சிவன்மலை ஆண்டவர் உத்தரவு... அகத்தியர் ஜாதகம், 500 ரூபாய் நோட்டு...பச்சை வேட்டி துண்டு - என்ன பலன்
சிவன்மலை ஆண்டவர் கோவில் உத்தரவுப் பெட்டியில் புதிதாக அகத்தியர் ஜாதகமும் பழைய 500ரூபாய் நோட்டும் வைத்தும் பூஜை செய்ய பக்தரின் கனவில் உத்தரவு வந்துள்ளது.
திருப்பூர்: சிவன்மலை ஆண்டவர் கோவிலில் உள்ள உத்தரவுப் பெட்டியில் இன்று முதல் அகத்தியர் ஜாதகம், இரண்டு பழைய 500, ரூபாய் நோட்டு மற்றும் 5, ரூபாய்,2, ரூபாய், 1 ரூபாய் நாணயம் என மொத்தம் 1008,ரூபாய் மற்றும் வெள்ளை சார்ட், பச்சை வேட்டி, துண்டு, எலுமிச்சை பழம், தேங்காய் வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டம் சிவன்மலை ஆண்டவன் கோவில் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆலயத்தில்
தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில், 'ஆண்டவன் உத்தரவு' என்ற பெயரில் ஏதேனும் ஒரு பொருளை கண்ணாடிப்பெட்டிக்குள் வைத்து பூஜை செய்வது வழக்கம்.
இந்த உத்தரவு பெட்டியில் சில குறிப்பிட்ட பொருட்களை வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று பக்தர்கள் சிலருக்கு கனவில் தோன்றும். தனக்கு வந்த கனவு பற்றி கோவிலுக்கு வந்து நிர்வாகிகளிடம் பக்தர் கூறினால், சுவாமியிடம் பூ கேட்டு, அதில் வெள்ளைப் பூ வந்தால் பக்தர் சொன்னது உண்மை என்பது நிச்சயமாகும். இதனையடுத்தே பக்தர் சொன்னதை உத்தரவுப் பெட்டியில் வைத்து பூஜை செய்வார்கள்.

கனவில் வரும் உத்தரவு
சிவன்மலை ஆண்டவன் உத்தரவுபெட்டியில் பக்தர்களின் கனவில் வந்ததாக கூறி ஏர் கலப்பை, தங்கம், ரூபாய் நோட்டு, துப்பாக்கி, மண், ஆற்று மணல், தண்ணீர், உப்பு, பூமாலை, துளசி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது.

சுனாமி முதல் சிறை வரை
ஆண்டவர் உத்தரவு உடன் கண்ணாடிப்பெட்டிக்குள் வைக்கப்படும் பொருள் சமுதாயத்தில் முக்கியத்துவம் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தண்ணீர் வைத்து பூஜை செய்யப்பட்ட காலத்தில் சுனாமி வந்து பாதிப்பு ஏற்பட்டது. கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரும்பு சங்கிலி உத்தரவானது. இதையடுத்து ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இரும்பு சங்கலி வைத்து பூஜை செய்யப்பட்டது. இரும்பு சங்கலி வைத்து பூஜை செய்யப்படுவதால், சட்டத்தை மீறுபவருக்கும், குற்றம் செய்பவர்களுக்கு காப்பு கிடைப்பது நிச்சயம் என்று கூறப்பட்டது. சசிகலாவும் அவரது உறவினர்களும் சிறைக்கு போனார்கள் என்று பேசப்பட்டது.

பக்தர் கனவில் வந்த பொருட்கள்
கடந்த ஜூலை மாதம் கோவையை சேர்ந்த பக்தர்கனவில் வந்த, பஞ்சாங்கம், ஆதார்கார்டு, மணி, 10 ரூபாய் நாணயங்கள் வைத்து பூஜை செய்யப்பட்டது. இதனிடையே திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த எஸ். கோகுல்ராஜா என்ற பக்தரின் கனவில் தோன்றியதாக அகத்தியர் ஜாதகம், இரண்டு பழைய 500, ரூபாய் நோட்டு மற்றும் 5, ரூபாய்,2, ரூபாய், 1 ரூபாய் நாணயம் என மொத்தம் 1008,ரூபாய் மற்றும் வெள்ளை சார்ட், பச்சை வேட்டி, துண்டு, எலுமிச்சை பழம், தேங்காய் வைத்து பூஜை செய்யப்பட்டது.

விவசாயம் செழிக்கும்
முதலில் இந்த பொருட்கள் பற்றி பக்தர் கூறிய உடன் பூ கட்டி போட்டு பார்க்கப்பட்டு சாமி உத்தரவிட்ட உடன் கண்ணாடிப் பெட்டிக்குள் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த பழைய பொருட்கள் அகற்றப்பட்டு புதிதாக இந்த பொருட்கள் வைக்கப்பட்டன. இதன்மூலம் விவசாயம் செழிக்கும், பொருளாதார மந்தநிலை நீங்கும் என்று பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

தீராத நோய்கள் தீரும்
சிவபெருமான் மேரு மலையை வில்லாக வளைத்து அசுரர்களை அழிக்க முயன்றபோது அதிலிருந்து விழுந்த சிறுதண்டே சிவன் மலை எனப்படுகிறது. ஆஞ்சநேயர் இந்த கோவில் வந்து முருககடவுளை வணங்கி சென்றது மிகவும் சிறப்பானது. தீராத நோய்களை தீர்க்கும் ஸ்தலமாக இது விளங்குகிறது.

சித்தர்கள் தலம்
சித்தர்களில் ஒருவரான சிவவாக்கியர் இங்கு தவம் செய்துள்ளார். இவர் இங்குள்ள முருகப்பெருமானை தரிசனம் செய்து விட்டு இங்குள்ள சுரங்கப்பாதை வழியாக பழனி சென்றார் என கூறப்படுகிறது. முசுகுந்தன் என்ற அரசன் தீராத நோயால் அவதிப்பட்டார். இதற்கு பல மருந்துகள் உட்கொண்டும் பலன் கிடைக்கவில்லை. அதனால் கௌதமகரிஷி முனிவரிடம் சென்ற முசுகுந்தன், தன் உடல் உபாதையை தீர்க்கும்படி வேண்டினார். சிவன்மலை முருகனை வணங்கினால் உன் வியாதி நீங்கும் என்றார் கௌதமகரிஷி. முனிவர் கூறியது போல் முசுகுந்தன் சிவன்மலை முருகனை தரிசித்து பின் முசுகுந்தனை வதைத்த நோய் விலகியதாக தல புராணம் தெரிவிக்கிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications