டங்கள் அகலும். நான்கு வேதங்களில் சாரமாக தொகுக்கப்பட்ட 1336 மந்திரங்களால் இந்த ஹோமம் செய்யப்பட உள்ளது.

  Pavithrotsavam in Sri Danvantri Arogya Peedam

  இந்த விசேஷமான பவித்ரோத்ஸவம் ஆகமங்களில் விதித்துள்ளபடி வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் ஆட்சிபுரிகின்ற ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கும், ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ பாலரங்கநாதர், ஸ்ரீ பட்டாபிஷேகராமர், ஸ்ரீ சத்தியநாராயணர், ஸ்ரீ கூர்மலக்ஷ்மி நரசிம்மர், ஸ்ரீ நவநீதகிருஷ்ணர், ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்கிரீவர், ஸ்ரீ சஞ்சிவீ ஆஞ்சநேயர், ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனர், ஸ்ரீ கருடாழ்வார் போன்ற இதர பரிவார மூர்த்திகளுக்கும் நடத்தப்படுகிறது.

  “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாணைப்படி விளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 26ந்தேதி நவம்பர் 12 திங்கட்கிழமை மாலை துவங்கி 14ஆம் தேதி புதன்கிழமை வரை தினமும் காலை சுமார் 10.00 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை சுமார் 6.30 மணி முதல் 8.00 மணி வரையும் உபய வேத, கிரந்த பாரயணங்களுடன் பூர்ணாஹூதி, சாற்றுமறை, தீர்த்த ப்ரசாத வினியோகங்களுடன் வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.

  இவ்வைபவத்தை முன்னிட்டு நடைபெறும் கோ பூஜை, வேதபாராயணம், விசேஷ திருமஞ்சனம், சகல தேவதா ஹோமங்கள், மஹாபூர்ணாஹூதி, மஹா தீபாராதனை மற்றும் ஸ்ரீ தன்வந்திரி உற்சவர் தாயார் ரத புறப்பாடு நடைபெற உள்ளது.

  ஹோமத்திற்கு தேவையான நெய், ஹோமத்ரவ்யங்கள் மற்றும் பவித்திர மாலைகளுக்கு உபயம் அளிக்கலாம். பக்தர்கள் இந்த பகவத்கைங்கர்யத்தில் கலந்துக்கொண்டு ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாள் அனுக்கிரகத்துடன் பரிவாரமூர்த்திகளின் அருள்பெறவும் ஆசிகள் பெறவும் தன்வந்திரி குடும்பத்தினர் அன்புடன் அழைக்கின்றனர்.

  தொடர்புக்கு : ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை. தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203.


  பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

  English summary
  Sri Danvantri Arogya Peedam from November 12th to November 14th, 2018 Pavithrotsavam is a religious ceremony performed annually for purification.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more