ராமேஸ்வரம்: ராமநாத சுவாமி பர்வதவர்த்தினி அம்மன் பள்ளியறை நிகழ்ச்சி - பக்தர்களுக்கு அனுமதியில்லை

திருக்கல்யாணம் முடிந்த நிலையில் ராமேஸ்வரம் கோவிலில் சுவாமி- அம்பாள் பள்ளியறைக்கு செல்லும் நிகழ்ச்சியை காண தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி திருக்கல்யாணம் முடிந்து பள்ளியறைக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் பங்கேற்பின்றி கோவில் ஊழியர்களுடன் நடைபெற்றது. தங்க ஊஞ்சலில் வைக்கப்பட்ட சாமி அம்பாளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திருக்கல்யாணம் முடிந்த நிலையில் சுவாமி- அம்பாள் பள்ளியறைக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியை காண தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவல் கட்டுப்பாடு தடுப்பு முன்னெச்சரிக்கை காரணமாக இந்த ஆண்டு திருவிழாவில் நடைபெறும் சாமி வீதி உலா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவிலின் உள்பகுதியில் 3ஆம் பிரகாரத்தில் நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடி அமாவாசை நாளில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு சாமி எழுந்தருளும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. கோவிலின் உள்ளேயே உள்ள சிவ தீர்த்தத்தில் தீர்த்தவாரி பூஜை நடைபெற்று கோவிலின் 3ஆம் பிரகாரத்தில் சாமி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தங்கத் தேரோட்டம்

தங்கத் தேரோட்டம்

அம்பாள் திருத்தேரோட்ட நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது. தங்க தேரில் அம்மன் எழுந்தருளி மூன்றாம் பிரகாரத்தில் உலா வந்தார். ராம தீர்த்தம் தபசு மண்டபப்படியில் வைத்து நடைபெறும் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நேற்றைய தினம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. பர்வதவர்த்தினி அம்பாள் வெள்ளி கமல வாகனத்தில் 3ஆம் பிரகாரத்தின் மையப்பகுதியில் எழுந்தருளினார். தொடர்ந்து ராமநாதசாமி பிரியாவிடையுடன் தங்க ரிஷப வாகனத்தில் 3ஆம் பிரகாரத்திற்கு எழுந்தருளினார். சாமியை அம்பாள் மூன்று முறை சுற்றி வரவே சாமி கழுத்திலிருந்து அம்பாள் கழுத்திலும், அம்பாள் கழுத்திலிருந்து சாமி கழுத்திலும் மூன்று முறை மாலை மாற்றப்பட்டு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சுவாமி அம்மன் திருக்கல்யாணம்

சுவாமி அம்மன் திருக்கல்யாணம்

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது. தெற்கு கோபுர வளாகப் பகுதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. சுவாமி அம்பாள் மறு வீட்டிற்கு செல்லும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

பாரம்பரிய நிகழ்ச்சி

பாரம்பரிய நிகழ்ச்சி

அது போல் ஆண்டுதோறும் ஆடி திருக்கல்யாண திருவிழாவில் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் முடிந்த பின்னர் சுபமுகூர்த்த நாளில் சுவாமி அம்பாளுக்கு புது பள்ளியறை நிகழ்ச்சி நடத்தப்படுவது பாரம்பரியமாக இருந்து வருகின்றது. இந்த ஆண்டு சாமி-அம்பாளின் புது பள்ளியறை நிகழ்ச்சியானது வெள்ளிக்கிழமையன்று இரவு ராமேஸ்வரம் கோவிலில் நடைபெற்றது. அதற்காக இரவு 8 மணி அளவில் சாமி மற்றும் அம்பாளுக்கு மகா தீபாராதனைக்குப் பிறகு கருவறையில் உள்ள சாமி சன்னதியில் இருந்து தங்கத்தாலான சாமி சிலையானது குருக்கள் ஒருவரால் தூக்கி வரப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி பல்லக்கில் வைக்கப்பட்டது. தொடர்ந்து மேளதாளம் முழங்க சாமி வைக்கப்பட்ட வெள்ளி பல்லக்கு பிரகாரத்தை சுற்றி கொண்டு அம்மன் சன்னதிக்கு கொண்டுவரப்பட்டது.

பக்தர்களுக்கு அனுமதியில்லை

பக்தர்களுக்கு அனுமதியில்லை

தொடர்ந்து அங்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த புது பள்ளியறையில் உள்ள தங்க ஊஞ்சலில் சாமி வைக்கப்பட்டது. அங்கு முன்னதாக அம்பாளின் சிலையும் வைக்கப்பட்டது. தொடர்ந்து தங்க ஊஞ்சலில் வைக்கப்பட்ட சாமி அம்பாளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஆண்டுதோறும் திருக்கல்யாணம் முடிந்து ராமேஸ்வரம் கோவிலில் நடைபெறும் புதுப்பள்ளியறை நிகழ்ச்சியை காண உள்ளூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருவார்கள். ஆனால் கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடு காரணமாக நேற்று புது பள்ளியறை நிகழ்ச்சியை காண பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களும் வெளியேற்றப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+