எங்க வீட்டு பக்கம் வருவியா.. சாவு வீட்டுக்கு போய்வந்தவரை சாகடித்த கோவை தம்பதி.. அதிர்ச்சி சம்பவம்
கோவை: கோவை அருகே இறப்புக்கு சென்று திருப்பியவரை பக்கத்து வீட்டு தம்பதி கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம், அரசூர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவர், தனது உறவினர் ஒருவரின் இறப்புக்கு சென்று வீடு திரும்பி இருக்கிறார்.

இவர்களது பக்கத்து வீட்டில் கோவிந்தராஜ் மற்றும் அவரது மனைவி தாமரை தம்பதி வசித்து வருகிறார். ரங்கசாமியை இறப்பு வீட்டிற்கு சென்று விட்டு தங்கள் வீட்டு வழியாக செல்லக் கூடாது என வழிமறித்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
ரங்கசாமிக்கும், கோவிந்தராஜ் மற்றும் தாமரை தம்பதிக்கும் ஒரு கட்டத்தில் வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. ஆத்திரத்தில் அருகில் இருந்த கட்டையை எடுத்து கோவிந்தராஜ் மற்றும் தாமரை தம்பதி, ரங்கசாமியை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே சுரண்டு மயங்கி விழுந்தார்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து பார்த்த போது, ரங்கசாமி உயிரிழந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து ரங்கசாமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், கோவிந்தராஜ் மற்றும் அவரது மனைவி தாமரையை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இறப்புக்கு சென்று திருப்பியவரை பக்கத்து வீட்டு தம்பதி கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் கோவை அரசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications