பணப்பட்டுவாடா குறித்து தேர்தல் ஆணையத்துக்கு விரிவான அறிக்கை... ரத்தாகிறது ஆர்கே நகர் இடைத்தேர்தல்?
ஆர்.கே. நகரில் ஓட்டுக்கு பணப்பட்டுவாடா நடைபெற்றது குறித்து வருமான வரித்துறையினர் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு விரிவான அறிக்கையை ஆதாரங்களுடன் வருமான வரித்துறை அதிகாரிகள் சமர்ப்பித்துள்ளனர். இதனால் ஆர்கே
சென்னை: ஆர்.கே.நகரில் ஓட்டுக்கு பணம் தந்தது குறித்து தலைமை தேர்தல் ஆணையத்துக்கு வருமான வரித்துறையினர் விரிவான அறிக்கை அனுப்பியுள்ளனர். இதனால் ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
ஆர்.கே.நகருக்கு வரும் புதன்கிழமை தேர்தல் நடைபெறவுள்ளது. பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும்படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் ஆர்.கே.நகர் சிக்கியுள்ளது.
இந்நிலையில் இதில் அதிமுக (அம்மா) அணியின் டிடிவி தினகரன் தரப்பு வாக்காளர்களுக்கு பணம் தந்ததாக ஆதாரத்துடன் புகார்கள் எழுந்தன. பணப் பட்டுவாடாவை தடுக்க வேறு எங்கும் இல்லாத அளவுக்கு மைக்ரோ அப்சர்வர்கள் நியமிக்கப்பட்டு சந்து, பொந்துகளில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

ஓட்டுக்கு ரூ4,000 முதல் ரூ7,000
நீயா? நானா? போல தினகரனுக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் அதிகார போட்டி நிலவி வருகிறது. இந்த தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதில் டிடிவி தினகரன் தரப்பினர் வாக்காளர்களுக்கு லஞ்சமாக கொடுப்பதற்காக வீட்டு உபயோக பொருள்கள், குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு உள்ளிட்ட பரிசு பொருட்களை வாங்கி திருமண மண்டபங்களில் குவித்துள்ளனர். மேலும் ஓட்டுக்கு ரூ.4000 முதல் ரூ.7000 வரை தந்துள்ளனர்.

தேர்தல் ரத்து கோரிக்கை
இதனால் ஆர்கே நகர் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என பிற கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளன.

அதிரடி ஐடி ரெய்டு
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் 35 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் பல்கலை.துணை வேந்தர் கீதா லட்சுமி உள்ளிட்டோரின் வீடுகள், அவர்களது உறவினர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. அப்போது வாக்காளர்களுக்கு ரூ.85 கோடி பணம் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கின.

தேர்தல் ரத்தாகிறது?
இதுதொடர்பாக ஆர்.கே.நகர் சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ராவுக்கு வருமான வரித் துறையினர் அறிக்கையை சமர்ப்பித்தனர். இந்த அறிக்கையை தேர்தல் ஆணையத்தின் பார்வைக்கு கொண்டு செல்வற்காக அவர் டெல்லி புறப்பட்டார். அவரது அறிக்கையின் பேரில் தேர்தலை ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தல் ரத்து செய்யப்படலாம் என தெரிகிறது.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications