Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம்
March month rasi palan: சந்திர கிரகணம், சனிப்பெயர்ச்சி என மார்ச் மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் மாற்றங்கள், பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், கடகம், சிம்மம், கன்னி ராசியினருக்கு மார்ச் மாதத்தில் கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மார்ச் மாதத்தில் கும்ப ராசியில் ராகு, செவ்வாய், புதன் ஆகிய கிரகங்கள் மாதம் முழுவதும் அங்கேயே இருக்கின்றன. குரு பார்வையில் இருப்பதால் பெரிய அளவில் முன்னேற்றத்தைத் தரும். மாதத்தின் பிற்பகலில் சுக்கிரன் உச்சத்தை அடைகிறார். குருவுக்கு நிகரான மிகப்பெரிய சுபரான சுக்கிரன் உச்சத்தை அடைவதால் பெண்கள் விஷயத்தில் ஏற்றம் உண்டாகும். பெண்கள் தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டக் கூடிய தன்மை ஏற்படும்.

ஆண்களால் ஏற்படும் பிரச்சனைகள் எல்லாம் நீங்கும். சனி பகவான் உச்ச சுக்கிரனோடு சேர்ந்து சுபத்துவத்தை அடைவதால் தொழிலாளர் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கத்தினருக்கு நன்றாக இருக்கும் காலகட்டம். சிலருக்கு காதல் மலரும். அந்த வகையில் இந்த மார்ச் மாதத்தில் கடகம், சிம்மம், கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்துப் பார்க்கலாம்.
கடகம் மார்ச் மாத பலன்
கடக ராசியினருக்கு மார்ச் மாதம் முதலே அற்புதமான காலகட்டமாக இருக்கும். எதிர்பாராத மாற்றம், எதிர்பாராத நன்மைகள் தரக்கூடிய சிறப்பான மாதமாக இருக்கும். எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். வேலை, தொழில், வியாபாரம், விவசாயம் போன்ற துறைகளில் நல்லவைகள் நடக்கும். கடந்த ஆண்டுகளில் இருந்து வந்த மன அழுத்தங்கள் எதுவும் இந்த ஆண்டில் இருக்காது. எதையும் சிறப்பாகச் செய்ய முடியும் என்கிற நம்பிக்கை வரக்கூடிய மாதமாக இருக்கும்.
வீடு சார்ந்த விஷயங்களில் சுபச்செலவுகள் ஏற்படும். ஏற்கனவே இருக்கும் வேலையை விட நல்ல வேலைகள் கிடைக்கும். வேலை மாற்றம், தொழில் மாற்றம், தொழிலுக்கான இடமாற்றம் போன்ற நல்ல மாற்றங்கள் உண்டாகும். வருமானக் குறைவுகள் ஏற்படாது. கெளரவம் அதிகரிக்கும். அப்பா வழி அமைப்புகளில் கஷ்ட நஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். தந்தை விஷயத்தில் நல்லவை நடக்கும்.
சிம்மம் மார்ச் மாத பலன்
சிம்ம ராசியினருக்கு மார்ச் இரண்டாம் பகுதி மிக அருமையாக இருக்கும். எல்லா விஷயங்களிலும் நன்மை பெறும் மாதமாக இருக்கும். சாதகமற்ற சூழ்நிலைகள் எல்லாம் மாறி இயல்பாக இருக்கும் நல்ல மாதம். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. குழந்தைகளால் கருத்து வேற்றுமையில் இருந்த கணவன், மனைவிகடன் இணக்கம் ஏற்படும்.
வேலையில், தொழிலில், வியாபாரத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். பிடித்த வேலைகள் அமையும் யோகம் உண்டாகும். 11 ஆம் இடத்தில் குரு பகவான் இருந்து 7 ஆம் இடத்தோடு தொடர்பு கொள்கிறார். சகோதர, சகோதரிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள், அதிருப்திகள் எல்லாமே நீங்கி மகிழ்ச்சி பிறக்கும். அவர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சிம்ம ராசியினர் சாதிக்கக்கூடிய மாதமாக இந்த மார்ச் மாதம் உங்களுக்கு அமையும்.
கன்னி மார்ச் மாத பலன்
கன்னி ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய நன்மைகள் நடக்கும். பெரிய அளவில் நன்மைகளைக் கொடுக்கும். நண்பர்களால் இருந்து வந்த தொல்லை தீரும். கூட்டுத் தொழில் இனி நன்றாக இருக்கும். நண்பரை நம்பி தொழில் தொடங்கி ஏமாந்தவர்கள் அதிலிருந்து மீண்டு வருவார்கள். பங்குச்சந்தையில் சிக்கிக் கொண்டது என பணம் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெறும் காலகட்டம். புதிய நம்பிக்கை, உத்வேகம் பிறக்கும் காலகட்டம்.
தொழில் முனைவோருக்கு ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குத் தேவையான ஆர்டர்கள் இந்த மாதமே கிடைக்கும். எந்த அளவுக்கு சுறுசுறுப்பாக வேலை செய்கிறீர்களோ அதற்கேற்ப ஆர்டர்கள் பிடிக்கும் காலகட்டமாக இருக்கும். வியாபாரிகளுக்கு புதிய சிந்தனைகள் வரக்கூடிய அமைப்பு உள்ளது. பங்குச் சந்தையில் பணத்தை விட்டவர்களுக்கு பணம் மீண்டும் வரக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும்.
-
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு வரப்போகும் சிக்கல்.. இந்த விஷயங்களில் எல்லாம் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: விருச்சிகம் ராசியை வச்சு செய்யும் கிரகங்கள்.. வரும் 7 நாட்கள் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் குரு.. ஒரு விஷயத்தில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: கன்னி ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்டம்.. ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு காத்திருக்கும் பேராபத்து.. கண்டத்திற்கு மேல் கண்டம் -
Rasi Palan This Week: கடக ராசிக்கு 15 நாட்களில் அடிக்கப் போகும் ஜாக்பாட்.. தொட்டதெல்லாம் துலங்கும் -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு வெற்றியை குவிக்கும் நேரம்.. வேலையில் மட்டும் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: ரிஷபம் ராசிக்கு பணம் கொட்டப் போகுது.. புது வேலை கன்ஃபார்ம் -
Rasi Palan This Week: மேஷம் ராசிக்கு இந்த வாரம் எப்படி இருக்கும்.. முழு பலன்கள் விவரம் இதோ -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்












Click it and Unblock the Notifications