Simmam: சிம்ம ராசிக்கு சுக்கிரன் உச்சம்.. பிரச்சனைக்கு எல்லாம் எண்டு கார்டு போட்டாச்சு
March month rasi palan: மார்ச் மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சிம்ம ராசியினருக்கு மார்ச் மாதத்தில் கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மார்ச் மாதத்தில் கும்ப ராசியில் ராகு, செவ்வாய், புதன் ஆகிய கிரகஹ்கள் மாதம் முழுவதும் அங்கேயே இருக்கின்றன. குரு பார்வையில் இருப்பதால் பெரிய அளவில் முன்னேற்றத்தைத் தரும். மாதத்தின் பிற்பகலில் சுக்கிரன் உச்சத்தை அடைகிறார். குருவுக்கு நிகரான மிகப்பெரிய சுபரான சுக்கிரன் உச்சத்தை அடைவதால் பெண்கள் விஷயத்தில் ஏற்றம் உண்டாகும். பெண்கள் தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டக் கூடிய தன்மை ஏற்படும். [Kadagam]

ஆண்களால் ஏற்படும் பிரச்சனைகள் எல்லாம் நீங்கும். சனி பகவான் உச்ச சுக்கிரனோடு சேர்ந்து சுபத்துவத்தை அடைவதால் தொழிலாளர் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கத்தினருக்கு நன்றாக இருக்கும் காலகட்டம். சிலருக்கு காதல் மலரும். அந்த வகையில் இந்த மார்ச் மாதத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்துப் பார்க்கலாம்.
சிம்மம் மார்ச் மாத பலன்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தின் முதல் பகுதியை விட இரண்டாம் பகுதி மிக அருமையாக இருக்கும். சூரியன் 7, 8 ஆம் இடத்தில் இருக்கிறார். மாதத்தின் முதல் பாதியில் குருவின் பார்வையில் இருக்கும் சூரியன் மாதத்தின் இரண்டாம் பகுதியில் 8 ஆம் இடத்துக்கு மாறுகிறார். அங்கேயும் உச்ச சுக்கிரனும் சேர்ந்திருக்கிறார். எல்லா விஷயங்களிலும் நன்மை பெறும் மாதமாக இருக்கும்.
குடும்பம்
அஷ்டமசனியினுடைய பாதிப்புகள் பெருமளவில் இருக்காது. சாதகமற்ற சூழ்நிலைகள் எல்லாம் மாறி இயல்பாக இருக்கும் நல்ல மாதமாக இந்த மார்ச் மாதம் இருக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. குழந்தைகளால் கருத்து வேற்றுமையில் இருந்த கணவன், மனைவிகடன் இணக்கம் ஏற்படும். ஒருமித்த கருத்து உண்டாகும்.
புது வேலை
கடந்த காலத்தில் வேலை சார்ந்த விஷயங்கள், கடன் சார்ந்த விஷயங்களில் மன உளைச்சல்களில் இருந்து வந்தவர்களுக்கு எல்லாம் அந்தப் பிரச்சனைகள் தீரும். திருப்தி ஏற்படும். வேலையில், தொழிலில், வியாபாரத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். பிடித்த வேலைகள் அமையும் யோகம் உண்டாகும். 11 ஆம் இடத்தில் குரு பகவான் இருந்து 7 ஆம் இடத்தோடு தொடர்பு கொள்கிறார்.
மகிழ்ச்சி
11 ஆம் இடம் என்பது அண்ணன், அக்காள் போன்ற மூத்தவர்களை குறிக்கக்கூடிய இடம். அண்ணன், அக்காவுடன் இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் நீங்கி சுமூகமான சூழ்நிலை ஏற்படும். அவர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள், அதிருப்திகள் எல்லாமே நீங்கி மகிழ்ச்சி பிறக்கும். அவர்கள் உங்களுக்கு
சாதகமாக செயல்படுவார்கள். பெரிய சோதனைகள் எதுவும் ஏற்படாது.
சுக்கிரன் உச்சம்
குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். இதுவரை இருந்து வந்த பாதிப்புகள் அனைத்தும் நீங்கி விடுதலை பெறும் காலகட்டம். தொட்டது துலங்கும். 8 ஆம் இடத்தில் 15 ஆம் தேதிக்குப் பிறகு சுக்கிரன் உச்சமாகக்கூடிய காரணத்தால் வெளிநாடு, வெளிமாநிலத்தில் இருக்கக்கூடிய சிம்ம ராசியினர் எல்லோருக்கும் இருக்கின்ற இடத்தில் ஏராளமான நன்மைகள் ஏற்படும். சிம்ம ராசியினர் சாதிக்கக்கூடிய மாதமாக இந்த மார்ச் மாதம் உங்களுக்கு அமையும்.
-
Rasi Palan This Week: கண்ணா 2 லட்டு தின்ன ஆசையா.. மகர ராசிக்கு நிலம், வீட்டில் அடிக்கும் ஜாக்பாட் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு வரப்போகும் சிக்கல்.. இந்த விஷயங்களில் எல்லாம் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: விருச்சிகம் ராசியை வச்சு செய்யும் கிரகங்கள்.. வரும் 7 நாட்கள் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் குரு.. ஒரு விஷயத்தில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: கன்னி ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்டம்.. ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: கடக ராசிக்கு 15 நாட்களில் அடிக்கப் போகும் ஜாக்பாட்.. தொட்டதெல்லாம் துலங்கும் -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு வெற்றியை குவிக்கும் நேரம்.. வேலையில் மட்டும் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: ரிஷபம் ராசிக்கு பணம் கொட்டப் போகுது.. புது வேலை கன்ஃபார்ம் -
Rasi Palan This Week: மேஷம் ராசிக்கு இந்த வாரம் எப்படி இருக்கும்.. முழு பலன்கள் விவரம் இதோ -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்












Click it and Unblock the Notifications