Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விரைவில்.. மொத்தமாக படைகளை வாபஸ் வாங்குகிறோம்.. லடாக்கில் பின்வாங்கும் சீனா.. இந்தியா அதிரடி!

Subscribe to Oneindia Tamil

லடாக்: லடாக் எல்லையில் இருந்து விரைவில் மொத்தமாக படைகளை வாபஸ் பெறுவோம் என்று சீனா இந்தியாவிற்கு வாக்களித்து உள்ளது. இரண்டு நாட்டு வெளியுறவுத்துறை சார்பாக நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

Recommended Video

    China standoff with India: பின்வாங்கும் சீனா..

    லடாக் எல்லை பிரச்சனை ஏறத்தாழ முடியும் தருவாயை எட்டி இருக்கிறது. அங்கு கடந்த மே மாதம் 5ம் தேதி சீனா அத்துமீறியது. இதை தொடர்ந்து அடிக்கடி எல்லையில் இரண்டு நாட்டுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் கல்வான் அருகே நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.

    இந்த நிலையில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி இடையே நடந்து பேச்சுவார்த்தை மூலம் அமைதி உடன்படிக்கை செய்யப்பட்டது. ஜூலை 5ம் தேதி எல்லையில் இருந்து படைகளை வாபஸ் வாங்க சீனா ஒப்புக்கொண்டது .

    வாபஸ் வாங்கியது

    வாபஸ் வாங்கியது

    லடாக்கில் மூன்று எல்லை பகுதிகளில் இருந்து சீனா தனது படைகளை வாபஸ் வாங்க தொடங்கி உள்ளது. அதன்படி டெப்சாங், கல்வான், ஹாட்ஸ்பிரிங்ஸ் ஆகிய பகுதிகளில் இருந்தும் சீனா படைகளை வாபஸ் வாங்கி உள்ளது. இங்கு இருந்து மொத்தம் 2 கிமீ பகுதிக்கு சீனா தனது படைகளை வாபஸ் வாங்கி இருக்கிறது. ஆனால் பாங்காங் திசோவின் கட்டுப்பாட்டு பகுதி 4ல் இருந்து சீனா இன்னும் படைகளை வாபஸ் வாங்கவில்லை.

    எங்கு படைகள்

    எங்கு படைகள்

    மேலும் கோக்ரா பகுதியில் இருக்கும் ரோந்து புள்ளி 17ஏ- ல் இருந்தும் சீனா படைகளை வாபஸ் வாங்கவில்லை. இங்கு மொத்தமாக 40 ஆயிரம் சீன வீரர்கள் வரை இன்னமும் இருக்கிறார்கள். அங்கு படைகளை வாபஸ் வாங்க சீனா மறுத்து வருகிறது. பெரும்பாலும் குளிர் காலத்தை மனதில் வைத்து எல்லையில் அத்துமீறலாம் என்று சீனா ஏதாவது திட்டம் போட வாய்ப்புள்ளது. இதனால் இந்தியா அங்கே கவனமாக இருக்கிறது.

    மீட்டிங் நடந்தது

    மீட்டிங் நடந்தது

    இந்த நிலையில்தான் எல்லையில் லடாக் எல்லையில் இருந்து விரைவில் மொத்தமாக படைகளை வாபஸ் பெறுவோம் சீனா இந்தியாவிற்கு வாக்களித்து உள்ளது. இரண்டு நாட்டு வெளியுறவுத்துறை சார்பாக நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. நேற்று Working Mechanism for Consultation & Coordination எனப்படும் WMCC குழு சார்பாக இந்த மீட்டிங் நடந்தது.

    யார் கலந்து கொண்டார்

    யார் கலந்து கொண்டார்

    இந்த மீட்டிங்கில் இந்தியா சார்பாக நவீன் ஸ்ரீவஸ்தவா கலந்து கொண்டர் .அதேபோல் சீனா சார்பாக ஹாங் லியாங் கலந்து கொண்டார். இந்த மீட்டிங் நேற்று இரவு வரை நடந்தது. மீட்டிங்கின் முடிவில் படைகளை வாபஸ் வாங்குவதாக சீனா அறிவித்தது. எங்கு எல்லாம் படைகள் வாபஸ் பெறப்படவில்லையோ அங்கு எல்லாமே படைகளை வாபஸ் வாங்க முடிவு செய்துள்ளனர்.

    துரிதம்

    துரிதம்

    அதேபோல் துரிதமாக எல்லையில் படைகளை வாபஸ் வாங்கவும். அஜித் தோவல் உடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் எடுக்கப்பட்ட முடிவுகளை மதிக்கவும் சீனா ஒப்புக்கொண்டு இருக்கிறது. வேகமாக எல்லையில் படைகள் பின்வாங்கும். இந்தியாவும் இன்னொரு பக்கம் குறிப்பிட்ட தொலைவுக்கு எல்லையில் பின்வாங்கும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் எல்லையில் விரைவில் முழு அமைதி திரும்பும் என்கிறார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+