அன்னிக்கு "ஒத்து ஒத்து Drugs Free Hyderabad"னு பாடினாரே ராகுல்.. இன்னிக்கு ரேவ் பார்ட்டியில் கைது
ஹைதராபாத்: போதைக்கு எதிராக பாடல் பாடிய பாடகர் ஒருவர் ஹைதராபாத்தில் நடந்த ரேவ் பார்ட்டியில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் போதை விருந்து நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் நேற்று அதிகாலை 3 மணிக்கு சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினர்.
அங்கு கோகைன் உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த ரேவ் பார்ட்டியில் கலந்து கொண்ட 144 பேரை போலீஸார் கைது செய்தனர்.

போதை பார்ட்டி
இவ்வாறு போதை பார்ட்டியில் கைது செய்யப்பட்டவர்களில் நடிகை நிஹாரிகாவும் அடங்குவார். இவர் நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகள். அது போல் பின்னணி பாடகர் ராகுல் சிப்லிகுன்ச், முன்னாள் டிஜிபியின் மகள், தெலுங்கு தேசம் கட்சியின் எம்பி மகன் உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

பாடகர் ராகுல்
இந்த பார்ட்டியில் 35 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ராகுல் சிப்லிகுன்ச்தான் அனைவராலும் கவனிக்கப்படுகிறார். ரேப் பாடகராகவும் பிக்பாஸ் வின்னராகவும் அறியப்படும் ராகுலை கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி நடத்தப்பட்ட போதை மருந்துகள் இல்லா ஹைதராபாத் எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு போலீஸாரால் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டவர்.
பாடல் வரிகள் என்ன
அந்த பாடலின் வரிகள் என்னவென்றால்
Dont get into a trance. Say no to drugs. There is lot of life my dear.
dont lose your prestige. Dont go toward drugs. You cannot leave once u get addicted.
Drugs dont give a taste to life, it ruins your life totally.
Listen to Hyderabad police and dont's do drugs.
என்பது தெலுங்கில் பாடப்பட்ட பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பாகும்.

போலீஸார் அதிர்ச்சி
இது போல் போதை பொருள்களின் பயன்பாடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு பாடல் பாடிய பாடகர் ராகுலை ரேவ் பார்ட்டியில் அதுவும் ஹைதராபாத் போலீஸாரே கைது செய்வார்கள் என யாரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், அவர் போதை பொருட்களை வைத்திருந்தாரா, இல்லை போதை பொருட்களை உட்கொண்டிருந்தாரா என்பது போலீஸார் விசாரணையில்தான் தெரியவரும். தலைவிதியை யாரால் மாற்ற முடியும் என்பார்களே அது இதுதான் போலும்!
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications