கருணாஸ் மகன் “கென்”ஆல் தான் மீண்டும் பிறந்தேன்! சாப்பாட்டுக்கு பட்ட கஷ்டம்... நடிகை நளினி உருக்கம்
சென்னை: தமிழ் சினிமாவில் பல வருடங்களாக தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கி வைத்திருக்கும் நடிகர் கருணாஸ். நகைச்சுவை நடிகராக ஆரம்பித்து பின்னர் கதாபாத்திர நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பல முகங்களில் ரசிகர்களுக்கு தெரிந்தவர். இப்போது அவரின் பாதையைப் போலவே அவரது மகனும் சினிமாவில் தனக்கென ஒரு பாதையை உருவாக்க முயற்சி செய்து வருகிறார்.
கருணாஸின் மகன் கென் கருணாஸ் குழந்தை நட்சத்திரமாக இருந்த காலத்திலிருந்தே பல படங்களில் நடித்தவர். ஆனால் இந்த முறை அவர் இன்னும் பெரிய பொறுப்பை ஏற்று இருக்கிறார். கதாநாயகனாக நடித்ததுடன், தானே இயக்கியிருக்கும் புதிய படம் தான் யூத். இந்த படம் தற்போது வெளியீட்டை எதிர்பார்த்து ரசிகர்களிடையே நல்ல கவனத்தை பெற்று வருகிறது.

நளினியின் உணர்ச்சிமிகு பேச்சு
இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த நடிகை நளினி பேசும்போது கூறிய வார்த்தைகள்தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நளினி பேசும்போது, "நான் பல படங்களில் நடித்திருக்கிறேன். ஒரு காலத்தில் சினிமாவில் தொடர்ந்து நடித்தேன். ஆனால் சில வருடங்களாக படங்களில் நடிப்பதை குறைத்துவிட்டேன். இப்போது பெரும்பாலும் சீரியல்களில் தான் நடித்து வருகிறேன். அதுவே போதும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். அந்த நேரத்தில்தான் கருணாஸ் மகனிடமிருந்து எனக்கு ஒரு போன் வந்தது," என்று கூறினார்.
அவர் மேலும் சொன்னது பலரையும் உருக்க வைத்தது. "அந்த போன் தான் எனக்கு மறுபிறவி மாதிரி. அந்த அளவுக்கு இந்த படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் நான் நடித்த அனுபவம் ரொம்ப ஸ்பெஷல். நான் இதற்கு முன்பு பல படங்களிலும், சீரியல்களிலும் நடித்திருக்கிறேன். ஆனால் இந்த படத்தில் ஒவ்வொரு சீனிலும் என்னை இன்னும் சிறப்பாக நடிக்க வைக்க அவர் முயற்சி செய்தது எனக்கு ரொம்ப சந்தோஷம் கொடுத்தது," என்று நளினி உணர்ச்சியுடன் கூறினார்.
சூட்டிங் அனுபவம்
ஷூட்டிங் அனுபவத்தைப் பற்றி பேசும்போது அவர் சிரிப்போடு ஒரு சம்பவத்தையும் பகிர்ந்தார். "எந்த டேக் எடுத்தாலும் 'அம்மா இன்னொரு டேக்... இன்னும் கொஞ்சம் நேரம்...' என்று சொல்லி கெஞ்சுவார். அவ்வளவு அன்பாக பேசுவார். ஒரு பையன் மாதிரி தான். நம்மை பெரிய நடிகையா மதித்து பேசுவார். அப்படியே எப்படியோ நம்மிடம் இருந்து நல்ல நடிப்பை வாங்கி விடுவார்," என்று நளினி கூறினார்.
ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் சிரமம் இருந்ததாகவும் அவர் நகைச்சுவையாக சொன்னார். "சாப்பாடு தான் கஷ்டம். 'தம்பி பசிக்குது... சாப்பிட போறேன்' என்று சொன்னாலும், 'அம்மா இந்த ஒரு டேக் மட்டும்' என்று சொல்லி வேலை வாங்கி விடுவார். ஆனா இப்போ அந்த ஷூட்டிங் முடிந்ததை நினைச்சா தான் வருத்தமா இருக்கு. அந்த அளவுக்கு அந்த நாட்கள் ரொம்ப சந்தோஷமா இருந்தது," என்று அவர் கூறினார்.
வில்லி வேடம் கிடைக்கும் என்று நினைத்தேன்
இந்த படத்தில் தான் நடித்த கதாபாத்திரம் குறித்து பேசும்போது நளினி இன்னொரு விஷயத்தையும் பகிர்ந்தார். "சினிமாவில் மீண்டும் வாய்ப்பு கிடைக்கிறது என்றால் பெரும்பாலும் வில்லி கதாபாத்திரம்தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இந்த படத்தில் நான் இதுவரைக்கும் நடித்ததே இல்லாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அதாவது ஒரு காலேஜ் பிரின்சிபல் ஆக நடிக்கிறேன். அந்த கேரக்டர் தான் கதையில் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது ரொம்ப மகிழ்ச்சி," என்று அவர் தெரிவித்தார்.
கருணாஸின் மகனை பாராட்டிய நளினி
நளினி தனது பேச்சின் இறுதியில் கருணாஸையும் அவரது மகனையும் பாராட்டினார். "கருணாஸ் எப்படி உழைத்து இந்த நிலைக்கு வந்தாரோ அதே மாதிரி அவருடைய பையனும் ரொம்ப உழைக்கிறார். இன்னும் பெரிய உயரம் அடைவார். அதற்கான திறமையும் வேகமும் அவரிடம் இருக்கிறது," என்று அவர் பாராட்டினார்.
முட்ட கலக்கி பாடல் வைரல்
இந்த படம் வெளியாகும் முன்பே ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கி விட்டது. குறிப்பாக படத்தில் இடம்பெற்றுள்ள "முட்ட கலக்கி" பாடல் தற்போது சமூக வலைதளங்களில் செம்ம வைரலாகி வருகிறது. முட்டை கலக்கி என்ற இந்த பாடல் எந்த பக்கம் திரும்பினாலும் கேட்கப்படும் பாடலாக மாறி இருக்கிறது.
நடிகர்கள், நடிகைகள், காலேஜ் மாணவர்கள், இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் என பலரும் இந்த பாடலுக்கு ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து பதிவிட்டு வருகின்றனர். அதனால் இந்த பாடல் இளைஞர்களிடையே ஒரு பெரிய ட்ரெண்டாக மாறி இருக்கிறது.
தலைமுறைகள் இணைந்த படம்
இந்த படத்தில் பல தலைமுறையை சேர்ந்த கலைஞர்கள் இணைந்து பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பக்கம் அனுபவம் வாய்ந்த நடிகைகள், மறுபக்கம் புதிய தலைமுறை நடிகர்கள் என கலந்து உருவாகியிருக்கும் இந்த படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.
ஒரு காலத்தில் கருணாஸ் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த காலம் இருந்தது. இன்று அவருடைய மகன் தான் படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்து, முன்னணி நடிகைகளை நடிக்க வைத்து படம் எடுத்து வருவது பலரையும் பெருமைப்பட வைத்திருக்கிறது.
அதனால் தான் "கருணாஸின் பயணம் போலவே அவருடைய மகனின் பயணமும் வெற்றி பெற வேண்டும்" என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த காரணங்களால் யூத் படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்படும் படங்களில் ஒன்றாக மாறி இருக்கிறது.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications