ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா நேரலையில் எங்கு, எப்பொழுது பார்க்கலாம்? ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!
சென்னை: நடிகர் விஜய் அரசியல் பயணத்திற்கு முன்பாக நடிக்கும் கடைசித் திரைப்படமாக கூறப்படும் 'ஜனநாயகன்' படம், வெளியீட்டுக்கு முன்பே கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், விஜயின் திரையுலக வாழ்க்கையில் ஒரு முக்கியமான முடிவுக்குறியாக பார்க்கப்படுவதால், ரசிகர்கள் மத்தியில் செண்டிமெண்டாகவும் கவனத்தை பெற்றுள்ளது.
இந்த நிலையில், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 'தளபதி திருவிழா' என்ற பெயரில் நடைபெறவுள்ள இந்த பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் திறந்தவெளி மைதானத்தில் நடத்தப்படுகிறது. வெளிநாட்டில் நடைபெறும் இந்த விழாவை இந்திய ரசிகர்கள் எப்போது, எங்கு பார்க்கலாம் என்ற கேள்வி தற்போது அதிகமாக எழுந்துள்ளது.

இந்தியாவில் ஒளிபரப்பு
மலேசியாவில் நடைபெறும் இந்த இசை வெளியீட்டு விழா, இந்திய நேரப்படி சனிக்கிழமை (டிசம்பர் 27) மாலை 3:30 மணிக்கு தொடங்குகிறது. சுமார் 5 முதல் 6 மணி நேரம் வரை நடைபெறும் இந்த நிகழ்வில், 80,000 முதல் 1 லட்சம் ரசிகர்கள் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் ஏற்கனவே மலேசியாவை சென்றடைந்துள்ளனர்.
விழாவிற்கு நேரில் செல்ல முடியாத இந்திய ரசிகர்களுக்காக, படக்குழு மற்றும் ஒளிபரப்பு நிறுவனம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி, 'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டு, 2026 ஜனவரி 4ஆம் தேதி இந்தியாவில் ஒளிபரப்பாக உள்ளது.
எந்த சேனலில், எந்த நேரத்தில்?
இந்த விழா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜனவரி 4ஆம் தேதி ஒளிபரப்பப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில், ஜீ தமிழ் ஓடிடி தளத்திலும் இந்த நிகழ்வு ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இந்திய நேரப்படி மாலை 4:30 மணி முதல் இரவு 10:30 மணி வரை ரசிகர்கள் இந்த இசை வெளியீட்டு விழாவை காணலாம்.
இதன் மூலம், மலேசியாவில் நடைபெறும் இந்த பிரம்மாண்ட நிகழ்வை இந்தியா முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் ஒரே நேரத்தில் பார்த்து அனுபவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
எச்.வினோத் இயக்கத்தில், அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி, மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படம் 2026 ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாக உள்ளது.
விஜயின் 69வது மற்றும் இறுதித் திரைப்படம் என்பதால், 'ஜனநாயகன்' உலகளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதற்கு முன்னோட்டமாக, இசை வெளியீட்டு விழா இந்தியாவில் ஒளிபரப்பாகும் நாள், விஜய் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்ட நாளாகவே அமையப்போகிறது.
-
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா? -
கொங்கு மண்டல பிரச்சாரத்தின் போது செங்கோட்டையன் வீட்டில் தங்கும் விஜய்.. புலம்பும் ஆதவ் அர்ஜுனா! -
10 சீட்டுகளை வெல்லும் தவெக.. 23.9 சதவிகித வாக்குகளை கைப்பற்றும் விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு -
TVK Vijay in Trichy LIVE: மகளிருக்கு மாதம் ரூ.2,500.. சொன்ன மாதிரி கொடுப்போம்.. விஜய் பேச்சு -
விஜய்க்கு பாதுகாப்பு கொடுங்க.. மத்திய அரசுக்கு பதில் மணிப்பூர் ஆளுநருக்கு கடிதம் எழுதிய தவெக! -
விஜய்க்கு அதிகாலையே சிம்ம சொப்பனமாக வந்த ஸ்டாலின்.. திருச்சியில் 'டீ' பிரேக் பாலிடிக்ஸ்.. செம மூவ்! -
’ஆங்கிலோ இந்தியர்கள்’ நண்பரான விஜய் - பெரம்பூர் தொகுதி ஸ்பெஷல் தெரியுமா? -
சஞ்சய் 4 வருஷமாக படும்பாடு.. விஜய் நிஜ ஹீரோ இல்ல, தந்தையாக தோற்று விட்டார்! பிரபலம் ஆதங்கம் -
Jana Nayagan: ஜனநாயகன் பட சிக்கல் தீர்ந்தது? விரைவில் படம் ரிலீஸ் ஆகப்போகுதா? கொண்டாட தயாராகும் விஜய் ரசிகர்கள்! -
விஜய் பேச்சை கேட்க ஆள் வரல! செல்ஃபி எடுக்க குவிந்த ரசிகர்கள்! இதுதான் பரப்புரையா! -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான் -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications