Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயலலிதாவிடம் கருணாநிதிக்கு பிடித்ததே இதுதான்! ஈபிஎஸ்ஸிடம் அது இல்லவே இல்லை.. ஆ ராசா சொன்னத பாருங்க

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக எம்பி ஆ ராசா பிரசாரம் செய்தார்.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக இன்று திமுக எம்பி ஆ ராசா பிரசாரம் செய்தார். இந்த வேளையில் அதிமுகவில் ஜெயலலிதா இருந்தாலும் கூட அவரது ஒரு குணம் மறைந்த முதல்வர் கருணாநிதிக்கு பிடிக்கும். ஆனால் அந்த குணம் எடப்பாடி பழனிச்சாமியிடம் இல்லை பழையதை நினைவுக்கூறி ஆ ராசா கடுமையாக விமர்சனம் செய்தார்.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா காலமானதால் வரும் 27 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் சார்பில் மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக களமிறங்கி உள்ளார்.

அதிமுக சார்பில் கேஎஸ் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா உள்ளிட்ட 77 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

 திமுக மும்முரம்

திமுக மும்முரம்

இந்த தேர்தலில் காங்கிரஸ், அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. மேலும் 2021 சட்டசபை தேர்தலுக்கு பிறகு நடக்கும் முதல் இடைத்தேர்தல் இதுவாகும். இதனால் 2 ஆண்டு திமுக கூட்டணி ஆட்சிக்கு மக்கள் கொடுக்கும் மதிப்பெண் இதுவாக இருக்கும். இதனால் ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி பெற வைக்க காங்கிரஸை காட்டிலும் திமுக மும்முரமாக செயல்பட்டு வருகிறது. விரைவில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஈரோடு கிழக்கில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.

 ஆ ராசா பிரசாரம்

ஆ ராசா பிரசாரம்

இந்நிலையில் தான் ஈரோடு பெரியார் நகரில் திமுக எம்பி ஆ ராசா இன்று காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து வாக்கு சேகரித்தார். இந்த வேளையில் ஆ ராசா, எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சனம் செய்தார். அதிமுகவை கண்டு முதல்வர் ஸ்டாலின், திமுக பயப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி பேசிய நிலையில் அதற்கு ஆ ராசா பதிலடி கொடுத்த பேசினார். இந்த வேளையில் ஆ ராசா பேசியதாவது:

 மண்டியிடாத ஜெயலலிதா

மண்டியிடாத ஜெயலலிதா

உங்களுக்கும் (எடப்பாடி பழனிச்சாமி), ஓ பன்னீர் செல்வத்துக்கும் இடையே சண்டை இருந்தால் பாஜக தலைவர் அண்ணாமலை வந்து தான் பைசல் செய்கிறார். வெட்கமா இல்லை. எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி தான் அதிமுக. சரியோ, தவறோ எங்களுக்கு ஆயிரம் கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால் மத்திய அரசு முன்பு ஜெயலலிதா எப்போதும் மண்டியிட்டது கிடையாது. இதனால் தான் ஜெயலலிதாவிடம் பிடித்தது என்ன? என கருணாநிதியிடம் கேட்டபோது அவரது துணிச்சல் என பதிலளித்தார்.

 கொஞ்சமாவது துணிச்சல் இருக்கா?

கொஞ்சமாவது துணிச்சல் இருக்கா?

அம்மா அம்மா என ஆயிரம் முறை சொல்லும் நீங்கள் அவரிடம் இருந்த சிறிய அளவிலான துணிச்சலாவது உங்களிடம் உள்ளதா?. நான் சாதாரண கிராமத்தில் இருந்து வந்தேன். அரசு பள்ளியில் தான் படித்தேன். அரசு கல்லூரி தான் சென்று சட்டம் பயின்றேன். 12 ஆண்டுகள் அமைச்சராக இருந்துள்ளேன். 40 நாடுகளுக்கு சென்று வந்துள்ளேன். நான் பிரதமர் மோடியை எதிர்த்து நிற்கிறேன். ஆனால் 56 இன்ச் மோடிக்கு பயப்படும் உங்களை கண்டு நாங்கள் பயப்படுகிறோம் என பேசுகிறீர்கள்.

 பித்தலாட்டம் என விமர்சனம்

பித்தலாட்டம் என விமர்சனம்

நாடாளுமன்றத்தில் அதானி பிரச்சனை வந்தது. இதுபற்றி ராகுல் காந்தி உள்பட நாங்கள் அனைவரும் பேசினோம். அப்போது பிரதமர் மோடி, ‛‛என்னை சந்தேகிக்கிறீர்கள். 140 கோடி இந்திய மக்களின் நம்பிக்கையை பெற்று நான் பிரதமராக உள்ளேன். என்னை அசைக்க முடியாது'' என்றார். இதற்கு மறுநாள் நான் பேசியபோது 140 கோடி மக்களின் தலைவர் என பேச பிரதமர் மோடிக்கு உரிமை இல்லை. 310 எம்பிக்கள் அவர்களுக்கு உள்ள நிலையில் 220 எம்பிக்கள் எதிர்க்கட்சியில் உள்ளோம். எங்களை நம்பி 80 கோடி பேர் உள்ளனர். மோடி வேண்டாம் என அவர்கள் எங்களுக்கு வாக்களித்துள்னளர். இதனால் 140 கோடி பேரின் தலைவர் என பேசுவது பித்தலாட்டம் என்றேன். இது ரெக்கார்ட்டில் உள்ளது.

 மோடியை எதிர்க்கிறேன்

மோடியை எதிர்க்கிறேன்

கிராமத்தில் பிறந்து கருணாநிதியால் வளர்க்கப்பட்டு பெரியார் வழியில் வந்த கருப்ப சிவப்பு வேஷ்டி தொண்டன் நான் மோடியை எதிர்க்கிறேன். ஆனால் எங்களுக்கு எடப்பாடி பழனிச்சாமியை பார்த்தால் பயமாமாம். ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி குற்றச்சாட்டை என் மீது சுமர்த்தினர். தனியாக வாதாடி நான் வெளியே வந்தேன். ஆனால் இப்போது ரூ.10 லட்சம் கோடியை காணோம். இது அதானியால் நடந்துள்ளது. இதற்கு பதில் சொல்ல கோரினால் ஆளும் கட்சியினர் மோடி மோடி என கூறுகின்றனர்'' என விமர்சனம் செய்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+