சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வில் அம்பு வைத்து பூஜை - கொரோனா முடிவுக்கு வருமா
சிவன்மலை ஆண்டவர் கோவில் உத்தரவுப் பெட்டியில் புதிதாக வில் அம்பு வைத்து பூஜை செய்ய பக்தரின் கனவில் உத்தரவு வந்துள்ளது.
திருப்பூர்: காங்கேயத்தை அடுத்த சிவன்மலை ஆண்டவர் கோவில் உத்தரவுப் பெட்டியில் வில் - அம்பு வைத்து பூஜை செய்து வழிபட ஆண்டவன் உத்தரவிட்டுள்ளார். பக்தர் கனவில் இந்த உத்தரவு வந்ததை அடுத்து தற்போது உத்தரவுப் பெட்டியில் வில் அம்பு வைத்து பூஜை செய்யப்படுகிறது.
சிவபெருமான் மேரு மலையை வில்லாக வளைத்து அசுரர்களை அழிக்க முயன்றபோது அதிலிருந்து விழுந்த சிறுதண்டே சிவன் மலை எனப்படுகிறது. ஆஞ்சநேயர் இந்த கோவில் வந்து முருககடவுளை வணங்கி சென்றது மிகவும் சிறப்பானது. தீராத நோய்களை தீர்க்கும் ஸ்தலமாக இது விளங்குகிறது.
சித்தர்களில் ஒருவரான சிவவாக்கியர் இங்கு தவம் செய்துள்ளார். இவர் இங்குள்ள முருகப்பெருமானை தரிசனம் செய்து விட்டு இங்குள்ள சுரங்கப்பாதை வழியாக பழனி சென்றார் என கூறப்படுகிறது. முசுகுந்தன் என்ற அரசன் தீராத நோயால் அவதிப்பட்டார். இதற்கு பல மருந்துகள் உட்கொண்டும் பலன் கிடைக்கவில்லை. அதனால் கௌதமகரிஷி முனிவரிடம் சென்ற முசுகுந்தன், தன் உடல் உபாதையை தீர்க்கும்படி வேண்டினார். சிவன்மலை முருகனை வணங்கினால் உன் வியாதி நீங்கும் என்றார் கௌதமகரிஷி. முனிவர் கூறியது போல் முசுகுந்தன் சிவன்மலை முருகனை தரிசித்து பின் முசுகுந்தனை வதைத்த நோய் விலகியதாக தல புராணம் தெரிவிக்கிறது.

உத்தரவு கொடுக்கும் சாமி
சிவன்மலை ஆண்டவன் கோவிலில் தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில், 'ஆண்டவன் உத்தரவு' என்ற பெயரில் ஏதேனும் ஒரு பொருளை கண்ணாடிப்பெட்டிக்குள் வைத்து பூஜை செய்வது வழக்கம். இந்த உத்தரவு பெட்டியில் சில குறிப்பிட்ட பொருட்களை வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று பக்தர்கள் சிலருக்கு கனவில் தோன்றும். தனக்கு வந்த கனவு பற்றி கோவிலுக்கு வந்து நிர்வாகிகளிடம் பக்தர் கூறினால், சுவாமியிடம் பூ கேட்டு, அதில் வெள்ளைப் பூ வந்தால் பக்தர் சொன்னது உண்மை என்பது நிச்சயமாகும். இதனையடுத்தே பக்தர் சொன்னதை உத்தரவுப் பெட்டியில் வைத்து பூஜை செய்வார்கள்.

சுனாமி முதல் சிறை வரை
சிவன்மலை ஆண்டவன் உத்தரவுபெட்டியில் பக்தர்களின் கனவில் வந்ததாக கூறி ஏர் கலப்பை, தங்கம், ரூபாய் நோட்டு, துப்பாக்கி, மண், ஆற்று மணல், தண்ணீர், உப்பு, பூமாலை, துளசி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. ஆண்டவர் உத்தரவு உடன் கண்ணாடிப்பெட்டிக்குள் வைக்கப்படும் பொருள் சமுதாயத்தில் முக்கியத்துவம் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தண்ணீர் வைத்து பூஜை செய்யப்பட்ட காலத்தில் சுனாமி வந்து பாதிப்பு ஏற்பட்டது.

இரும்பு சங்கிலி
கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரும்பு சங்கிலி உத்தரவானது. இதையடுத்து ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இரும்பு சங்கலி வைத்து பூஜை செய்யப்பட்டது. இரும்பு சங்கலி வைத்து பூஜை செய்யப்படுவதால், சட்டத்தை மீறுபவருக்கும், குற்றம் செய்பவர்களுக்கு காப்பு கிடைப்பது நிச்சயம் என்று கூறப்பட்டது. சசிகலாவும் அவரது உறவினர்களும் சிறைக்கு போனார்கள் என்று பேசப்பட்டது.

அகத்தியர் ஜாதகம்
கடந்த ஜூலை மாதம் கோவையை சேர்ந்த பக்தர்கனவில் வந்த, பஞ்சாங்கம், ஆதார்கார்டு, மணி, 10 ரூபாய் நாணயங்கள் வைத்து பூஜை செய்யப்பட்டது. இதனிடையே திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த எஸ். கோகுல்ராஜா என்ற பக்தரின் கனவில் தோன்றியதாக அகத்தியர் ஜாதகம், இரண்டு பழைய 500, ரூபாய் நோட்டு மற்றும் 5, ரூபாய்,2, ரூபாய், 1 ரூபாய் நாணயம் என மொத்தம் 1008,ரூபாய் மற்றும் வெள்ளை சார்ட், பச்சை வேட்டி, துண்டு, எலுமிச்சை பழம், தேங்காய் வைத்து பூஜை செய்யப்பட்டது.

வில் அம்பு
இந்த நிலையில் புதிதாக வில் அம்பு வைத்து பூஜை செய்ய உத்தரவு வந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒய்எம்ஆர் பட்டி பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ரேணுகா தேவி தெரிவித்து வில் -அம்பு ஆகியவற்றை கோயிலுக்கு அளித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரேணுகா தேவி, சிவன்மலை கோயிலுக்கு வந்து, பூப்போட்டு பார்த்ததில் ஆண்டவன் உத்தரவு கிடைத்தது. நான் வாங்கி வந்த வில்-அம்பு கண்ணாடி பேழைக்குள் வைக்கப்பட்டது. இதன்மூலமாக, உலகைவிட்டு கரோனா பெருந்தொற்று அகன்று, மக்கள் நலமுடன் வாழ ஆண்டவன் துணைபுரிவார் என்று தெரிவித்துள்ளார். கொரோனா மூன்றாவது அலை பற்றிய அச்சம் எழுந்துள்ள நிலையில் கொரோனா விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று பக்தர்கள் வேண்டிக்கொண்டுள்ளனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications